Yellowstone: Yellowstone சூப்பர் எரிமலை உண்மையில் வெடிக்குமா?
Yellowstone: மஞ்சள் கல் சூப்பர் எரிமலை உண்மையில் வெடிக்குமா?
மஞ்சள் கல் (Yellowstone) சூப்பர் எரிமலை கடைசியாக 70,000 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தது. மீண்டும் வெடிக்குமா என்ற கேள்வி எரிமலை ஆய்வாளர்களிடம் எழும்பியுள்ளது.

What is Yellowstone Volcano?
மஞ்சள் கல் (Yellowstone) தேசிய பூங்கா வயோமிங் (Wyoming) மாநிலத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது.
இடாஹோ மற்றும் மொன்டானா மாநிலம் வரை இந்த மஞ்சள் கல் தேசிய பூங்கா பரந்து விரிந்துள்ளது.
இந்த தேசிய பூங்காவை, ஆண்டுதோறும் சுமார் 3 மில்லியன் மக்கள் பார்வையிடுகின்றனர். மேலும், இந்த கண்கவர் வனப்பகுதியின் பரந்த பகுதியில் உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான யெல்லோஸ்டோன் சூப்பர் எரிமலை உள்ளது.
Yellowstone caldera என்பது எரிமலையின் உச்சியில் உள்ள மிகவும் பிரம்மாண்டமான படுகை. மேலும் இது “சூப்பர் எரிமலை” என்று அழைக்கப்படுகிறது.
சூப்பர் எரிமலையின் கடைசியாக 70,000 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்ததால், மீண்டும் அது விரைவில் வெடிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் எரிமலைகள் கால அளவுகளின்படி வேலை செய்யாது என்று புவி இயற்பியலாளரும், Yellowstone எரிமலை ஆய்வகத்தின் பொறுப்பாளருமான மைக்கேல் போலந்து கூறுகிறார்.
மேற்பரப்பிற்கு அடியில் போதுமான வெடிக்கக்கூடிய மாக்மா(Magma) இருக்கும்போது அவை வெடிக்கின்றன என்று மைக்கேல் போலந்து கூறுகிறார்.
மாக்மா என்பது பூமியின் அடியில் காணப்படும் கடும் வெப்பமான பாறைக் குழம்பாகும். பல எரிமலைகளின் செயல்பாடு, செயலற்ற சுழற்சிகள் வழியாக செல்கின்றன என்கிறார் போலந்து.
பெரும்பாலும், எரிமலையின் செயல்பாடு மாக்மாவின் நேரடி விளைவாகும். சில எரிமலைகள் வழக்கமான வெடிப்புகளைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மற்ற எரிமலைகளை விட “Yellowstone சூப்பர் எரிமலைகள்” ஓரளவிற்கு பரபரப்பானவையாக தெரிகிறது.
இது பல்வேறு தொழில்நுட்பங்களால் நன்றாக கண்காணிக்கப்படுகிறது என்று போலந்து கூறுகிறார். இது நில அதிர்வு மற்றும் நில சிதைவு ஆகியவற்றின் அடிப்படையில் மூடப்பட்டுள்ளது. சில வெப்ப அம்சங்களின் வெப்பநிலையை நாங்கள் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறோம் என்கிறார். ஆனாலும் இது எரிமலை செயல்பாட்டின் குறிகாட்டியாக இல்லை.

Yellowstone Volcano:
நாங்கள் விண்வெளியில் இருந்து ஒட்டுமொத்த வெப்ப உமிழ்வுகளைப் பார்க்கிறோம்.
காலப்போக்கில் வேதியியலை மதிப்பிடுவதற்கு வாயு மற்றும் தண்ணீரைச் சேகரிக்கிறோம், மேலும் நீரோடை, நதி ஓட்டம் மற்றும் வேதியியலைக் கண்காணிக்கிறோம்”என்கிறார் போலந்து.
இது தற்போது எந்த நில அதிர்வையும் காட்டவில்லை என்றாலும், அது வெடித்தால் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்கிறார்.
எரிமலை வல்லுநர்கள் மிகவும் கவலைப்படுவது சாம்பலுக்காகத்தான். சுற்றியுள்ள அனைத்து பகுதியையும் இது சாம்பல் புகையால் மூடும்.
அது மட்டும் இல்லாமல் ஏராளமான நீர்நிலைகளையும் இது பாதிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின்படி Yellowstone இன் மிக அருகிலுள்ள மொன்டானா, இடாஹோ மற்றும் வயோமிங் ஆகிய மாநிலங்கள் பைரோகிளாஸ்டிக் ஓட்டங்களால்(pyroclastic flows) பாதிக்கப்படும்.
பைரோகிளாஸ்டிக் ஓட்டம் என்பது அனைத்து எரிமலை ஆபத்துகளிலும் மிகவும் ஆபத்தானவை. சில வெடிப்புகளின் விளைவாக இது உருவாகின்றன.
Magma Chamber:
ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டால், அது சாம்பல் மற்றும் வாயுவை வளிமண்டலத்தில் வெளியிடுவதன் மூலம் உலகளாவிய காலநிலையை பாதிக்கலாம். சூரிய ஒளியைத் தடுக்கும் மற்றும் சில ஆண்டுகளுக்கு உலக வெப்பநிலையை சில டிகிரிகள் குறைக்கும் இது என்று போலந்து விளக்கினார்.
இந்த பிரம்மாண்டமான படுகை முன்பு மதிப்பிடப்பட்டதை விட அதிக திரவ உருகிய பாறைகளை வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளது இந்த ஆய்வுகுழு.
Also Read: Emperor Penguins: விண்வெளியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பென்குயின் கூட்டம்..!
இதன் அடியில் உள்ள மாக்மா அறை(magma chamber) 5-15% மட்டுமே உருகியதாக ஆரம்பக் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் புதிய ஆராய்ச்சி 16-20% உருகியதாகக் கூறுகிறது. இதன் விளைவாக சூப்பர் எரிமலை வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு.
இந்த முடிவு எனக்கு உறுதியளிக்கிறது என்று போலந்து கூறுகிறார்.