Fraternal Twins: இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!
Fraternal Twins: இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!
இரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள், என்று நாம் சொல்வதை கேட்டிருப்போம்.

Identical Twins:
இரட்டையர்கள் செல்லும் இடமெல்லாம், காண்போரின் கவனத்தில் இருக்கின்றனர்.
இரட்டையர்கள் பொதுவாக ஒரே இடத்தில் தான் வளர்க்கப்படுவர்.
இருப்பினும், அவர்களுக்கிடையே தனிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே டி.என்.ஏ-வை கொண்டிருப்பார்கள்.
மேலும், அவர்களுக்கு இடையே உடல் ரீதியாகவும் பல வேறுபாடுகள் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஆராய்ச்சியின் முடிவில், குணம் அல்லது உருவகத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களை விட, வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது, இரு மடங்கு மற்றும் மும்மடங்கு மகிழ்ச்சியை அளிப்பார்கள் என சொல்லப்படுவது உண்மைதான்.
என்றாலும், அதற்கான சவால்களும் பல மடங்கு இருக்கும். ஒரு குழந்தையை வளர்ப்பதே கடினம் தான்.
அப்படி இருக்க இரண்டு, மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் அதிக சிக்கல்களை பெற்றோர்கள் சந்திக்கின்றனர்.
Twins :
உங்களுக்கு பிறக்க இருப்பது இரட்டை குழந்தைகள் என தெரிய வந்திருந்தால், மகிழ்ச்சியுடன் சேர்த்து காத்திருக்கும் சவாலை சமாளிக்கும் வழியை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்கள் மற்ற தாய்மார்களை விட சராசரியாக ஒரு அங்குல உயரம் கொண்டவர்கள்.
35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இரட்டையர்களை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 35 வயதிற்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டால், உடல் ரீதியாக கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மத்திய ஆப்பிரிக்க நாடான பெனினில், பிறக்கும் ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் சுமார் 27.9 சதவிகிதம் இரட்டையர்கள் பிறக்கின்றனர் என்று இரட்டையரின் தேசிய சராசரி அறிக்கை தெரிவித்துள்ளது.
14 வார கர்ப்பக்காலத்திலேயே இரட்டையர்கள் தங்கள் தாயின் வயிற்றில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, சில வீடியோக்களில் ஒரு கரு பின்புறம் அல்லது இணை இரட்டையரின் தலையை மூடிக்கொண்டிருந்தது.
இரண்டு சோதனைகளுக்கிடையில் கை-வாய் மற்றும் கை-கண்கள் போன்றவற்றின் இயக்கங்கள் குறைந்துவிட்டாலும், 18 வாரங்களில் கவனிக்கப்பட்ட இயக்கங்களில் சுமார் 29 சதவிகிதத்தைக் கணக்கிடும் வரை மற்ற உறுப்புகளின் இயக்கங்கள் அதிகரித்து காணப்பட்டன.
இரட்டை குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ,மகிழ்ச்சியும், சிறிய சண்டைகளும் அவ்வப்போது காணப்பட்டாலும் கூட, இரட்டை குழந்தைகள் மூலம் அவர்களின் பெற்றோர்கள் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.