Remedies For Gastric Problem:நோயை விரட்டும் குப்பைக்கீரை ..!
Remedies For Gastric Problem:நோயை விரட்டும் குப்பைக்கீரை ..!
முளைக்கீரை வகையினை சேர்ந்தது தான் குப்பைக்கீரை, இக்கீரை வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரை வகையினை சேர்ந்தது.
இக்கீரை குப்பைக்கூலங்களில் தானாகவே வளரும் இயல்பைக் கொண்டுள்ளது.
மருத்துவம் நிறைந்த இந்த கீரை குப்பைகளில் வளர்வதாலும், குப்பை போன்ற உடம்பை தேற்றுவதாலுமே குப்பைக் கீரை என பெயர் பெற்றது எனவும் கூறுவார்கள்.
மற்றும் இவை குப்பைகள் அதிகம் உள்ள இடங்களில் செழித்து வளர்வதால் குப்பைக்கீரை என்ற பெயர் வந்தது எனவும் கூறலாம்.
இது சாம்பல் நிறத்தில் இருக்கும். குப்பைக்கீரையில் வெளிரிய சிவப்பு நிறத்தில் பூக்கள் இருக்கும்.

குப்பை கீரையில் முற்றிய இலைகளை விட இளந்தளிர்களே சமைக்க சிறந்தது. இந்த கீரையில் நார்சத்து மிகுதியாக உள்ளது.
வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை இதில் அதிக அளவு நிறைந்துள்ளன.
இக்கீரை சாதாரண சந்தைகளில் பெரும்பாலும் விற்க வருவதில்லை என்றாலும், கிராமபுறங்கள், நகரங்களில் சாலையோரங்களில் வளரும் தன்மைக் கொண்டவை.
குப்பைக்கீரை வேறு /குப்பைமேனி வேறு:
நம்மில் சில பேர் இரண்டையும் ஒரே கீரை என்று எண்ணுவர், ஆனால், அது தவறு, குப்பைக்கீரை வேறு, குப்பைமேனி வேறு, இவை இரண்டும் தோற்றத்திலும் மாறுபட்டு தான் இருக்கும்.
குப்பைக்கீரை, முளைக்கீரை போன்று தோற்றமுடியது, இதற்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு.மேலும், குப்பைகீரையானது தண்டுக்கீரை வகையைச் சார்ந்த கீரை வகையாகும்.
கால்சியம் சத்துகள் நிறைந்துள்ள இந்த கீரையில் வைட்டமின்கள் A , B கள் நிறைந்து காணப்படுகின்றன.
இக்கீரை எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இதில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது.
இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம்.குப்பைக்கீரையுடன், துவரம் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால், குடல் புண்கள் குணமாகும்.
குப்பைக்கீரையுடன் மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து, கஷாயமாக காய்த்து குடித்தால், நன்றாகப் பசி எடுக்கும்.
நீர்க்கடுப்பு நோய் உள்ளவர்கள் குப்பைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் போதும், எளிதில் மறைந்துவிடும்.
குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து சூப் செய்து குடித்தால் மூட்டுவலி குணமாகும்.
விஷ ஜந்துக்களான பாம்பு, தேள் போன்றவை கடித்தால் விஷ முறிவுக்கு கூட இது சிறந்த ஓர் மருந்தாக இருக்கிறது.
சோம்பலை அகற்றி புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும், நம் அறிவையும் கூர்மையாக்கும்.
இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது.
மாலைக்கண் நோய் தீருவதற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.
Remedies For Gastric Problem:
ரொம்ப நாட்கள் இருக்கும் வாயு தொல்லை நீங்குவதற்கு குப்பைக் கீரையுடன் பூண்டு, சீரகம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.
குப்பைக் கீரையானது பசியைத்தூண்டும், குடலை சுத்தமாக்கும், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
இக்கீரையை கடைந்து உண்டால் உட்சூடு, இரத்த கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும்.அத்துடன் கண் குளிர்ச்சியும் பெறும்.
குப்பைக்கீரையானது உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் தன்மைக் கொண்டது.
குப்பைக்கீரையுடன் மஞ்சள் தூள்,1/2 ஸ்பூன் ஓமம், இரண்டையும் சேர்த்து நன்றாக காய்த்து அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமடையும்.
Nerves Strengthening Food:
நரம்புத் தளர்ச்சி உடையவர்கள் தினமும் குப்பைக்கீரையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முதியோர்களுக்கு குப்பைக்கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நரம்புகளுக்கும் எலும்புகளுக்கும் தேவையான சக்தியை இது அளிக்கும்.
மேலும், இது உடல் பலவீனத்தை போக்கி பலம் உண்டாவதற்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது.
Also Read: https://www.newstamilonline.com/home-remedies-for-fever-sprouts-cure-fever-in-one-day/
How To Get Rid Of Acne Scars?
உடலில் ஏற்படும் கட்டிகள், தழும்பு, மரு, முகப்பரு போன்றவை குணமாக இந்தக் குப்பைக்கீரையினை எடுத்து அரைத்து பூசிவந்தால் போதும் கட்டிகள் கரைந்து குணமாகும்.
அடிபட்ட இடங்களில் காயம் ஏற்பட்டால் குப்பைக்கீரையை அரைத்து மஞ்சள் சேர்த்து பூசினால் வீக்கம் குறையும்.
எனவே பல வித மருத்துவ குணங்களை கொண்ட இந்தக் குப்பைக்கீரையை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.