இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Bitterness In The Mouth:ஏன் இந்த வாய் கசப்பு..? காரணங்கள் மற்றும் அதை போக்கும் வழிகள்..!

Bitterness In The Mouth: ஏன் இந்த வாய் கசப்பு..? காரணங்கள் மற்றும் அதை போக்கும் வழிகள்..!

நம் வாயில் கசப்பான அல்லது கெட்ட சுவை ஏற்பசுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். காரமான அல்லது புளிப்பு உணவுகளை சாப்பிடுவதாலும் வாயில் கசப்பு ஏற்படலாம்.

Why Bitter Taste in Mouth - newstamilonline

Bitterness In The Mouth:

ஆனால், அதே வாய்க்கசப்பு நீண்ட நேரம் நீடித்தாலும், அடிக்கடி ஏற்பட்டாலும் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடானது.

சுவை என்பது மிகவும் மிருதுவான உணர்வு, பல் சுகாதாரம், நீர்ச்சத்து குறைப்பாடு என பல காரணங்களால் இச் சுவை ஏற்படலாம்.

கர்ப்பிணிகளுக்கும், நோயுற்றவர்களுக்கும் வாயில் கசப்பு ஏற்படுவது இயல்பானது.

பல நேரங்களில் இந்த இரண்டு சுவைகளோடு சேர்த்து புளிப்பு, உப்பு ஆகிய சுவைகளும் ஏற்படும். வயிற்றில் அமிலம் உற்பத்தியாகி உணவுக்குழாய் வழியாக மேலேறி வரும். இதை Gastro esophageal reflux disease எனக் குறிப்பிடுவார்கள்.

அது போன்ற தருணங்களில் வாயின் சுவை தன்மை மாறும். சளி மற்றும் அலர்ஜி காரணமாகவும் நமது வாயின் சுவை அடிக்கடி மாறும்.

ஒவ்வொரு முறையும் ஜுரம் அதிகமாகும்போது, நாக்கின் நுனிப்பகுதியில் இனிப்புச்சுவையும், அதனுடைய நடுப்பகுதியில் உப்புச்சுவையும், பக்கவாட்டுப்பகுதியில் புளிப்புச் சுவையும், பின்புறத்தில் கசப்புத்தன்மையும் ஏற்படும்.

ஜுரத்தால் பாதிக்கப்பட்டு உள்ள ஒருவர் ஆஸ்பிரின் போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது, சுவையை மாற்றிக் காட்டும்.

கல்லீரல் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவையே தெரியாது.

குறிப்பாக மூளையில் இருந்து வரும் ஏழாவது நரம்பு பாதிப்பு அடைந்தால் நாக்கில் சுவை தெரியாது.

அதை போக்கும் வழிகள்..!

நோயின் தன்மை தீவிரம் அடையும்போது, வாயில் உண்டாகும் கசப்பு, இனிப்பு தன்மைகளைத் தடுப்பதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன.

அப்போது நோயால் பாதிக்கப்பட்டவர் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது. மேலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துக்கடைகளில் நேரடியாக மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது.

வாயை நன்றாக கொப்புளிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்காக அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பல் மற்றும் ஈறு சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெப்பர் மின்ட், வைட்டமின் சி மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்ளலாம். லவங்கம் சாப்பிடலாம்.

தொடர்ச்சியான கசப்பான சுவைக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னால் பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Also Read: Papaya Leaf Juice and Benefits: பப்பாளி இலைச்சாறின் நன்மைகள்..!

சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது பிற சுவைகளை அடையாளம் காண்பதற்கு கடினமாக இருக்கலாம். பல் துலக்கிய பிறகும் அந்த சுவை மாறாமல் இருக்கலாம்.

கசப்பு சுவையுடன், வேறு அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பொறுத்து இதற்கான சிகிச்சையை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.