Tamil NewsTamil Technology Newsஅறிவியல்இயற்கையோடு வாழ்வோம்கண்டுபிடிப்புசெய்திகள்தொழில்நுட்பம்வெளிநாடு

Effect of Climate Change: அண்டார்டிகாவில் பத்து ஆண்டு விரிசல்களுக்கு பின் தற்போது ஒரு நகரம் அளவிலான பெரிய பனிப்பாறை உடைந்தது..!

Effect of Climate Change: அண்டார்டிகாவில் பத்து ஆண்டு விரிசல்களுக்கு பின் தற்போது ஒரு நகரம் அளவிலான பெரிய பனிப்பாறை உடைந்தது..!

தற்போது அண்டார்டிகாவில் மிகப் பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளது.

பூமியின் தென் பகுதியில் உள்ள மிகப் பெரிய கண்டமான அண்டார்டிகாவில் அதிக அளவிலான பனிப்பாறைகள் நிறைந்து உள்ளன.

Antarctica Glacier

Antarctica Glacier:

ஹோபார்ட்(Hobart) அல்லது லண்டன்(London)

பெருநகரங்களின் அளவுள்ள ஒரு பனிப்பாறை, பிரிட்டிஷ் அண்டார்டிக் பிரதேசத்தின்(British Antarctic Territory) விளிம்பில் இருந்து அழுத்தத்தின் காரணமாக உடைந்து விழுந்தது.

மேலும் 150 மீட்டர் தடிமன் கொண்ட பனிக்கட்டியில் இருந்து 1,550 சதுர கிலோமீட்டர் அளவிலான பனிக்கட்டி உடைந்து விழுந்தது.

குறைந்தது 35 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 2012 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் இந்த விரிசல் முதன்முதலில் கவனிக்கப்பட்டது.

இதனையடுத்து, 2016 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே(British Antarctic Survey) BAS அதன் ஹாலி (Halley) ஆராய்ச்சி நிலையத்தை 23 கிலோமீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ததில் இருந்து சாஸ்ம்-1 என்ற இடைவெளி படிப்படியாக விரிவடைந்து வந்தது.

மேலும் அண்டார்டிக் பனிக்கு அடியில் ராட்சத விண்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

What does GPS Stand for?

BAS பனிப்பாறை ஆய்வாளர்கள் கடந்த பத்தாண்டுகளின் விரிசல் பண்புகளைப் புரிந்துகொள்வதற்கு,

மிதக்கும் பனிக்கட்டியின் தினசரி அளவீடுகளை எடுத்துக் கொண்டனர்.

சில மிதக்கும் பனிக்கட்டியின் முக்கிய பகுதிகள் பெரிதும் கண்காணிக்கப்பட்டது.

16 GPS கருவிகள் ஒவ்வொரு மணி நேரமும் மிதக்கும் பனிக்கட்டியை அளவிடுகின்றன.

GPS என்பது Global Positioning System, இது பூமியில் அல்லது அதற்கு அருகில் உள்ள பயனர்களுக்கு உதவும் வகையில் மிகவும் துல்லியமாக வழிசெலுத்துதல் துடிப்புகளை ஒளிபரப்புகிறது.

அதே நேரத்தில் நான்கு செயற்கைக்கோள்கள் அதன் சிதைவின் படத்தைப் படம்பிடிக்கின்றன.

மேலும், ரேடார்(radar) மற்றும் ட்ரோன்(drone)மூலம் பனிக்கட்டியில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து எச்சரிக்கின்றன.

ரேடார் என்பது மின்காந்த கருவி.

Effect of Climate Change

Effect of Climate Change:

காலநிலை மாற்றத்தால் மிதக்கும் பனிப்பாறையின் அளவு அதிகரித்து வருகிறது என்றாலும், இத்தகைய நிகழ்வு புவி வெப்பமடைதலில் இருந்து அதிகரிக்கும் வெப்பநிலையுடன் தொடர்புடையது அல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

“இந்த மிதக்கும் பனிப்பாறை நிகழ்வு எதிர்பார்க்கப்பட்டது தான் ” என்று BAS பனிப்பாறை நிபுணர் பேராசிரியர் டொமினிக் ஹோட்சன்(Dominic Hodgson) கூறுகிறார். மேலும் இந்த நிகழ்வு காலநிலை மாற்றத்துடன் இணைக்கப்படவில்லை எனவும் கூறுகிறார்.

BAS ஆல் வெளியிடப்பட்ட படங்கள், A81 பனிப்பாறை பிரிவதைக் காட்டுகிறது.

Also Read: Apple Store: உலகின் முதல் மிதக்கும் Apple Store..!

மேலும், இது A74 பனிப்பாறை, வரும் மாதங்களில் Weddell கடலை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

BAS, தாக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கும் போது, இது எந்த வகையிலும் விண்வெளி வானிலை மற்றும் வளிமண்டலத்தில் ஓசோன் அளவை கண்காணிக்கும் ஹாலி நிலையத்தின் வேலையை பாதிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கையாய் உள்ளனர்.