Ice Cubes: உடனடியாக முகத்தை பொலிவாக்கும் ஒரு பொக்கிஷம்..!
Ice Cubes: உடனடியாக முகத்தை பொலிவாக்கும் ஒரு பொக்கிஷம்..!
நாம் அழகான, சுத்தமான சருமத்தினை பெற பல்வேறு முறைகளை கையாண்டிருப்போம், ஆனால் அவற்றால் முழுப்பயனும் அடைந்திருக்கிறோம் என்றால் இல்லை.

Ice Cubes:
நீங்கள் முகத்தில் ஐஸ் தடவினால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
முகத்தில் ஐஸ்கட்டி எந்த மாதிரி நன்மைகளை செய்கிறது என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.
நாம் ஐஸ் கட்டியினை முகத்தில் தடவினால் முகம் இறுக்கமான அமைப்பை பெறும், இதனால், தோலில் விரிவாக காணப்படும் துளைகள் குறைந்து, சுருக்கங்கள் எல்லாம் மறையும்.
உடனடி பளபளப்பை அடையலாம்:
முகத்தில் ஐஸ்கட்டியை தடவினால், சருமத்தில் இரத்த ஓட்டம் விரைந்து நடக்கும். அவ்வாறு நடக்கும் போது முகத்தில் சோர்வு தன்மை நீங்கி, சருமத்தின் நிறம் மேம்பட்டு, முகம் உடனடி பிரகாசத்தைப் பெறும்.
மேலும் சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், பளபளப்புடனும், தெளிவுடனும் மாற்றுகிறது.
முகத்தில் உள்ள எரிச்சல் மற்றும் சிவந்த தன்மையை நீக்கும்:
பொதுவாக நாம் அதிக நேரம் வெளியிலேயே தான் சுற்றுகிறோம். அதனால், சூரியஒளி மற்றும் தூசிகள் நம் முகத்தில் அதிகம் படுகின்றன.
அது தோல் எரிச்சலை ஏற்படுத்துகிறது மற்றும் தோல் சிவப்பாக மாறவும் வழிவகுக்கிறது. ஐஸ் தடவுவது தோல் எரிச்சலுக்கு நல்ல மருந்தாகும்.
இந்நிலையில் முகத்தில் ஐஸ்கட்டியை தடவினால், சருமம் குளிர்ச்சியடைந்து சருமத்தின் சிவப்புதன்மை மறைந்து விடுகிறது.
How to Reduce Acne?
நம் முகத்தில் எண்ணெய்சுரப்பிகள் அதிகம் இருப்பதால் தான் முகப்பருக்கள் தோன்றுகின்றன.
ஐஸ்கட்டி முகத்தில் இருக்கும் முகப்பருவை குறைத்து, முகப்பருவின் வீக்கத்தையும் குறைக்கிறது. மேலும், முகத்தில் புதிய முகப்பரு ஏற்படாமல் இருக்கும் வகையிலும் இது தடுக்கிறது.
குறிப்பாக கண்ணுக்குக் கீழே இருக்கும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
கண் சோர்வு நீங்க:
கண்கள் சோர்ந்து காணப்படும் போது முக அழகே கெட்டு விடும். இதை போக்க கண்ணின் விழி ஓரத்திலிருந்து ஆரம்பித்து மேற்புறம் கண் இமை வரை ஐஸ் கட்டி கொண்டு வட்டமாக மசாஜ் செய்தால் கண் வீக்கம் மறைந்து பொலிவு மீண்டும் கிடைக்கும்.
வறண்ட உதடு மென்மையாக:
ஐஸ் கட்டி கொண்டு உதடுகளின் மேலே தேய்த்தால் வறண்ட உதடு மென்மையாகி அழகுடன் காணப்படும்.
உடலில் ஏற்படும் வலி போக சிறந்தது:
ஐஸ் கட்டிகளை நம் உடலில் எந்த பகுதியில் வலி இருக்கின்றதோ அந்த பகுதியில் நேரடியாக வைக்காமல் ஓர் துணியில் வைத்து வலி இருக்கும் இடத்தில் ஓர் அழுத்தம் கொடுத்து வட்டமாக மசாஜ் செய்தால் வலி குறைந்துவிடும்.
குறிப்பு: சிலர் அதிகம் குளிர் தாங்காதவர்களாக இருப்பார்கள், அவர்கள் இம்முறையினை கையாளுவதை தவிர்க்கவும்.