Health Benefits Of Walnuts: ஊறவைத்த வால்நட் பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது தெரியுமா ?
Health Benefits Of Walnuts:ஊறவைத்த வால்நட் பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது தெரியுமா ?
மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சுவையிலும் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பது வால்நட் என்னும் அக்ரூட். இது நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது .
இந்த வால்நட் என்று கூறப்படும் அக்ரூட்டை ஊறவைத்து காலையில் சாப்பிடுவது நம் உடலுக்கு பலனை தரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வால்நட்டை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். ஊறவைத்த வால்நட்டை உண்பதால் ஏற்படும் நன்மைகள் அறிவோம் .

வால்நட்டின் சிறப்பம்சம்?
வால்நட் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் அளவிற்கதிகமான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது.அதுமட்டுமல்லாது ஆன்டி ஆக்சிடன்ட்களும் அளவிற்கதிகமாக உள்ளது. பெரும்பாலும் பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக இருக்கிறது.
இது இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை நுட்பமாக கரைக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. மற்ற நட்ஸ் வகைகளை விட கசப்பாக இருப்பதால் இதன் சுவை பிடிக்காதவர்கள் தேனில் கலந்து சாப்பிடலாம். ஊறவைத்து சாப்பிடும்போது அதிக அளவு கசப்புத் தன்மை தெரியாது.
வால்நட்ஸில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் :
கொழுப்பு – 0 கிராம்
சோடியம் – 0.2 மில்லி கிராம்
பொட்டாசியம் – 441 மில்லி கிராம்
புரதச்சத்து – 15 கிராம்
விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12 மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் வால்நட்டில் அடங்கியுள்ளது.
மூளை செயல்படும் விதம் :
வால்நட்டில் இருக்கும் புரதச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து மூளை வழியாக ஆற்றலை நன்கு செயல்பட வைக்கிறது. அதனால்தான் வளரும் குழந்தைகளுக்கு இந்த வால்நட்ஸை தினமும் காலை எழுந்தவுடன் 5 வீதம் சாப்பிடக் கொடுப்பது நல்லது.
இதில் சேர்க்கப்படும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அமிலம் ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றாலை மேம்படுத்துகிறது.
How to Prevent Breast Cancer?
தினமும் ஊறவைத்த வால்நட்ஸை பெண்கள் உட்கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம். அது மட்டுமல்லாது இந்த வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாகவும் ஆய்வில் மூலம் அறியப்படுகிறது .
எனவே புற்றுநோயின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க விரும்பினால், தினமும் வால்நட்ஸை தவறாது சாப்பிட வேண்டும் .
நோய் எதிர்ப்பு சக்தி:
அக்ரூட் பருப்பில் அதிகப்படியான புரதச்சத்தும், ஆரோக்கியமான கொழுப்பும் இருப்பதால் இந்த வால்நட் அதிக அளவிலான ஆற்றலை நம் உடலுக்கு அளிக்கிறது.
இந்த வால்நட்ஸை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து உட்கொண்டு வர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதன் மூலம் நம் உடலை எந்தவொரு நோய் தொற்றுகளும் சுலபமாக தாக்கிவிட முடியாது.
தூக்கமின்மை:
இரவில் சிலர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர் . குறிப்பாக ஷிப்ட் மாறி வேலை செய்யும் பெரும்பானவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்ககூடும்.
அப்படி தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் உணவு சாப்பிட்ட பின் பாலில் சேர்த்தோ அல்லது தனியாகவோ அக்ரூட்டை உட்கொள்ளலாம். இதன் மூலம் தூக்கமின்மை பிரச்சினை நீங்கி ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்
வயதான தோற்றத்தை தடுக்கும் முறை :
வால்நட்ஸ் உடல் வறட்சியைப் போக்குகிறது. நெற்றி மற்றும் சருமத்தில் ஏற்படக் கூடிய சருமச் சுருக்கத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டுள்ளது . சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளவும் உதவுகிறது .
எனவே தினமும் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதால் உடல் வறட்சியினால் ஏற்படும் தோல் சுருக்கம் சரியாகும்.
சிறு துளி பாலுடன் சில வால்நட்ஸை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து, சருமத்துக்கு ஸ்கிரப்பாகவும் பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள மாசுக்கள் மற்றும் கருந்திட்டுக்களை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அஜீரணக் கோளாறை தடுக்கும் முறை :
உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்குமே அடிப்படை மலச்சிக்கல் . அதற்கு காரணம் அஜீரணக் கோளாறு தான்.
இப்படிப்பட்ட செரிமான பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகளை சரி செய்ய முடியும். மேலும் இது வயிற்றில் சுரக்கும் அமிலங்களையும் சீராக்கும்.
பித்தப்பை கற்களை தடுக்கும் முறை:
பித்தப்பைகளில் உள்ள கற்களை கரைக்கும் தன்மை இந்த அக்ரூட்டுக்கு இருக்கிறது .
எனவே பித்தப்பையில் கற்கள் உள்ளவர்கள் ஊறவைத்த வால்நட்ஸை தினமும் சாப்பிட்டு வர பித்தப்பை கற்கள் படிப்படியாக கரைய தொடங்கும். குறிப்பாக வலிகள் இல்லாமல் கற்கள் வெளியேறுகிறது.
எடை குறைக்கும் வழி :
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பொதுவாக தங்கள் உணவில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து புரதத்தை எடுத்துக் கொள்வார்கள். அதற்கான நட்ஸை அதிகமாக உணவில் எடுத்து கொள்வார்கள்.
அப்படி எடுத்துக் கொள்ளும்போது மற்ற நட்ஸ்களைக் காட்டிலும் உங்கள் டயட்டில் நீங்கள் அதிகமாக அக்ரூட்டை எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையை கையாழ்வதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும் .
இதன் மூலம் உடல் எடை குறைய தொடங்கும்.
Also Read: Papaya For Weight Loss : முக அழகிற்கு பயன்படும் பப்பாளி எடை குறைக்க கூட உதவுமா…!
தலைமுடி சம்மந்தமான பிரச்சினைகள் :
அக்ரூட்டில் அதிக அளவில் பயோட்டின் என்று சொல்லப்படும் வைட்டமின் பி7 ஊட்டச்சத்து மிகுதியாக காணப்படுவதால், இது தலைமுடியின் வலிமையை அதிகரித்து, தலைமுடி உதிர்வதைக் குறைக்கும் .
தலை முடிக்கு அதிகப்படியான வளர்ச்சியை அளிக்கிறது.