News Tamil OnlineTamil Newsஅறிவியல்இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்வெளிநாடு

Effects of Water Pollution: அசுத்தமான தண்ணீரை விட நதி மீனில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன..!

Effects of Water Pollution: அசுத்தமான தண்ணீரை விட நதி மீனில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன..!

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, அமெரிக்காவின் ஆறுகள் மற்றும் ஏரிகளில் பிடிபட்ட ஒரு மீனை சாப்பிடுவது, “இரசாயனங்கள்” கலந்த குடிநீருக்கு சமம் என்கின்றனர்.

Favorite Food

Favorite Food:

அசைவப்பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடியவற்றில் மீன் முக்கியமான ஓர் உணவாகக் இன்று வரை இருந்து வருகிறது. 25,000 ஆண்டுகளுக்கு முன்னர், அழிந்துபோன இனமாகச் சொல்லப்படுகிற ‘நியான்டர்தால்’ மனிதர்கள் காலத்திலேயே மீன் எல்லாருடைய விருப்பமான உணவாக இருந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

குளத்து மீன்களை ஐஸில் வைத்து உண்ணக் கூடாது மற்றும் அவை இறந்துவிட்டாலும் உண்ணக் கூடாது என்று கூறுவார்கள்.

இப்படி தவிர்க்க முடியாத மீன்களில் சில தீங்கு விளைவிக்கும் மீன்களும் உள்ளன. அவற்றை பற்றி இங்கு காண்போம்.

1940 களில் உருவாக்கப்பட்ட , பெர் மற்றும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருட்கள்(per- and polyfluoroalkyl substances) (PFAS) இன்னும் பூச்சுகள், உணவு பேக்கேஜிங் மற்றும் தீயை அணைக்கும் நுரை ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

PFAS – நில இரசாயனம்:

இந்த PFAS என்பது பூச்சுகள் மற்றும் வெப்பம், எண்ணெய், கறைகள், கிரீஸ் மற்றும் நீர் ஆகியவற்றை எதிர்க்கும் தயாரிப்புகளை உருவாக்கப் பயன்படும் இரசாயனமாகும்.

இவை அதிக காலம் சுற்றுச்சூழலில் உடைந்து போகாது. நீர், காற்று மற்றும் உயிரினங்களின் உடல்களில் குவிகின்றன.

இவை இதனால் “நில இரசாயனங்கள்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த PFAS மக்களின் உடலில் சேர்வதால், தைராய்டு சுரப்பி, கல்லீரல், சிறுநீரகங்கள், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி, குறைவான நோய் எதிர்ப்பு சக்தி, கருவுறாமை மற்றும் புற்றுநோய்கள் என பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

அமெரிக்க சூழலியலாளர்கள், PFAS சேர்ந்த நதி மீனை சாப்பிடும் ஒருவர் இந்த இரசாயனங்களின் தீவிர அளவைப் பெறலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

effects of water pollution

Effects of Water Pollution:

2013 முதல் 2015 வரை அமெரிக்க ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்த போது, சராசரியாக நன்னீர் மீன்களில் ஒரு கிலோ உடல் எடையில் சுமார் 9,500 நானோகிராம் PFAS இருப்பதைப் பாதுகாப்பாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் ஒரு மீனை சாப்பிடுவது மாசுபட்ட நீரை ஒரு மாதத்திற்கு உட்கொள்வதற்கு சமம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

காட்டு நதி மீன்களில் PFAS அளவு வணிக ரீதியாக கடல் மீன்களை விட 248 மடங்கு அதிகமாக இருந்தது.

இதனால், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்களைக் காட்டிலும் அல்லது சந்தையில் மீன் வாங்குபவர்களைக் காட்டிலும் கடையில் நதி மீன் வாங்க முடிவு செய்பவர்கள் ஆபத்தில் உள்ளனர் என்கின்றனர்.

What is the Result?

ஆய்வின் முடிவில், PFAS க்கு எதிரான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், PFAS உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான முழுமையான தடையையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆனால் இந்த ஆபத்தான இரசாயனங்கள் தடைசெய்யப்படுவதற்கும், நமது பூமி முழுமையாக சுத்தப்படுத்துவதற்கும் எவ்வளவு காலம் ஆகும் என்பது இன்னும் தெரியவில்லை.

Also Read: Benefits Of Onion: தினம் ஒரு வெங்காயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..?

இந்த வகை மீன்களை வாங்குவதும் விற்பதும் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

நீர் மாசுபாட்டால் தான் மீன்கள் இறக்கின்றன என்று நாம் நினைத்தோம்.

ஆனால், இத்தகைய மீன்களால் அதை உட்கொள்பவருக்கு தான் ஆபத்து என்பது நாம் அறியப்படாத உண்மை.