Gamma Rays: காணாமல் போன சீசியம்-137 கேப்சூல்..! ஆஸ்திரேலியாவில் கதிர்வீச்சு எச்சரிக்கை..!
Gamma Rays: காணாமல் போன சீசியம்-137 கேப்சூல்..! ஆஸ்திரேலியாவில் கதிர்வீச்சு எச்சரிக்கை..!
மேற்கு ஆஸ்திரேலியாவில் சீசியம்-137(cesium) என்ற கதிரியக்கப் பொருளைக் கொண்ட சிறிய கொள்கலன் (capsule) காணாமல் போனதையடுத்து அவசர தேடுதல் நடந்து வருகிறது.

Cesium 137:
சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் கதிரியக்க சீசியம்-137 இன் கொள்கலன் மாநிலத்தின் தலைநகரான பெர்த்திற்கு(Perth) செல்லும் வழியில் தொலைந்து போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மேற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கதிர்வீச்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மாநிலமான பெர்த்(Perth) உட்பட்ட பல பகுதிகளில் “கதிரியக்க இரசாயன ஆபத்து” உள்ளது என்று அதிகாரிகள் எச்சரிக்கையை அனுப்பியுள்ளனர்.
கிம்பர்லி(Kimberley) பகுதியில் உள்ள சிறிய நகரமான நியூமனின் வடக்கில் இருந்து பெர்த்தின் வடகிழக்கு புறநகர் பகுதிக்கு சீசியம்-137 ஐ மாற்றும் போது, சீசியம்-137 சிறிய வெள்ளி கேப்சூல் காணாமல் போனதாக தீயணைப்பு துறை மற்றும் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
இது நியூமன் பெர்த்தின் வடகிழக்கில் சுமார் 1,200 கிமீ (750 மைல்) தொலைவில் உள்ளது.
கதிரியக்கம் என்பது அணுவின் கரு நிலையற்று இருக்கும் இரசாயனங்களின் ஒரு வகையாகும்.
இந்த பொருள் சுரங்க நடவடிக்கைகளில் அளவீடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
சீசியம் 137 என்பது ஒரு மென்மையான வெள்ளி உலோகமாகும்.
இந்த சீசியம் 137 கதிர்வீச்சு தீக்காயங்கள் அல்லது கதிர்வீச்சு நோயை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Gamma Rays:
அதிகாரிகளின் கூற்றுப்படி, சீசியம்-137 கொள்கலன் சென்ற வாகனம் ஜனவரி 12 ஆம் தேதி அந்த இடத்தை விட்டு வெளியேறியது.
அப்போது, அவசர சேவை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரியோ டின்டோ லிமிடெட்(Rio Tinto Ltd) நிறுவனத்திற்குச் சொந்தமான சுரங்கத்தில் இருந்துதான் இந்த கொள்கலன் வந்ததாகத் தெரிகிறது.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைமை சுகாதார அதிகாரி ஆண்ட்ரூ ராபர்ட்சன்(Andrew Robertson) கருத்துப்படி, உடலுக்கு அருகில் சீசியம்-137 ஐ வைத்தால் கதிர்வீச்சு தீக்காயங்களையும் தோல் சிவப்பையும் ஏற்படுத்தும்.
“மேலும் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் தாக்கங்கள் உட்பட, இன்னும் சில கடுமையான விளைவுகளை அவை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
வண்டியின் அதிர்வு காரணமாக அதன் பூட்டு உடைந்ததாக நம்பப்படுகிறது,
இதன் விளைவாக பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று விளக்கினார்.
சீசியம்-137 எவ்வாறு காயப்படுத்தும்:
கதிரியக்க கூறுகள் நவீன மருத்துவம் மற்றும் தொழில்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இந்த சீசியம்.
இவற்றில் ஒன்றுதான் சீசியம்-137 ஆகும். இது பொதுவாக சுரங்க நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் பொருளாகும்.
Centers for Disease Control and Prevention?
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்:
Centers for Disease Control – CDC கூற்றின் படி, சுற்றுச்சூழலில் அதிக அளவு சீசியம்-137 மூலம் “கடுமையான கதிர்வீச்சு நோய் மற்றும் தீக்காயங்கள் மற்றும் சில நேரங்களில் மரணம் ஏற்படலாம்” என்று கூறப்படுகிறது.
Cs-137 வெளிப்படுவதால் ஏற்படும் உயர் ஆற்றல் காமா கதிர்வீச்சு (Gamma radiation) வெளிப்பாடு காரணமாக, புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கலாம்.
காமா கதிர்வீச்சு என்பது சிலவகை ஆபத்தான கதிரியக்கப் பொருள்களை வெளிவிடும் ஒளிக்கதிர்களாகும்.
Cs-137ஐ உட்கொண்டாலோ அல்லது நுகர்ந்தாலோ, மென்மையான திசுக்கள் முழுவதும், குறிப்பாக தசை திசு முழுவதும் அதன் கதிரியக்கம் பரவும்.
இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க செய்கிறது என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.