News Tamil OnlineTamil NewsThatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்பழங்கள்

Papaya For Weight Loss : முக அழகிற்கு பயன்படும் பப்பாளி எடை குறைக்க கூட உதவுமா…!

Papaya For Weight Loss : முக அழகிற்கு பயன்படும் பப்பாளி எடை குறைக்க கூட உதவுமா…!

பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையாகவும் இருக்கும். பப்பாளியில் விட்டமின் A, விட்டமின் C, பொட்டாசியம், செம்பு, நார்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பீட்டா கரோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், உடல் எடையினை குறைக்க உதவுகிறது. இந்த பழத்தில் கருப்பு ஜெலட்டினஸ் விதைகள் உள்ளன. பழத்தின் விதைகளை தவிர, பப்பாளிப் பழத்தின் மென்மையான, உண்ணக்கூடிய ஆரஞ்சு சதை மிகவும் சத்தானது.

இது பலவிதமான உடல் நலன்களை நமக்கு வழங்குகிறது. மேலும் இந்த சுவையான பழத்தின் நன்மைகள் என்ன என்பதை தொடர்ந்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.

Papaya For Weight Loss

Papaya For Weight Loss:

கொழுப்பைக் குறைக்கும்:

பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளன.

இந்த ஆக்ஸிடன்கள் அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதை தடுக்கிறது.

கொழுப்பு அதிகமானால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பப்பாளியை சாப்பிட்டால் நன்மை உண்டாகும். இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மையும் இந்த பப்பாளி பழத்திற்கு உண்டு.

சர்க்கரை நோய் :

இன்று பலருக்கும் இருக்கும் பொதுவான நோய் என்றால் அது சர்க்கரை/நீரிழிவு தான். இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாகசெயல்புரிகிறது.

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, நம் உடல் சோர்வையும் குறைக்கும் விதமாக உள்ளது.

மாதவிடாய்:

பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையானது. மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலிகள், உடல் சோர்வு, இவற்றை எல்லாம் தவிர்க்க முடியாது.

ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருக்கும். இந்த மாதவிடாய் நேரங்களில் உடலில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் பப்பாளிஇருக்கிறது. எனவே பெண்கள் அக்காலங்களில் பப்பாளி (Papaya) சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.

How To Improve Digestion Naturally At Home ?

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

இன்றைய காலங்களில் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட ஜங்க் ஃபுட், (junk food) உணவுகளையே மக்கள் அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.

இதனால் செரிமான சிக்கல் ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. பப்பாளி சாப்பிடுவது உங்க செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.

ஏனெனில் இதில் நார்ச்சத்துகளுடன் சேர்ந்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகளும் காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கண் ஆரோக்கியதிற்கு:

பப்பாளி பழத்தில் விட்டமின் A, (flavonoids like zeaxanthin, cyptoxanthin and lutein) ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த சத்துக்கள் கண்களில் உள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு அவை சேதமடையாமல் காக்கவும் செய்கின்றன.

மேலும் இதில் அடங்கியுள்ள விட்டமின் A சத்துக்கள் மாகுலர் சிதைவின் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகின்றன.

கீல்வாதத்தில் இருந்து பாதுகாக்கிறது:

கீல்வாதம் நம்மை பலவீனப்படுத்தும் நோயாகும். இதற்கு பப்பாளி துணைபுரியும் வகையில் உள்ளது. ஏனெனில், அவற்றில் விட்டமின் C அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.

விட்டமின் C குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ளும் நபர்களுக்கு மூட்டுவலி வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. எனவே, இதற்கு பப்பாளி சிறந்த நன்மையைத் தரும் வகையில் உள்ளது.

சருமம் வயதாகுவதை தடுக்கிறது:

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் தினமும் இந்த பப்பாளியினை சாப்பிடலாம்.

இதிலுள்ள சத்துக்கள் சருமத்தை சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளில் இருந்து காக்க உதவுகிறது. இந்த பப்பாளியினை நீங்களும் உண்டு உங்கள் சருமத்தை மிளிர்வுடனும், இளமையுடனும் வைத்துகொள்ளுங்கள்.

மேலும், இதில் அதிகளவில் போலிக் ஆசிட்(folic acid) இருப்பதால், குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.

Side Effects Of Papaya:

பப்பாளியின் தீமைகள்:

கர்ப்பிணி பெண்கள் முதல் 2 மாதங்கள் பப்பாளியினை உண்ணக்கூடாது,ஏனெனில்…

அதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும்.

பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால் வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி போன்றவை உருவாகும் வாய்ப்பு அதிகம்.

இந்தியாவின் Purdue பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அதிகளவு பெப்பெய்ன் என்சைம் உடலுக்கு சென்றால் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

Also Read : Papaya Leaves For Dengue: பப்பாளி இலையின் மருத்துவப்பயன்கள்; டெங்குவிற்கு எதிர்ப்புசக்தியாக இருக்குமா..?

அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் ஒருவித எரிச்சல் தோன்றும்.

பப்பாளி விதையிலுள்ள”கார்பைன்” என்ற நச்சானது, நாடித்துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அதை தவிர்த்து விடுங்கள்.

பப்பாளியில் வைட்டமின் c அதிகளவில் உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் சிறுநீரக கற்கள் (Kidney Stones) பிரச்சனையின் போது, ​​பப்பாளியை அதிகமாக உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏனெனில், பப்பாளியை அதிகமாக உட்கொள்வதால் உடலில் கால்சியம் ஆக்சலேட்டின் அளவு அதிகரித்து சிறுநீரக கற்களின் அளவு அதிகரிக்க நேரிடும். எனவே அவற்றை கவனமாக உட்க்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *