Interesting Factsசுற்றுலாசெய்திகள்வெளிநாடு

Bus Roadways: கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்லும் ‘உலகின் மிக நீளமான பேருந்து பாதை’…!

Bus Roadways: கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்லும் ‘உலகின் மிக நீளமான பேருந்து பாதை’…!

1960 களில் இந்தியாவில் உள்ள கொல்கத்தாவிலிருந்து, இங்கிலாந்தில் உள்ள லண்டனுக்கு ஒரு பேருந்து இருந்தது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்.

இரட்டை அடுக்கு பேருந்தை ஆல்பர்ட் என்றும் அதன் மூலம் செல்லும் பயணங்கள் ஆல்பர்ட் சுற்றுலா என்று அழைக்கப்பட்டது.

இதுவே உலகின் மிக நீளமான பேருந்து வழித்தடம் ஆகும்.

longest highway in the world

longest highway in the world?

லண்டனுக்கும் கொல்கத்தாவிற்கும் இடையே செல்லும் ஒரு வழி பயணத்திற்கு £145 (சுமார் ₹13518) செலவாகும்.

சந்தேகத்திற்கு இடமின்றி அந்த நாட்களில் இது மிகப்பெரிய தொகையாகும்.

சென்ட்ரல் வெஸ்டர்ன் டெய்லியின்(Central Western Daily) அறிக்கையின்படி, ஆண்டி ஸ்டீவர்ட்(Andy Stewart), 1968 ஆம் ஆண்டு சிட்னியில்(Sydney) இருந்து இந்தியா வழியாக லண்டன் செல்வதற்காக ஒரு பிரிட்டிஷ் பயணி இந்த பேருந்தை வாங்கி
இருந்தார்.

அக்டோபர் 8, 1968 இல், அவர் சிட்னியின் மார்ட்டின் பிளேஸில் (Martin Place) இருந்து 13 பயணிகளுடன் கிட்டத்தட்ட 16,000 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்டார்.

அவர் 132 நாட்களுக்குப் பின்பு , பிப்ரவரி 17, 1969 அன்று லண்டன் வந்தடைந்தார்.

இந்த ஆல்பர்ட் பேருந்து இங்கிலாந்திலிருந்து பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியா, பர்மா, தாய்லாந்து வழியாக சிட்னிக்கு பயணித்தது.

மேலும் மலாயா , சிங்கப்பூர். இந்தியாவில் டெல்லி, ஆக்ரா, அலகாபாத், பெனாரஸ் மற்றும் இறுதியாக கொல்கத்தாவை உள்ளடக்கியது.

Bus Travel

Bus Travel:

கொல்கத்தா, லண்டன் மற்றும் சிட்னி முழுவதும் ஆல்பர்ட்டி பேருந்தின் செயல்பாட்டிலிருந்து ஆண்டு முழுவதும் கால அட்டவணை உருவாக்கப்பட்டது.

அறிக்கைகளின்படி, 4, 5, 6, 7, 8 மற்றும் 9 ஆகிய எண்கள் கொண்ட பயணங்கள் சிட்னியை நோக்கி ஓடப்பட்டது. மேலும் 12 முதல் 15 வரையிலான பயணங்கள் லண்டனுக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே ஓடப்பட்டது.

ஆல்பர்ட் பேருந்தில் சுற்றுப்பயணங்கள் மிகவும் ஆடம்பரமாக இருந்தன.

நீங்கள் ஆல்பர்ட் பேருந்தில் பயணம் செய்யும் போது, ஒரு சிறந்த சொகுசை அனுபவிக்க முடியும்.

பேருந்தின் கீழ் தளத்தில் ஒரு வாசிப்பு மற்றும் சாப்பாட்டு அறையும், மேல் தளத்தில் கண்காணிப்பு அறையும் இருந்தது.

அனைத்து வசதிகளுடன் கூடிய சமையலறையும் இருந்தது. விருந்துகளுக்கு வானொலி மற்றும் போனோகிராஃப்(phonograph) இசையும் இருந்தன.

பேருந்தின் உள்ளே இருந்த ஃபேன் ஹீட்டர்கள்(Fan heaters) பயணிகளை சூடாக வைத்திருக்க உதவியது.

இதை தவிர உட்புறங்களில் பிரகாசமான திரைச்சீலைகள் மற்றும் தனித்தனி தூங்கும் பகுதிகளுடன் அடங்கிய தரைவிரிப்புகள் இருந்தன.

இத்தகைய ஆடம்பரமான ஏற்பாடுகள் இருந்ததது.

Bus Roadways

Bus Roadways:

ஆல்பர்ட் பேருந்தில் வழியில் உள்ள சுற்றுலா இடங்கள் :

இங்கிலாந்திலிருந்து சிட்னிக்குச் செல்லும் போது ஆல்பர்ட் , இஸ்தான்புல்லின் கோல்டன் ஹார்ன்(Istanbul’s Golden Horn), டெல்லியின் மயில் சிம்மாசனம், ஆக்ராவின் தாஜ்மஹால், கங்கையில் உள்ள பெனாரஸ், காஸ்பியன் கடல் கடற்கரை, ப்ளூ டானூப் (Blue Danube) போன்ற மூச்சடைக்கக்கூடிய சுற்றுலாத் தலங்களைக் கடந்து சென்றது.

டிராகோனியன் கணவாய்(Draconian Pass), ரைன் பள்ளத்தாக்கு(Rhine Valley), கைபர் கணவாய்(Khyber Pass) மற்றும் காபூல் பள்ளத்தாக்கு(Kabul Valley ) மேலும் புது டெல்லி, காபூல், இஸ்தான்புல்(Istanbul), தெஹ்ரான்(Tehran), வியன்னா, சால்ஸ்பர்க் (Salzburg) என பல இடங்கள் அடங்கும்.

1976 ல் ஆல்பர்ட் வரை கொல்கத்தா மற்றும் இங்கிலாந்து இடையே சுமார் 15 சுற்றுப்பயணங்களையும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நான்கு பயணங்களையும் முடித்துள்ளது.

Also Read: South Georgia Museum: உலகின் விளிம்பில் உள்ள அருங்காட்சியகம் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்படுகிறது..!

இது ஆய்வுகள் இல்லாமலே கிட்டத்தட்ட 150 எல்லைகளைக் கடந்தது மற்றும் அது பயணித்த அனைத்து நாடுகளிலும் ‘நட்பு தூதர்’ (Ambassador of Friendship) என்ற அடையாளத்தைப் பெற்றது.

வரலாற்றின் பக்கங்களில் சுவாரசியமான கதைகள் இன்னும் மறைக்கப்பட்டுள்ளது.

அவற்றை ஒவ்வொன்றாக வெளிக்கொணர்வது நம்மை மயக்கி விடும்.