News Tamil OnlineTamil NewsThatstamil Newsசெய்திகள்

Unknown Facts: இதுனால தான் விமானம் வெள்ளை நிறத்துல இருக்கா..!

Unknown Facts: இதுனால தான் விமானம் வெள்ளை நிறத்துல இருக்கா..!

பொதுவாக எல்லா விமானத்துலயும் எதுக்கு வெள்ளை நிறத்துல paint பண்ணிருக்காங்கனு தெரியுமா ?

Some Interesting Facts

பொதுவாக எல்லா விமானத்துலயும் எதுக்கு வெள்ளை நிறத்துல paint பண்ணிருக்காங்கனு தெரியுமா ?

ஏன்னா, வெள்ளை நிறத்துக்கு பொதுவாகவே ஒளியை பிரதிபலிக்குற தன்மை இருக்கு, சூரியனால ஏற்படும் கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய கூடிய சேதத்தை குறைக்கிறது. அதுமட்டும் இல்ல, மற்ற நிறங்களை உபயோகித்தால், அது காலப்போக்கில் மங்கி விடும், ஏனென்றால், மற்ற நிறங்களை விட வெள்ளை நிறத்தின் எடை குறைவாக இருப்பது தான் இதற்கு காரணம். மேலும் விமானத்திற்கு விபத்து ஏற்பட்டால், அது வெள்ளை நிறத்தில் இருப்பதால் உடனடியாக கண்டுபுடிக்கவும் இது உதவுகிறது.

வெள்ளை நிறத்துக்கு எப்படி ஒரு power பாத்திங்களா..

பெண்கள் அணியும் ஹீல்ஸ்க்கும் யானைக்கும் என்ன சம்மந்தம்?

இருக்குங்க வாங்க சொல்லுறேன், நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மாறிவிட்டது.

Shoe Intresting Facts

இதில் குறிப்பாக பெண்கள் அணியும் உயரமான செருப்புகள். ஹை ஹீல்ஸ் என்று சொல்லப்படும் இந்த வித்தியாசமான காலணிகளை இன்று பல பெண்கள் அணிவதை நீங்க பாத்திருப்பீங்க…
இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இதனால் விளைவுகள் ஏதேனும் வருமா?

அப்படினு பாத்தா நிறையவே இருக்குங்க, என்ன நம்ம முடியலையா, ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல், கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகள் வரும், அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன.
இந்த மாதிரி பிரச்சனை இருக்குனு தெரிஞ்சாலும் எல்லாரும் அதை பயன்படுத்திட்டு தான் இருகாங்க,

அது மட்டும் இல்லங்க, ஒரு 2,700 கிலோ கிராம் எடை உள்ள யானை தரையில் நடக்கும் போது உருவாக கூடிய அழுத்தத்தை விட 50 கிலோ கிராம் எடை உள்ள பெண் ஹீல்ஸ் அணிந்து நடக்கும் பொழுது தரையில் உருவாகும் அழுத்தம் அதிகமகா இருக்கும்.
இனிமே யாராவது ஹை ஹீல்ஸ் போட்டுட்டு நடப்பீர்களா?

Unknown Facts: நீந்தவே தெரியாத மீனா!

நீர்வாழ் உயிரினங்கள் எல்லாமே நீந்தும்னு கேள்விப்பட்டிருப்போம் ஆனா, கடல்ல வாழக்கூடிய ஒரு மீனுக்கு நீந்தவே தெரியாதுன்னா நம்புவீங்களா?

fish facts

கடல்ல இருக்கக்கூடிய Bat Fish தான் அந்த வித்தியாசமான மீன் வகை, இந்த மீன் பார்க்க வௌவால் மாதிரி இருப்பதால் இதற்கு Bat Fish என்று பெயர். இந்த மீன் எப்பொழுதும் கடலின் தரைப்பகுதியில் தான் வசிக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த மீனிற்கு நீந்த தெரியாது, மற்றும் இந்த மீன் மனிதர்கள் தரையில் நடப்பது போலவே அதன் துடுப்பை பயன்படுத்தி மட்டுமே ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு நகருகிறது.

இடத்திற்கு நகர்ந்து போக கூடிய மீனும் இருக்கானு ஆச்சரியமா இருக்குதுல்ல…

Unknown Facts: ஆபத்தான Gripe Water:

அச்சச்சோ குழந்த அழுகுது! அப்போ உடனே Gripe Water குடு, நான் குழந்தையா இருக்கும் போது என்னோட அம்மாவும் Gripe Water தான் தந்தாங்க, இப்படி நிறைய விளம்பரத்தை நம்மி பல பேர் ஏமாந்து போயிட்டீங்க.

Gripe Water Facts

என்ன ஏமாந்து விட்டோமா? அப்படி தானே கேட்குறீங்க?

ஆமாங்க, குழந்த அழுதா Gripe Water கொடுக்கிறது தலைமுறை தலைமுறையாவே இருக்கு, இதுநாள் வரைக்கும் நடைமுறையில் எல்லோரும் பயன்படுத்துகிறோம், ஆனால் இந்த Gripe Water ரினால் ஏற்படும் பின்விளைவுகள் உங்களுக்கு தெரியுமா?

தெரிஞ்சிக்கோங்க. குழந்தைகளுக்கு Gripe Water கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமம், அதற்கு காரணம் Gripe Water ல் Bronopol என்ற பொருள் சேர்க்கப்படுவது தான், இந்த பொருள் preservative ஆன அழகு சாதன பொருள்களில் சேர்க்கப்பட கூடியது. ஆனால், சாப்பிடக்கூடிய பொருட்கள்களில் Gripe Water ல் மட்டுமே இந்த Bronopol சேர்க்கப்படுகிறது.
இதனால் வரும் பின்விளைவுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?


Gripe Water தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு உடல் எடை குறைவு, இரைப்பை குடல் நச்சுத்தன்மை மற்றும் புற்றுநோய் வரகூடிய வாய்ப்பும் அதிகம் உள்ளது. கூடவே இதனால் இறப்பு கூட வரும்.
இனி உங்க குழந்தை அழுதா என்ன பண்ணுவீங்க?

நிலத்திலும் மீன் வாழ்கிறதா!

ஆமாங்க, Mud Skipper Fish என்ற மீன்கள் பெரும்பாலும், 90 சதவீதம் நிலத்துலதான் வாழுது.

Different Fish

இந்த மீன்கள் தங்களோட துடுப்பு பகுதியை ஈரம் செய்ய மட்டுமே தண்ணீருக்குள் செல்கிறது, இவை நிலத்துல் இருக்கும் போது மிகவும் புத்துணர்ச்சியோட காணப்படும். உணவின் போதும், மற்ற மீன்களுடன் இருக்கும் போதும் மிகுந்த செயல்பாட்டில் இருக்கும்.

இவை வெப்ப மண்டலங்கள், மித வெப்ப மண்டலங்கள் மற்றும் சதுப்புநில பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. மேலும் Mud Skipper நிலநீர்வாழ் மாதிரியான உடல்தகவமைப்பு பெற்றுள்ளது.
இந்த மீன் எப்படி சுவாசிக்கும் தெரியுமா?

இந்த மீன்கள் தோல் மூலமாக சுவாசிக்கும், நீரில் இருந்து வெளியில் வரும் பொழுது சுவாசிக்க, அவை தங்களது நீண்ட செவுள் அறைகளில் காற்று குமிழிகளை சேகரித்து வைத்து கொள்கின்றன. நிலத்திற்கு வரும் பொழுது இந்த காற்று குமிழிகளை சுவாசித்து கொள்வது தான் இதன் சிறப்பம்சம்.

Also Read: Unknown Facts About World:55 லட்சம் கிலோ எடை உடைய மேகம்..!

மேலும் இதன் மார்பிலுள்ள பக்கவாட்டு துடுப்புகள் மூலமாக நிலத்தில் நடக்கும் திறன் பெற்றவை. இதன் வளைவான கவண் போன்ற உடலினால் உந்தி தாவும் தன்மையும் இதற்கு உண்டு.
முக்கியமாக அதிக நேரம் தண்ணீரில் இருந்தால் இந்த மீன்கள் இறந்து போய்விடும்.
அப்போ இந்த மீன் வித்தியாசமானது தானே.

உங்களுக்கான கேள்விகள்:

கேள்வி: எடையில் சிறியவன் நிறத்தில் பால் போன்றவன் யார் அவன்?

விடை : வெள்ளை நிறம்


கேள்வி: என் மேல் நின்றால் ஏணியின் உயரம் நான் யார் ?

விடை : ஹை ஹீல்ஸ்


கேள்வி: பார்க்க வௌவால் போன்றவன் ஆனால் பறக்க மாட்டான் நீருக்குள் இருப்பான் அவன் யார்?

விடை : Bat Fish


கேள்வி: என்னை குடித்தால் சிணுங்குபவன் சிரிப்பான் நான் யார்?

விடை : Gripe Water


கேள்வி: நீரிலும் நீந்துவான், நிலத்திலும் நீந்துவான் அவன் யார் ?

விடை : Mud Skipper Fish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *