Fiber Food: அடிக்கடி சோளம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடா..?
Fiber Food: அடிக்கடி சோளம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடா..?
நம் அனைவருக்கும் கொறிக்க கூடிய உணவுகள் என்றாலே மிகவும் பிடிக்கும். குறிப்பாக பாப் கார்ன், சிப்ஸ், மிக்ஸர் போன்றவற்றை நாம் அதிகம் விரும்பி சாப்பிடுவோம்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் பிடித்தமான பழக்கமாகும். நாம் சாப்பிட கூடிய ஒவ்வொரு உணவின் நன்மை மற்றும் தீமைகளை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இந்த பதிவில் சோளம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மையும், அதிகமாக சாப்பிடுவதால் உண்டாகும் தீமையும் தெரிந்து கொள்ளுங்கள்
Fiber Food:
சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது.
சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
சோளத்தில் வைட்டமின் B சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் சோளத்தில் இருக்கின்றன.
கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது.

சராசரி உடல் எடைக்கு குறைவாக இருப்பவர்கள் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கூடிய விரைவில் திடலாத்திரமான எடையை பெற முடியும்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு நீங்கும்.
சோளத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதிக்கிறது.
சோள மாவை தண்ணீர் அல்லது சிறிது பால் கலந்து நன்றாக முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகப்பரு தழும்புகள், எண்ணெய் வழிதல் போன்றவை சரியாகும்.
தீமைகள்:
நீங்கள் அதிகமாக சோளத்தை விரும்பி சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க கூடும். ஏனெனில், இவற்றில் கார்போஹைட்ரெட் அளவு அதிகமாக உள்ளதாம். மேலும், சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணாமல் இருப்பது நல்லது.
உடல் பருமன் கூடுவதற்கு இந்த சோளமும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சோளத்தை சாப்பிடுவதால் இதில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரெட் உடல் எடையை கூட செய்து விடும்.
மிகவும் ருசியாக உள்ளது என்று நீங்கள் சோளத்தை அதிகமாக சாப்பிட்டு விட்டால் பல வித ஒவ்வாமைகள் ஏற்பட கூடும்.
உங்களின் உடலில் சொறிகள், அரிப்புகள் போன்றவற்றையும் இது ஏற்படுத்த கூடும் என உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சோளம் சாப்பிடும் பலருக்கு குடல் எரிச்சல் உண்டாக கூடும்.
எனவே, சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். சோளம் சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு பற்கள் சொத்தையாக கூட ஆகலாம்.
Also Read: Foods Not to Eat with Milk: பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்னெ தெரியுமா..?
ஏனெனில் இதில் உள்ள சர்க்கரை உங்களின் பற்களை பாதித்து விடும். முடிந்த வரை அதிக அளவில் சோளத்தை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.