Coriander Leaves: கொத்தமல்லி இலைகளில் இவ்வளவு மருத்துவ குணங்களா..!
Coriander Leaves: கொத்தமல்லி இலைகளில் இவ்வளவு மருத்துவ குணங்களா..!
கொத்தமல்லி அல்லது மல்லி என்று அழைக்கப்படும் இது ஓர் மூலிகையும், சமையலுக்கு பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும்.
இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஓர் சிறு செடி வகை ஆகும். இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது.

Coriander Leaves:
கொத்தமல்லியின் (Coriander) இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
கொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது.
இதனை பயிரிட ஒரு ஏக்கருக்கு சுமாராக 12-15 கிலோ விதை வரை தேவைப்படும்.
நிலத்தினை உழுது, தொழு உரம் இட்டு, பாத்தி கட்டிய நீர் பாய்ச்சப்பட்ட நிலத்தில் இதன் விதைகளை தூவி, நிலத்தினை கிளறி விட்டால் போதும், செடி வளர ஆரம்பிக்கும்.
இதற்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை என 40 நாட்களில் 10 முறை மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் இதனை அறுவடை செய்ய வேண்டும். வாழையில் ஊடுபயிராக கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில் வளர்த்தி சாகுபடி செய்து வருகின்றனர்.
கொத்தமல்லியின் விதைகள் பெரும்பாலும் சாம்பார், ரசம் போன்று இந்திய மக்கள் செய்யும் சமையல்களில் பயன்படுகின்றன.
கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர்.
Coriander Leaves Benefits:
கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது ரொம்ப நல்லது.
ஏனெனில் அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்குகிறது.
இது நம் உடலில் நன்கு பசியைத் தூண்டுவதற்கு உதவுகிறது.
மேலும் வாயு சம்பந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்கிறது.
கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம் (Calcium), இரும்பு (Iron) சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் குறையும்.
இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பு வருவது குறையும்.
கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இரத்தசோகை (Anemia) வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது.
உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கும் உதவுகிறது.
அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மனிதனின் எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான Vitamin E இதில் நிறைந்து உள்ளது.
செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் (Enzymes) சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பியையும் தூண்ட இந்த இலை பயன்படுகிறது.
இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது.
எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லி இலையைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
கொத்தமல்லியில் உள்ள விட்டமின் A, மற்றும் C, பாஸ்பரஸ் கொண்ட தாதுஉப்புக்கள், அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.
கண்ணில் ஏற்படக்கூடிய அதிகப்படியான அழுத்தத்தைப் போக்குகிறது.
இரவில் நன்றாக தூக்கம் வர உணவில் கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் போதும், நல்ல பலனை தரும்.

Uses of Coriander:
உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லி இலையை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி சாப்பிட்டால் போதும் உடல் சூடு குறைந்து பசியை தூண்டி விடும்.
வயதாகும்போது ஏற்படக்கூடிய பார்வைக் குறைபாடுகளைத் தாமதப்படுத்துகிறது.
கொத்தமல்லி இலைகளுக்கு சரும நோய்கள் பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவற்றை அழிக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மையும் அதிகமுண்டு.
எனவே, சில சரும நோய்களை நீக்குவதில் கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது.
தோல் தடிப்பு, அரிப்பு மற்றும் இதர சருமம் சம்பந்தமான வியாதிகளுக்கு புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும்.
மேலும், இதன் இலைகளில் நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
உடலுக்கு ஏற்படும் தொற்று நோய்களான அனைத்து வகையான அம்மை நோய்களுக்கும் எதிராக கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது.
எனவே, அம்மை நோய் பாதித்தவர்கள் கொத்தமல்லி அதிகம் சாப்பிட்டு வர விரைவில் குணம் கிடைக்கும்.
காரமான உணவுகளை சாப்பிடுவது, வாய் மற்றும் பற்களை சுகாதாரமாக வைத்து கொள்ளாதது போன்ற காரணங்களால் சிலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.
கொத்தமல்லி இலையில் சிட்ரோநெல்லோல் எனப்படும் சிறப்பான கிருமிநாசினித் வேதிப்பொருள் உள்ளது.
வாயிலுள்ள புண்கள் ஆறவும், சுவாசம் புத்துணர்ச்சி பெறவும் அடிக்கடி கொத்தமால்லி இலைகளை சாப்பிட்டு வருவது நல்லது.

Is Coriander Good for Kidneys?
மேலும், கொத்தமல்லியின் இலை கண் நோய், விழி வெண்படல அழற்சி, மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் போன்ற நோய்க்களை குணப்படுத்தி கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைகின்றன.
சிறிது கொத்தமல்லி இலைகளை அரைத்து, அதில் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, அந்த நீரின் சொட்டுக்களை கண்களில் அடிக்கடி விட்டுக்கொண்டு வர கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி, கண்களில் அடிக்கடி நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
Also Read: Cumin Seeds: நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தில் இவ்வளவு மருத்துவப்பயன்களா..!
சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதால் அழற்சி ஏற்பட்டு கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இதனை நீக்கும் வகையில் கொத்தமல்லியும் ஓர் மருத்துவகுணம் மிகுந்த இயற்கை மூலிகையாக உள்ளது.
வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கொத்தமல்லி சாறு அருந்தி வந்தாலும் அல்லது தினமும் உணவில் கொத்தமல்லி சேர்த்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரலில் வீக்கம் ஏதும் ஏற்பட்டிருந்தாலும் அது குணமடையும்.