Ebony Tree: நோய்களுக்கு அருமருந்தாகும் கருங்காலி..!
Ebony Tree: நோய்களுக்கு அருமருந்தாகும் கருங்காலி..!
கருங்காலியின் வேர், பட்டை, இலை, மரம் மற்றும் பிசின் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் உடையவை. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. கருங்காலியின் சுவை கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை உடையது. கருங்காலியை பற்களுக்கு பயன்படுத்தினால் பற்கள் வலுவடையும்.
இதனுடைய கட்டையை வலுவான மர சாமான்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
நீரிழிவு நோய், பெருவயிறு,வயிற்றுப்புழு நோய் குருதிக்குறைவால் உருவாகும் திமிர் வாதம் மற்றும் பெருநோய் போன்றவை நீங்கும்.

Medicinal Herbs
வேர் :
இவற்றின் வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைத்து பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வயிற்றுப்புண் ஆறும்,வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வர இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
இதன்மூலம் இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரித்து பித்தத்தைக் குறைக்கிறது.
குடலில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
How to get rid of bad breath from throat?
மரப்பட்டை:
மரப்பட்டை அல்லது மரக்கட்டையை எடுத்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக குடித்து வந்தால் இருமல் மற்றும் சுவாச காச நோய்கள் நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றுகிறது.
பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தி மலட்டுத் தன்மையைப் போக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்க உதவும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதை உட்கொள்வது நல்லது.
மேலும் வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்குகிறது.
ஒரு பங்கு கருங்காலிக் கட்டையை எடுத்து எட்டு மடங்கு நீரை சேர்த்து நன்றாக காய்ச்சி அதில் கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து ஆறிய பின்பு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த நீரை அருந்தி வர உடலிலுள்ள கெட்ட நீரான விஷநீர் வெளியேறி சளி, காய்ச்சல் மற்றும் நெஞ்சு சளி போன்றவை அகலும்.
Ebony Tree
மரப்பிசின்:
பிசின் என்பது கருங்காலி மரத்தில் இருந்து சுரக்கும் ஒரு திரவமாகும். பிசினில் ஹைட்ரோகார்பன் (Hydrocarbon) இருக்கிறது. இது வேதிச் சேர்வைகளுக்கு (chemical constituents) பயன்படும் என்பதால் இதற்கு நல்ல மதிப்பு உள்ளது.
Also Read: Organic Farming : பார்லி தானியத்தின் உற்பத்தியை அதிகரிப்பதில் புதிய முறை கண்டுபிடிப்பு..!
கருங்காலியின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து குடித்து வந்தால் உடல் பலமடையும். நீர்த்துப்போன விந்து கெட்டியாகும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு அளிக்கிறது.
கரப்பான் நோயினை போக்குகிறது.பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உடையது.
கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறுகிறது. அந்த நீரில் குளித்து வர , உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கி விடும்.
மேலும் இது வயிற்றில் உள்ள புண்களை குறைத்து அல்சர் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.
கருங்காலிப் பட்டையின் பொடி, நாவல் பட்டை பொடி, வேப்பம் பட்டை பொடி போன்றவற்றை எடுத்து ஒன்றாக கலந்து அதை நாள்பட்ட மற்றும் ஆறாத புண்களின் மீது வைக்கும் போது அந்த புண்ணானது விரைவில் ஆறும்.