News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

What Is Normal Oxygen Level: இரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

What Is Normal Oxygen Level: இரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

நாம் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாதது. இது நம்மை சுவாசிக்க வைப்பது மட்டுமல்லாமல், நமது இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் ஆக்சிஜனைப் பரப்பி, முக்கிய உறுப்புகள், செல்கள் மற்றும் உடலில் உள்ள திசுக்கள் அனைத்தின் சீரான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

symptoms of low oxygen - newstamilonline

நமது இரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லாத போது, அது ஹைபோக்ஸீமியா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹைபோக்ஸீமியா கடுமையானதாக இருக்கலாம்.

ஆனால் ஒருவரது இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தால், நமது உடல் நமக்கு பல வழிகளில் தெரியப்படுத்தும்.

Low Oxygen Levels:

இரத்தத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு இல்லை என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Low Oxygen Levels:தலைச்சுற்றல்:

இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தால் வெளிப்படும் ஒரு பொதுவான அறிகுறி வழக்கத்தை விட பலவீனமாக இருப்பது அல்லது தலைச்சுற்றல் ஏற்படுவது.

உங்களுக்கு இதுப்போன்று எப்போதாவது நடத்துள்ளதா? ஆம் என்றால், உடனே அதற்கு இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக உள்ளது என்று அர்த்தமல்ல.

பெரும்பாலான மக்கள் உட்கார்ந்து வேகமாக எழுந்தால் மயக்கம் வருவதை அனுபவித்திருக்கிறார்கள்.

ஆனால் ஒருவரது இரத்தத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு இல்லாமல் இருந்தால், இம்மாதிரியான பிரச்சனையை சிறு வேலை செய்தாலும் தினந்தோறும் அனுபவிப்பார்கள்.

நாள்பட்ட களைப்பு அல்லது சோர்வு நாள்பட்ட களைப்பு என்பது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் இரத்தத்தில் இல்லை என்பதற்கான குறிப்பிடத்தக்க அறிகுறியாகும்.

ஒருவர் சோர்வாவதற்கு பல்வேறு வகையான உணர்வுகள் உள்ளன. ஆனால் ஹைபோக்ஸீமியாவுடன் தொடர்புடைய சோர்வு நாள்பட்டது மற்றும் ஒருபோதும் முடிவடையாது.

மேலும் ஒருவர் வழக்கத்தை விட வேகமாக சோர்வடைந்தால், அது இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

வேகமான இதயத் துடிப்பு:

ஒருவரது இதயம் வேகமாக துடிக்கும் போது தான் பதட்ட உணர்வு எழுகிறது. எப்போது இதயம் உடலின் அனைத்து உறுப்புக்களும் ஆக்சிஜனைப் பெற கடுமையாக உழைக்கிறதோ, அப்போது இதயம் வேகமாக துடிக்கிறது. உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் இருந்தால் இம்மாதிரியான நிலை ஏற்பட வாய்ப்பில்லை. அது இல்லாத போது இந்நிலை ஏற்படுகிறது.

மூச்சுத் திணறல்:

உடலில் ஆக்சிஜன் போதுமான அளவு இல்லாத போது சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்கும் உள்ளிழுப்பதற்கும் உங்களுக்கு சிரமமாக இருக்கும் போது, உங்கள் இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜனைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இரத்தத்தில் ஆக்சிஜன் இல்லாதவர்கள், கடுமையான செயலை செய்தாலும் செய்யாவிட்டாலும் மூச்சுத்திணறலை சந்திக்க நேரிடும்.

மனக்குழப்பம்:

சிறிது நேரம் மூச்சை இழுத்துப்பிடித்திருந்தாலும், பலர் தலைவலியை அனுபவிப்பார்கள். இதன் தீவிரத்தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் தலைவலி வந்தாலே, இரத்தத்தில் ஆக்சிஜன் இல்லை என்று அர்த்தமல்ல.

ஆனால் குழப்பம், தலைச்சுற்றல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவற்றுடன் சேர்ந்து, தலைவலி வந்தால், உடலுக்கு தேவையான ஆக்சிஜன் இல்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே இம்மாதிரியான அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடலில் ஆக்சிஜன் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

Also Read: Bamboo rice benefits: உங்கள் வீட்டிற்கு மூங்கில் அரிசியை கொண்டு வாருங்கள்..!

இரும்புச்சத்துள்ள உணவுகள் இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது ஹைபோக்ஸீமியாவிலிருந்து மீள உதவும். உடலில் இரும்புச்சத்தில் குறைபாடு ஏற்படும் போது தான், அது உடலில் ஆக்சிஜன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இந்த பிரச்சனையை உணவுகளின் மூலம் சரிசெய்ய முயற்சி செய்யலாம்.