Interesting FactsNews Tamil OnlineTamil Technology Newsஅறிவியல்கண்டுபிடிப்புசெய்திகள்தொழில்நுட்பம்

Genetic Diseases: மரபணு நோய்களை கண்டறிய உதவும் அவதார் படத்தின் தொழில்நுட்பம்..!

Genetic Diseases: மரபணு நோய்களை கண்டறிய உதவும் அவதார் படத்தின் தொழில்நுட்பம்..!

அவதார் போன்ற திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக பயன்படுத்தபட்ட மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைக் (Motion Capture Technology) கொண்டு, மனித உடல்களின் இயக்கத்தைப் பாதிக்கும் நோய்களை தொடக்கத்திலே கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

Motion Capture Technology

Motion Capture Technology:

பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவ்வளவு விரைவில் கண்டறிகிறோமோ அவ்வளவு விரைவில் அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளையும் உதவிகளையும் நம்மால் மேற்கொள்ள முடியும் என்று குறிப்பிடுகின்றனர்.

இதன் அடிப்படையில் தற்போது மனித உடல்களில் உள்ள அசைவுகளைக் கண்காணிப்பதற்காக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் (Motion Capture Technology) பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

லண்டனை சேர்ந்த வல்லுநர்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனைகளை ஆய்வு செய்தபோது,

“மரபணு சார்ந்த இரண்டு தீவிரமான கோளாறுகளைக் கண்டறிவதற்குச் சிறந்த மருத்துவர்கள் எவ்வளவு நேரம் எடுத்து கொள்வார்களோ அதைவிட இரண்டு மடங்கு விரைவான நேரத்திலேயே இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிய முடியும்” எனக் கூறுகின்றனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுவது “நேரத்தைப் பாதியாகக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ சோதனைகளின்போது ஏற்படும் செலவுகளையும் குறைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது” என்று குறிப்பிடுகின்றனர்.

கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் இன்ஸ்டிடியூட் ஃபார் சைல்டு ஹெல்த்தை (Great Ormond Street Institute for Child Health ) சேர்ந்த மருத்துவர் வலேரியா ரிகோடி(Valeria Ricotti) “இந்த ஆராய்ச்சியின் முடிவுகளால் நான் வியந்துபோய்விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Genetic Diseases

Genetic Diseases:

புதிய நோய்களைக் கண்டறிவதிலும், பல்வேறு விதமான மருந்துகளை ஆராய்ச்சி செய்வதன் மூலமும் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி செய்த பல்வேறு ஆராய்ச்சியாளர்களில் ரிகோடியும் ஒருவராவர்.

கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஃப்ரெட்ரீச்சின் அட்டாக்ஸியா (Friedreich’s ataxia – FA) எனப்படும் நரம்பியல் நோயாலும், டுச்சேன் தசைநார் சிதைவு (Duchenne Muscular Dystrophy – DMD) எனப்படும் மரபியல் நோயாலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் தனித்தனியாக இதுகுறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தச் சோதனைகளின்போது இதயம், நரம்பியல் மண்டலம், மூளை, தசைகள், எலும்புகள் மற்றும் உளவியல் சிக்கல்கள் போன்ற மற்ற பாதிப்புகளில் இருந்தும் நோயாளிகள் மீண்டு வருவதை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் தங்களால் கண்டுபிடிக்க முடிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவதார் போன்ற திரைப்படங்களில் ஏலியன் உருவகங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் நடிகர்களின் அசைவுகள் பயன்படுத்தபடுகிறது.

அதேபோல, மருத்துவ உலகில் இது நோயாளிகளின் உடலுக்குள் இருக்கும் நோய்களின் மாற்றங்களைக் கண்காணிக்க உதவுகிறது.

நோய்களின் தீவிரத்தையும் அது தொடர்ச்சியாக அதிகரிக்கும் வீரியத்தையும் கண்டறிவதற்கு மருத்துவ உலகம் அதிக ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய தொழில்நுட்பம் அதை எளிதாக்கி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவத்துறையில் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று யோசித்த மருத்துவர்களில், பேராசியர் அல்டோ ஃபைசல்(Alto Faisal) என்பவரும் ஒருவர்.

தற்போது, இந்தச் சோதனை முறையில் வியக்கத்தக்க மாற்றங்கள் நடந்திருப்பதாக ஃபைசல் கூறுகிறார்.

What is DMD Disease

What is DMD Disease?

சில நேரங்களில் நோயாளிகளின் உடலில் ஏற்படும் சிறிய சிறிய மாற்றங்களை மனிதர்களால் கணிக்க முடியாது.

ஆனால், இத்தகைய தொழில்நுட்பம் அதைச் சரியாகக் கண்டுபிடித்து விடுகிறது என்று அல்டோ ஃபைசல் கூறுகிறார்.

லண்டனை சேர்ந்த இம்பிரியல் காலேஜ் (Imperial College) மருத்துவர்கள் ஃப்ரெட்ரீச்சின் அட்டாக்ஸியா (Friedreich’s Ataxia-FA) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியபோது அவர்களின் உடலில் அடுத்த பன்னிரண்டு மாதங்களில் அந்த நோய் ஏற்படுத்தவிருக்கும் தீவிரத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

Friedreich’s Ataxia என்பது நரம்பு மண்டல சேதம் மற்றும் இயக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு அரிய பரம்பரை நோயாகும்.

அதேபோல் DMD (Duchenne muscular dystrophy) நோயால் பாதிக்கப்பட்ட 21 நோயாளிகளிடம் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியபோது அவர்களுக்கு அடுத்த 6 மாத காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்புகளை மிகவும் துல்லியமாகக் கணிப்பதற்கு இத்தொழில்நுட்பம் உதவியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

DMD என்பது எலும்பு மற்றும் இதய தசை பலவீனத்தை ஏற்படுத்தும் ஒருவித நோயாகும்.

Also Read: Mars Planet: கரடி பொம்மை வடிவ செவ்வாய் கிரக பாறைகளை நாசா உளவு பார்க்கிறது..!

இந்தப் புதிய தொழில்நுட்ப முறை இனி வரும் காலங்களில் மருத்துவ சோதனைகளை விரைந்து செயல்படுத்துவதற்கு அதற்கான செலவுகளை விரைவில் குறைப்பதற்கும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது என்கிறார்.

மருத்துவமனை லண்டனில் உள்ள அடாக்ஸியா(Ataxia) ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பவோலா கியுண்டி (Paola Guindi),

“இனி நாம் குறைந்த செலவில் குறைந்த அளவிலான நோயாளிகளை வைத்து அதிகமான மருந்துகளை சோதனை செய்ய முடியும்” எனக் கூறியுள்ளார்.