Rule of Law: ஆப்பிரிக்க நாட்டில் சமோசா ஏன் தடை செய்யப்பட்டது?
Rule of Law: ஆப்பிரிக்க நாட்டில் சமோசா ஏன் தடை செய்யப்பட்டது?
சமோசா என்ற திண்பண்டமானது, பல்வேறு நாட்டு மக்களால் விரும்பப்படும் நொறுக்குத்தீனியாகவும் சுவையூட்டியாகவும் திகழ்கிறது.
இந்த சமோசா செய்முறை வடிவில், வேறுபட்டு இருந்தாலும், முக்கோண வடிவமே, பன்னாட்டினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Rule of Law:
மேலும் பல இந்திய உணவு வகைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம்,
அவ்வப்போது மேற்கத்திய நாடுகளிலும் சமோசா விற்பனை நிலையங்கள் இருப்பது வழக்கமாகிவிட்டது.
இத்தகைய சமோசா இந்திய துணைக்கண்டம் முழுவதும் பிரபலமான திண்பண்டமாகும்.
இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் உள்ள மக்கள் தேநீருடன் சமோசா சாப்பிடுவதை சுவையாக கருதுகின்றனர்.
உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் உள்ளே அடைக்கப்பட்ட இந்த மிருதுவான சுவையான உணவு, பலராலும் விரும்பப்படுகின்றன.
இருப்பினும், இந்த உலகில் சமோசாவை தடை செய்யத நாடு ஒன்று உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா…
சமோசா சாப்பிடவோ, சமோசா செய்யவோ அந்நாட்டு சட்டங்கள் தடை விதித்துள்ளன.
இந்த சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.
இத்தகைய சட்டத்தை விதித்த நாடு எதுவென்றால் ஆப்பிரிக்க நாடான சோமாலியா(Somalia).
Muslim Personal Law:
சோமாலியாவின் தீவிர இஸ்லாமிய போராளிகள் பிரபலமான இந்த சிற்றுண்டியை மேற்கத்திய உணவாக கருதிய பின்னர் சமோசாவைத் தடை செய்துள்ளனர்.
அல்-ஷபாப்(Al-Shabaab) என்பது ஒரு இஸ்லாமிய குழுவாகும்.
இந்த குழு, சோமாலியாவில் அல் கொய்தாவுடன்(Al Qaeda) இணைந்து, நாட்டின் பெரும்பகுதியை கட்டுப்படுத்தி, 2011ல் சமோசாவுக்கு தடை விதித்தது.
இந்த தடைக்கு தீவிரவாத குழு அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றாலும், சமோசாவின் முக்கோண வடிவமானது கிறிஸ்தவ மும்மூர்த்திகளை ஒத்திருப்பதால்தான் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சமோசா வேண்டாம்:
சமோசா வேண்டாம் என்று மருத்துவம் சொல்லும் காரணங்களையும் இங்கு நாம் அறிவோம்.
ஒரு சிறிய சமோசாவில் 240 கலோரிகள் இருக்கின்றன. இதில் சர்க்கரைநோயாளிகள் உண்ண கூடாத உருளைக்கிழங்கு இருக்கிறது.
மேலும், அதற்கான மாவில் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மைதா கலக்கப்படுகிறது.
இது நம் உடலுக்கு கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.
இதைவிட ஆபத்தானது சமோசாவைப் பொரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய்.
பெரும்பாலான கடைகளில் ஒரே எண்ணெயில் தான் திரும்பத் திரும்ப பொரிப்பார்கள்.
அதாவது, ஒரு உணவைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்தும்போதோ அல்லது ஒரே எண்ணெய்யை மேலும் மேலும் பயன்படுத்தும்போதோ அதிக ஹைட்ரஜன் உணவோடு சேரும்.
இது கெட்ட கொழுப்பிற்கு வழிவகுக்கும்.
What should Diabetics not Eat?
சர்க்கரைநோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதைச் சாப்பிடுவதால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் உடலில் பிரச்னை ஏற்படும்.
மற்ற திண்பண்டங்களை விட சமோசா கொஞ்சம் ஆபத்தான உணவு தான்.
செரிமானக் கோளாறுகள், கெட்ட கொழுப்பு, சுகாதாரமற்ற மைதா மற்றும் எண்ணெய் இவை அனைத்து போதும் சமோசா வேண்டாம் என்று சொல்வதற்கு, இத்தகைய சமோசாவை தொடர்ந்து சாப்பிடுவது, வயிற்றில் தொப்பையை உருவாக்கும்.
Also Read: Health Tips: உங்கள் நாக்கு நிறம் உங்கள் health secrets-ஐ சொல்லி விடும் தெரியுமா..?
உங்களுக்கு சமோசா சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே செய்யலாம்.
நல்ல எண்ணெயில், மைதா மாவிற்கு பதிலாக ஆரோக்கியமான கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து சமைத்து சாப்பிடுவது தவறில்லை.
எனவே, ஆரோக்கியமாக உணவு முறைகளை உட்கொண்டு உடல்நலத்தை பேணி பாதுகாப்போம்.