Tamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Use of Ashwagandha: மருத்துவ பயன் கொண்ட அமுக்கரா!! எப்படி சாப்பிடலாம்?

Use of Ashwagandha: மருத்துவ பயன் கொண்ட அமுக்கரா!! எப்படி சாப்பிடலாம்?

அமுக்கரா இது ஒரு முழுத்தாவர வகையை சேர்ந்தது. இது வெப்பத் தன்மையும், காரச் சுவையும் கொண்டது.

Use of Medicinal Plants

Use of Ashwagandha:

இம் மூலிகை மலைப்பகுதிகளில் புதர் செடிகளாக வளருகின்றன.

இது தனி இலைகளையும், சிறிய கிளைகளையும் கொண்ட செடி. 6 அடி உயரம் வரை வளரும்.

இதன் இலைகள் சாம்பல் பச்சையுடனும், சொர சொரப்பான தோற்றத்துடனும் இருக்கும்.

அமுக்கரா தண்டும், அதன் கிளைகளும் மெல்லிய உரோமத்தால் மூடப்பட்டு சாம்பல் நிறமாகக் காணப்படும்.

இதன் பூக்கள் சிறியவை, வெளிறிய பச்சை நிறமானவை. இதன் முதிர்ந்த கனிகள் சிவப்பாக, உருண்டையாக, வழவழப்பாக இருக்கும். பழுப்பு நிறமான தோலால் மூடப்பட்டிருக்கும்.

அமுக்கரா வேறு பெயர்கள்:

அமுக்கரா கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இம் மூலிகை பயிர் செய்யபட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதற்கு அமுக்கிரி, அகவகந்தா, அகவகந்தி, ஆகிய மாற்றுப் பெயர்களும்  உண்டு. நாட்டுமருந்து கடைகளில் இதன் இலைகள், விதை, வேர், கிழங்கு  போன்றவை கிடைக்கின்றன.

“அகவகந்தா என்கிற பெயர் அமுக்கராவின் காய்ந்த வேர்களைக் குறிப்பதற்கு பெயரிடப்பட்டது”.

இத்தகைய அமைப்பைக்கொண்ட இம்மூலிகை பல்வேறு நோய்களை குணமாக்கும் மருத்துவக்குணங்களையும் கொண்டுள்ளன.

இவை உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும், வீக்கத்தைக் குறைக்கும், வாதநோயைக் கட்டுப்படுத்தும், உடலைத் தேற்றும், ஆண்மையை அதிகமாக்கும்.

அமுக்கரா கிழங்கு பயன்கள்:

நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்த  அமுக்கரா கிழங்கு 1 பங்கு எடுத்து, அதனுடன் கற்கண்டு 3 பங்கு சேர்த்து, நன்கு தூளாக்கிக் கலந்து வைத்துக் கொண்டு காலை, மாலை இரு வேளைகளில் 1 தேக்கரண்டி அளவு உட்கொண்டு, 1 டம்ளர் காய்ச்சிய பசும்பால் குடித்து வந்தால் போதும்.

உடல் அசதி, மூட்டுவலி போன்ற வலிகள் தீர நன்றாகக் காய்ந்த அமுக்கரா கிழங்கை இடித்துத்தூள் செய்து கொண்டு, அதனுடன் சம அளவு சர்க்கரை சேர்த்து, தினமும், காலை, மாலை வேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு, 200 மி.லி. காய்ச்சிய பாலுடன் கலந்து கொடுத்தால் நான்கு வாரங்களில் வலிகள் பறந்து போகும்.

Use of Ashwagandha:

உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க காய்ந்த அமுக்கரா கிழங்கைச் சம அளவு சுக்குடன் சேர்த்து, வெந்நீர் விட்டு உடலில் பூசினால் வீக்கம் மறைந்து போகும்.

மேலும் உடல் பலத்தை அதிகரிக்க இதன் கிழங்கை ரசம் செய்து குடித்தால் போதும் பலத்த உடலை பெறுவீர்கள்.

பிரசவ காலத்தில் பெண்களுக்கு ஏற்படும்  உடல் அசதி நீங்க 2 தேக்கரண்டி கிழங்குத் தூளை இளஞ்சூடான பாலில் கலந்து, தினமும் இரண்டு வேளை பனங்கற்கண்டு சேர்த்து உட்க்கொண்டால் பெண்களுக்கு சிறந்த பலன் தரும்.

இந்த கிழங்கை நாமே வீட்டில் கூட வளர்க்கலாம். இது செடியாக வளர்த்து, ஒரு ஆண்டிற்குப் பின் அச்செடி முதிர்ந்து பூத்துக் காய்ந்த பிறகு செடியைப் பிடுங்கி கிழங்குகளை பச்சையாகவோ, காயவைத்தோ உபயோகிக்கலாம். மேலும் அதனை இரசமாக கூட குடிக்கலாம்.

மேலும் இதன்  இலைகளிலிருந்து, மணித்தக்காளி இலைக் குழம்பு செய்யும் முறையைப் பின்பற்றி காரக்குழம்பு செய்து உபயோகிக்கலாம்.

Also Read: Breathing Problem Solution: உங்களுக்கு தெரியுமா? பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும் முசுமுசுக்கை

இப்போது மருந்துக்கடைகளில் கூட இதன் லேகியம் கிடைக்கும் வகையில் உள்ளது. அமுக்கரா வேரில் நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நுண்ணுயிர்கள் ஏற்படுத்தும் நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை போன்ற சிறந்த மருத்துவக்குணங்கள் இருப்பதாக தற்போதைய உயர்நிலை ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது