Benefits of Onion: ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமா சின்ன வெங்காயத்தின் நற்குணங்கள்..!
Benefits of Onion: ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமா சின்ன வெங்காயத்தின் நற்குணங்கள்..!
சின்ன வெங்காயத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
இதில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்கள் இதய நோய்கள் மற்றும் அலர்ஜியை போக்குகிறது.

Benefits of Onion:
எனவே, சின்ன வெங்காயத்தை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
பொதுவாக இந்திய சமையல்களில் சின்ன வெங்காயம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து செய்யப்படும் உணவுகள் ஏராளம் உள்ளன .வெங்காயத்தின் மருத்துவ நன்மைகளை கணக்கில் கொண்டு இதை நம் முன்னோர்கள் பாரம்பரியமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் உலகளவிலும் வெங்காயம் சிறந்த ஆரோக்கிய உணவாக திகழ்கிறது.
இந்த சின்ன வெங்காயத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
ஒரு நாளைக்கு 100-150 கிராம் வரை சின்ன வெங்காயத்தை உணவில் சேர்ப்பது நம் சருமம் மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அளவில் நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது.
சின்ன வெங்காயத்தின் ஊட்டச்சத்து அளவுகள்:
100 கிராம் நறுக்கிய வெங்காயத்தில்,
கலோரிகள் – 75
புரதம் – 2.5 கிராம்
கொழுப்பு – 0 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள்(Carbohydrates) – 17 கிராம்
நார்ச்சத்துக்கள் – 3 கிராம்
கால்சியம் – 3% DV (Daily Value)
இரும்புச் சத்து – 7% DV
மக்னீசியம்(Magnesium) – 5%
பாஸ்பரஸ் – 5% DV
பொட்டாசியம் – 7% Dv
துத்தநாகம் – 4% DV
ஃபோலேட்(Folate) – 9% DV போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் (Antioxidants) நிறைந்த வெங்காயம்:
இத்தகைய சின்ன வெங்காயத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து காணப்படுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து நம் செல்களை பாதுகாக்க உதவுகிறது.
மேலும் இது உடலில் ஏற்படும் அலர்ஜிக்கு எதிராக செயல்படுகிறது.
இவை இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.
இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க 11 வகையான வெங்காயங்களை பகுப்பாய்வு செய்தனர்.
அப்போது வெங்காயத்தில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பது தெரிய வந்தது.
அதிக ஆன்டி ஆக்சிடன்கள் கொண்ட காய்கறிகளின் பட்டியலில் வெங்காயம் இரண்டாவதாக திகழ்கிறது.
அலர்ஜி அறிகுறிகளை போக்கும்:
நமது உடலில் அலர்ஜி ஏற்பட்டால் அதை வெளிப்படுத்தும் விதமாக நம் உடலானது ஹிஸ்டமைன்(Histamine) என்ற கெமிக்கல்களை (chemicals) வெளிப்படுத்தும்.
இந்த ஹிஸ்டமைன் கெமிக்கல் வெளிப்படும்போது திசுக்களில் வீக்கம், கண்களில் நீர் வடிதல், அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.
இதில் குவர்செடின் என்ற தாவர பொருட்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது சுவாச அறிகுறிகளைக் குறைக்க பெரிதும் உதவும்.
மேலும் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அலர்ஜி, கண்கள், மூக்கு இவற்றில் ஏற்படும் அலர்ஜி மற்றும் பருவகால அலர்ஜியை போக்க உதவுகிறது.
Anti Microbial:
ஆன்டி மைக்ரோபியல் தன்மை:
வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு , பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு போன்ற பண்புகள் காணப்படுகின்றன.
இது சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது.
இதற்காக பருவ கால அலர்ஜி உடைய 16 பெரியவர்களிடம் நான்கு வாரங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் 200mcg/mL அளவு கொடுத்த போது அதன் அறிகுறிகள் 62. 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இது தொண்டை புண் போன்ற அறிகுறிகளை குறைக்க பெரிதும் உதவுகிறது .
15 விநாடிகளுக்கு ஒரு முறை, வாயை வெங்காயச் சாற்றில் கொப்பளிப்பதால் பாக்டீரியாவை கொல்லும் கிருமி நாசினியாக செயல்படுகிறது.

Which Vegetable is Good for Heart?
இதய ஆரோக்கியம், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வெங்காயம்:
சின்ன வெங்காயத்தில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்கள் இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
வெங்காயத்தில் இதய நோய் அபாயத்தை குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.
இதன்மூலம் இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடிகிறது.
வெங்காயத்தில் உள்ள தியோசல்பினேட்டுகள் ஆபத்தான கட்டிகள் உருவாகுவதை தடுக்கும்.
தியோசல்பினேட் என்பது வெங்காயத்தில் காணப்படும் இயற்கை தயாரிப்பாகும்.
இது நைட்ரிக் ஆக்சைடை (nitric oxide) வெளிவிடுவதன் மூலம் இரத்த நாளங்களின் விறைப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்க முடிகிறது.
இதய நோய் அபாயத்தை அதிகரிக்கவும், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும்.
தயிருடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகள் குறைகின்றன.
பெருந்தமனி தடிப்புத் தோல் அலர்ஜியில் இருந்து, இதயத்தை பாதுகாக்கிறது.
Benefits of Small Onions:
சின்ன வெங்காயத்தை உணவில் எப்படி சேர்க்கலாம்:
குழம்பு, காய்கறிகள், இறைச்சி, வறுவல், சூப், சாலட்(salad), பாஸ்தா, சாஸ்(sauce) மற்றும் பீட்சா போன்ற எல்லா உணவுகளிலும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் இரண்டு சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வரலாம்.
Also Read: Daily Routine: ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் செய்யவே கூடாத விஷயங்கள்..!
இது இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
தயிர் பச்சடிகளில் பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல சுவையும் பெறலாம்.