Unknown Facts About World:55 லட்சம் கிலோ எடை உடைய மேகம்..!
Unknown Facts About World: 55 லட்சம் கிலோ எடை உடைய மேகம்.
ஆஹா மேகங்களுக்கும் எடை உண்டா
என்னங்க நம்பமுடியலயா..ஆமா மேகங்களுக்கும் எடை உண்டு, அது எப்படினானானா…

Unknown Facts About World:
நாம் எல்லாம் நினைத்திருப்போம் மேகம் பஞ்சு போன்று மென்மையா இருப்பதால் அது எளிதில் காற்றில் இடம்விட்டு இடம் நகர்கிறது என்று. ஆனால் உண்மையில் ஒரு மேகத்தின் சராசரியான எடையானது 55 லட்சம் கிலோ எடையை விட அதிகமாக இருக்குமாம். இதற்கான காரணம் மேகத்திற்கிடைய நீர்துளிகள் இருப்பது தான். இதுதான் பின்பு மழையாக பொழியும், இதனால் மேகத்திற்கு எடை அதிகமாக இருக்கும்.
இதான் சொல்லுவாங்க ஆள பார்த்து எடை போடதீங்கனு…அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த மேகம் தாங்க.
என்ன நாக்கு ஒரு தசைப்பகுதியா..

நம்ம உடம்பில் உள்ள மிகவும் வலிமையான தசைபகுதி நம்ம கை அல்லது காலோ இல்லங்க, வேறு என்னனு தெரியுமா? அதாங்க நாக்கு.
நாக்குதான் வலிமையான தசைபகுதி. ஏனெனில் இதுதான் நம் உடலிலேயே புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே தசை. அதுமட்டுமின்றி பாக்டீரியாக்களை அழிக்கும். நாம் தூங்கும் போது நம் வாயில் சுரக்கும் உமிழ் நீரை வெளியே விடாமல் வாய்குள்ளேயே வைத்திருக்கவும் செய்யும். அதுமட்டுமால்லாமல் நாம என்னதான் சூடான, காரமான, குளிர்ச்சியான உணவுகளை எடுத்துகொண்டாலும் நாக்கிற்கு பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவதில்லை.
அப்போ சொல்லுங்க நாக்கு தானே வலிமையான தசை.
சேட்ட பண்ணா தோல உருச்சிடுவேன் பாத்துக்கோ..
சேட்ட பண்ணா தோல உருச்சிடுவேன் பாத்துக்கோ.. இப்படி பேச்சுவாக்குல திட்டுவோம்..ஆனா இதுவே தண்டனையை இருந்துனு சொன்ன நம்புவீங்களா…!

நம்பிதான் ஆகணும் ..ஹா ஹா ஹா
ஆமாங்க, இந்த காலத்தில் குழந்தைகளை செல்லமா மிரட்ட பயன்படுத்திய இந்த வார்த்தை ஒரு காலத்தில் உண்மையாகவே தண்டனையாக வழங்கப்பட்து. அந்தகாலத்தில் பெண்களுக்கு குற்றங்கள் செய்ய கூடிய மனிதர்களுக்கு, மன்னர்கள் தோல் உரித்தல் என்ற தண்டனையை வழங்கிவந்துள்ளனர்.
புதிதாக உரிக்கப்பட ஆட்டின் தோலில் உப்பினை தடவி அதை, குற்றவாளியின் உடலில் கெட்டி, ஊருக்கு வெளியில் இருக்கும் கல்லில் வெயில் படும்படி கெட்டி வைத்து குற்றவாளியின் உடல் காயும்படி விடுவார்களாம். பின் அந்த ஆட்டின் தோலை உரித்து எடுக்கும் போது குற்றவாளியின் தோலும் உடன் சேர்ந்து வந்து வலியால் இறந்து போவானாம்.
இவ்வளவு கொடூரமாக இருந்தாலும் இந்த சட்டம் இன்று ஏன் இல்லை என நினைக்கவைக்கிறது இந்தகாலச்சட்டங்கள்.
என்ன தும்மல் வந்தா அடக்குற ஆளா நீங்க..
தும்மல் வந்தா அடக்குற ஆளா நீங்க இனிமே என்ன ஆனாலும் அதை மட்டும் பண்ணாதீங்க.

