Breathing Problem: உங்களுக்கு தெரியுமா? பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும் முசுமுசுக்கை மூலிகை!
Breathing Problem : உங்களுக்கு தெரியுமா? பல்வேறு நோய்களுக்கு தீர்வு தரும் முசுமுசுக்கை மூலிகை!
முசுமுசுக்கை ஆனது கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

Breathing Problem :
சுவாசக்குழல், சுவாசப்பை இவற்றின் உள்ளறைகளில் ஏற்படும் வலி, அழற்சி, ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
மேலும், இது இளநரையை கட்டுபடுத்தும், காச நோயை குணபடுத்தும்.
இந்த கொடியின் மேல் பக்கம் முழுவதும் ரோம வளரிகளைக் கொண்டிருப்பதாலும், தடவும்போது, ‘முசுமுசு’வென்ற உணர்வைக் கொடுப்பதாலும் இது ‘முசுமுசு’க்கை என்று பெயர் பெற்றது.
அடுத்து இவற்றை எவ்வாறாக பயன்படுத்தலாம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
முசுமுசுக்கையை எவ்வாறு சாப்பிடலாம்?
அரிசியோடு இதன் இலைகளைக் சேர்த்து மாவாக அரைத்து, ‘முசுமுசுக்கை அடை’ செய்து சாப்பிடலாம்.
அடிக்கடி மூக்கில் நீர் வடியும் நோய் உள்ளவர்கள் முசுமுசுக்கையைக் காரக் குழம்பு பதத்தில் செய்து சுடு சாதத்தில் பிசைந்து ஆவி பறக்கச் சாப்பிட்டால், மூக்கிலிருந்து நீர் வடிவது குறையும்.
இதன் இலைகளோடு மிளகு, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லி இலைகள், புதினா, கறிவேப்பிலை சேர்த்து ஊறுகாய் போன்று தயாரித்துச் சாப்பிட அஜீரணம், வயிற்றுப்பொருமல் தணியும்.
முசுமுசுக்கை இலை, தூதுவளை, இஞ்சி, தனியா ஆகியவற்றோடு கூடவே அறுகம்புல்லையும் சேர்த்து துவையலாகச் செய்து சாப்பிட, பித்தம் சார்ந்த நோய்கள் அடங்கும்.
மருந்தாக:
ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இதன் வேதிப்பொருட்கள் உதவுகின்றன. இதன் இலைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட நானோ நுண்துகள்களுக்கு, கொசுப்புழுக்களை அழிக்கும் தன்மை அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வயிற்றின் மென்படலத்தில் எந்தவிதக் கிருமிகளும் தாக்காமல் தடுக்க இதன் இழை பயன்படுகிறது.
வீட்டு மருந்தாக:
முசுமுசுக்கை இலைப் பொடி, கண்டங்கத்திரிப் பொடி, திப்பிலி, மிளகு ஆகியவற்றைத் தேனில் குழைத்துச் சாப்பிட, இரைப்பிருமல் நீங்கும்.
முசுமுசுக்கை வேருடன் கிராம்பினை சேர்த்து பொடித்து வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டால், சுவாசம் எளிமையாய் நடைபெறும்.
இதையே கஷாயமாக்கிக் குடித்தால், உடலில் அதிகரித்த கபமும் பித்தமும் குறையும்.
வெளுத்த தலைமுடியைக் கருமையாக்கத் தயாரிக்கப்படும் இயற்கை முடிச் சாயங்களில் இதன் இலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.