Benefits Of Drinking Hot Water: கெட்ட கொழுப்பை குறைக்கும் வெந்நீர்..!
Benefits Of Drinking Hot Water: கெட்ட கொழுப்பை குறைக்கும் வெந்நீர்..!
நமது ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறையின் காரணமாக உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு அதிகரிக்கிறது.
சமீப காலமாக,பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் பிற காரணங்களால் இளம் தலைமுறையினர் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

Bad Cholesterol:
பரபரப்பான வாழ்க்கை சூழலில், நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு சிறிதும் அக்கறை காட்டுவதில்லை.
தவறான வாழ்க்கை முறை தேர்வுகள்,ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களினால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது.
கொழுப்பு நிறைந்த உணவுகள்,புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை தான் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற கொழுப்பாகும், இது நரம்புகளில் குவிந்து இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்குகிறது.
கொழுப்பு படிவத்தின் காரணமாக இதயம் தொடர்பான பலவித நோய்கள் உங்களது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
இந்த கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் மற்றும் இரத்தம் சரியான முறையில் இதயத்திற்குச் செல்லாதபோது மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
How To Reduce Bad Cholesterol ?
நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம்,கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த முடியும்,வெந்நீர் மூலம் கொழுப்பை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை காண்போம்.
கொலஸ்ட்ராலை குறைக்க மருத்துவரிடம் சென்று பரிசோதித்து மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது எளிமையான வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தும் உடல் எடையை குறைக்கலாம்.
அனைவரது வீடுகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய தண்ணீரை வைத்தே கெட்ட கொழுப்பின் அளவை எளிதாகக் குறைக்க முடியும்.
தண்ணீரை சுட வைத்து வெந்நீராக அருந்துவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க முடியும்.
இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு சேர்வதால் அதிக கொலஸ்ட்ரால் உடலில் தங்குகிறது, இந்த பிரச்சனைக்கு வெந்நீர் குடிப்பது மிகவும் பயனுள்ள தீர்வாகும்.
தொடர்ந்து சூடான நீரை உட்கொள்வது லிப்பிட் பேனலை(lipid panel)கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் தமனிகளில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.
லிப்பிட் பேனல்(lipid panel) என்பது இரத்தத்தில் உள்ள லிப்பிடுகள் எனப்படும் சில கொழுப்பு மூலக்கூறுகளின் அளவை அளவிடும் ஒரு சோதனையாகும்.
சூடான நீர் இரத்த திரவத்தை விரைவாக அதிகரிக்க செய்கிறது,இரத்த திரவங்கள் இல்லாததால், இரத்தம் நரம்புகளில் தடிமனாகத் தொடங்குகின்றது.
இதன் மூலம் இரத்த ஓட்டம் பாதிக்கிறது,வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் இரத்தம் மெலிந்து, இரத்த ஓட்டம் மேம்படுகிறது.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம் எண்ணெய் உணவுகள்தான். இதன் காரணமாக, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரித்து விடுகிறது.
ட்ரைகிளிசரைடு(Triglyceride) எண்ணெய் உணவுகளிலிருந்து உருவாகிறது, இது கொலஸ்ட்ரால் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
ட்ரைகிளிசரைடு, தாவர எண்ணெய்களிலும் ,விலங்கு கொழுப்புகளிலும் காணப்படுகிறது. மனிதர்களில் உபயோகப்படுத்தாத கலோரிகளைச் சேமிக்கும் வழிமுறையாக ட்ரைகிளிசரைடு பயன்படுகிறது.
இத்தகைய ட்ரைகிளிசரைடு துகள்கள் நரம்புகளில் சேர்வதை வெந்நீர் தடுக்கிறது,அதனால் தினமும் வெதுவெதுப்பான நீர் அருந்துவது அவசியம்.
பூண்டை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைய தொடங்கும். வெறும் வயிற்றில் பூண்டை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவதால் , இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.
எனவே தினமும் காலையில் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு நன்கு காய்ச்சிய வெதுவெதுப்பான நீர் அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்வது அவசியம்.