தும்மல் வரும் போது அதை வெளிவிடமால் அடக்கி வைத்தால், அதிலிருந்து வரக்கூடிய pressure நம் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் இருக்க கூடிய blood vessels யை வெடிக்க கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாம்.
அதனால், அந்த தப்ப மட்டும் பண்ணவே பண்ணாதீங்க.
Quartz அப்டிங்குற பெயரை எங்கயாச்சும் கேள்விப்பட்டிருக்கிர்களா..
ஆமாங்க நம்ம தினமும் போடுற watch ல தான். இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம் ஏன் அந்த பெயர் watch ல இருக்குனு?
சொல்லுறேன் கேளுங்க,

அந்த காலத்தில் மக்கள் பயன்படுத்தி வந்த பழைய கடிகாரங்களினால் நேரத்தினை சரியாக கணிக்க முடியாமல் இருந்தது. அப்போது மக்கள் புதிய கடிகாரத்தை உருவாக்குவதற்காக Quartz என்கிற crystal கல்லை பயன்படுத்தினர். அதை வைத்து தான் சரியான நேரத்தையும் கணிக்க முடிந்ததாம்.
எனவேதான், இந்த கால watch company களும், தங்கள் கடிகாரம் சிறந்தது என்பதை கூறுவதற்கு அவர்கள் Quartz என்ற சொல்லை முத்திரை இடுகின்றனர்.
என்ன எல்லாரும் இப்போ உங்க watch தானே பார்க்குறீங்க.
கோவிலுக்குள்ள போகும் போது காலணிகளை வெளியே போடுறோம் ஏன் ?
இதுக்கு ஆன்மீக ரீதியா பலகாரணங்கள் இருந்தாலும், அறிவியல் ரீதியாகவும் சில காரணங்கள் இருக்கு.

பொதுவாக அந்த காலங்களில் கோவில்களை கெட்டுவதற்கு நல்ல (electric and magnetic ) ஈர்ப்பு விசை உள்ள நேர்மறையான (positive ) இடத்தை தான் தேர்வுசெய்வர்களாம், கோவில்களின் தரைகளும் அந்த அமைப்பிலேயே வடிவமைக்கப் பட்டிருக்குமாம். இந்த ஈர்ப்புவிசை நாம் நடக்கும் போது காலின் வழியாக உடலில் உள் சென்று நமக்கு நேர்மறையான எண்ணங்களை தரும் வகையில் அமையும் என்பதற்காக அக் காலங்களிலேயே நம் முன்னோர்கள் கால்களில் காலணி இல்லாமல் பழக்கப்படுத்தி வந்துள்ளனர்.
பார்த்தீர்களா நம் முன்னோர்களின் Technology பவர்.
உங்களுக்கான கேள்விகள்:
கேள்வி: என்னால் பறக்க முடியும் ஆனால் இறக்கைகள் கிடையாது, என்னால் அழ முடியும் ஆனால் கண்கள் கிடையாது நான் யார்?
விடை : மேகம்
கேள்வி: வெள்ளை முட்களால் வரப்பு கட்டியிருப்பான், வரப்பு உடைந்தாலும் நீர் வெளியேறாமல் பாதுகாப்பான் அவன் யார்?
விடை : நாக்கு
கேள்வி: தோல் உரிக்கும் தண்டனை எந்த குற்றத்திற்கு வழங்கப்பட்டது?
விடை : பெண்களுக்கு நடக்கக்கூடிய குற்றங்கள்
கேள்வி: இவனை அடக்கி வைத்தால் பிரளயமே வெடிக்கும், அது யார்?
விடை : தும்மல்
கேள்வி: எதை பயன்படுத்தி அந்த காலத்தில் துல்லியமான கடிகாரம் உருவாக்கப்பட்டது?
விடை : Quartz crystal
கேள்வி: கோவில்களின் தரைகள் எப்படி வடிவமைக்கப்பட்டன?
விடை : ஈர்ப்பு விசை உள்ள நேர்மறையான உணர்வுடன்