News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்செய்திகள்மூலிகைகள்

Home Treatment For Cough: எவ்வளவு பயங்கரமான சளியையும் குணப்படுத்தும் நல்வேளை கீரை..!

Home Treatment For Cough:எவ்வளவு பயங்கரமான சளியையும் குணப்படுத்தும் நல்வேளை கீரை..!

நல்வேளைக் கீரையின் மருத்துவப் பயன்கள்:

நல்வேளை அல்லது தைவேளை என்றழைக்கப்படும் இந்த கீரை வெப்ப மண்டல காடுகளில் வளரக்கூடிய ஒரு வகை பூக்கும் தாவரம் ஆகும்.

இத்தாவரம் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இது 25 செ.மீ முதல் 60 செ.மீ வரை வளரும் தன்மை கொண்டது. இதன் ஒவ்வொரு கிளையிலும் 3 அல்லது 5 இலைகள் போன்ற அமைப்பை பெற்றிருக்கும்.

இதன் பூக்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும், விதைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது ஒரு மூலிகைத்தாவரம் ஆகும்.

Home Treatment For Cough

அமைப்பு:

இது ஓராண்டு வளரும் செடி வகை, இத்தாவரம் முழுவதும் பிசுபிசுப்பான ரோம வளரிகள் காணப்படும். நீள் முட்டை வடிவில் ஐந்து சிற்றிலைகளைக் கொண்டிருக்கும்.

நல்வேளை தாவரம் முழுவதும் ஒரு வித முக்கிய எண்ணெய் பரவி இருப்பதால் ஒரு விதமான மணமுள்ளதாகவும் பிசுபிசுப்பானதாகவும் காணப்படும்.

100 கிராம் நல்வேளையில் இருக்கும் வேதிப் பொருட்கள்:

புரதச்சத்து – 7.7 %
நார்ச்சத்து – 1.4%
மாவுச்சத்து – 6.4 %
பொட்டாசியம் – 410 மி.கி
சுண்ணாம்பு சத்து – 434 மி.கி
மெக்னீசியம் – 86 மி.கி
சோடியம் – 33.6 மி.கி
பாஸ்பரஸ் – 12 மி.கி
இரும்புச்சத்து – 11 மி.கி
துத்தநாகம் – 0.76 மி.கி
செம்புச்சத்து – 0.46 மி.கி
பீட்டா கரோட்டின் – 18.9 மி.கி
வைட்டமின் சி – 484 மி.கி
Oxalates – 8.8 மி.கி
Palmitic acid – 11.2%
Palmitoleic acid – 0.3%
Stearic acid – 6.6%
Oleic acid – 21.8%

Home Treatment For Cough:

நல்வேளை முழுத் தாவரமும் காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டு இருக்கும். இதன் இலை, சளி, நீர் கோவை ஆகியவற்றைப் போக்கும்.

இலைச் சாறு தாது சத்து தரும். பூ கோழை அகற்றும். பசியை உண்டாக்கும்.

இருமல் தீர ஒரு பிடி நல்வேளை இலைகளை, தேவையான அளவு உப்புடன் சேர்த்து அரைத்து பசையாக்கி சாப்பிட்டால் போதும் இருமல் குணமாகி விடும்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்த நல்வேளைச்செடியின் பூச்சாறு பத்து துளிகள் தாய்ப்பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

இதன் வேரை நீரில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் சாதாரண காய்ச்சல் முதல் டைபாய்ட், மலேரியா காய்ச்சல் வரை எளிதில் குணமாகின்றன.

Home Remedies For Skin Disease:

இத்தாவரத்தின் பட்டை, தோலில் எரிச்சலூட்டும் காயத்தை குணப்படுத்தும்,உடலின் வியர்வையை அதிகமாக்கும்.

விதையின் எண்ணெய்யினை, சொறி, சிரங்குகளினால் ஏற்படும் புண்ணின் மீது தடவினால் காயங்கள் சரியாகும்.மேலும் வாதம் சம்பந்தமான நோய்களையும் கட்டுப்படுத்தும்.

சீழ் கட்டிகள் உடைவதற்கு நல்வேளை இலையை அரைத்தோ அல்லது வதக்கியோ சீழ் கட்டிகள் மீது பற்றுப் போட்டால் கட்டிகள் மறைந்துவிடும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வல்லது. எச்.ஐ.வி. எனப்படும் பால்வினை நோய்க்கு இது ஓர் சிறந்த தீர்வாக இருக்கும் என்பதை உறுதி செய்யவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கண்ணில் உள்ள அழுக்கு வெளிப்பட்டு கண்கள் வீங்கிச் சிவந்து ஏற்படும் கண் நோய்(மெட்ராஸ் ஐ) விரைவில் குணமாவதற்கு இந்த நல்வேளை செடியின் வேரினை நீரில் இட்டு காய்ச்சி கண்களை கழுவினால் போதும்.

நல்வேளை விதையை வேகவைத்தோ அல்லது வறுத்தோ ஏதாவது ஒரு வகையில் 2 முதல் 4 கிராம் எடை அளவு எடுத்து நெய் சிறிது உப்பு சேர்த்து நீருடன் குடித்தால் சுளுக்கு முதலியன குணமாகும்.

காது வலி தீர இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 3 துளிகள் அளவு காதில் இட்டால் குணமடையும்.

Also Read:Remedies For Gastric Problem:நோயை விரட்டும் குப்பைக்கீரை ..!

How To Clean Intestines?

இதன் விதை, குடல் வாயுவைப் போக்கும், குடல் புழுக்களை வெளியாக்கும், இசிவு நோயைக் கட்டுப் படுத்தும்.

நல்வேளை விதைகளை நெய் சேர்த்து வறுத்து, அரைத்து தூளாக்கி வைத்துக்கொண்டு சாப்பிட்டால் குடலில் உள்ள தேவையற்ற தட்டைப் புழுக்கள் வெளியேறும்.

இதில் சிறுவர்களுக்கு ½ கிராம் பெரியவர்களுக்கு 4 கிராம் என்கிற அளவில் காலை மாலை மூன்று நாள்கள் சாப்பிட கொடுத்தால் போதும்.

நான்காம் நாள் விளக்கெண்ணெய் ½ தேக்கரண்டி அளவு குடிக்க கொடுத்தால் பேதியாகி குடலின் தட்டைப் புழுக்கள் வெளியேறிவிடும்.

இத்தகைய சிறப்பு மிகுந்த நல்வேளையின் மருத்துவ குணங்களை அறிந்து அதை உணவில் சேர்த்து கொண்டு நீடித்த வாழ்வினை பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *