Facts about the Earth : பூமி திடீரென மறைந்தால் சந்திரனின் நிலைமை என்ன?
Facts about the Earth : பூமி திடீரென மறைந்தால் சந்திரனின் நிலைமை என்ன?
பூமி திடீரென மறைந்துவிட்டால், சந்திரன் இனி பூமியின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டிருக்காது. எனவே அது பிளிப்பின் நேரத்தில் சுற்றுப்பாதையில் செல்லும் அதே திசையில் தொடரும்.

சந்திரன் சூரியனைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் இருக்கும். அது இப்போது பூமியை சுற்றி வருகிறது.
பூமி மறைத்தால் அது சூரியனை சுற்றி வரும். ஆனால் அதன் சுற்றுப்பாதை பெரும்பாலும் அது செல்லும் திசையைப் பொறுத்து மாறுபடும். அதாவது சூரியனுக்கு சற்று நெருக்கமாகவோ அல்லது சற்று அதிகமாகவோ இருக்கும்.
அது இனி நிலவாக இருக்காது. சூரியனை சுற்றுவதால் அது ஒரு சிறுகோள் என அழைக்கப்படும்.
இறுதியில், அது வேறொரு கிரகத்தால் கைப்பற்றப்பட்டு மீண்டும் ஒரு சந்திரனாகவும் மாறக்கூடும்.
அடிப்படையில், சந்திரன் மறைவது பூமிக்கு மிகவும் மோசமாக இருக்கும். ஆனால் பூமி மறைவது சந்திரனுக்கு அவ்வளவு மோசமாக இருக்காது.
நீங்க தோப்புக்கரணம் போட்டுருக்கீங்களா?
பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம்? ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும்?

ஆமாங்க, நம் முன்னோர்கள் காலம் காலமாக நிறைய தண்டனைக்காகவும், கோவில் வழிபாட்டுக்காகவும் தோப்புக்கரணம் போடா சொல்லிருப்பாங்க…
இந்த தோப்புக்கரணம் தண்டனை மட்டும் இல்லங்க, ஒரு சிறந்த யோகாசனமும் கூட
நம் காது நரம்புகளுக்கும் மூளையோட நரம்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும், காதுகளை பிடித்து உட்கார்ந்து எழும்பும் போது காது நரம்புகள் தூண்டப்பட்டு மூளைக்கு உத்தரவு கொடுக்கும்.
மேலும், ஒரு பையன் படிக்கவில்லை என்றால் தோப்புக்கரணம் போட்ட பிறகு நன்கு படிப்பான் என்றும் நம்மப்படுகிறது.
இது போன்று தான் “உக்கி போடுதல்” குழந்தைகள் படிக்கவில்லை என்றால் தலையில் கொட்டுவார்கள், இவ்வாறு கொட்டும் பொழுது மூளைக்கு ஏற்படக்கூடிய ஒரு சிறிய அதிர்வு, மூளையை நன்கு வேலைசெய்ய வைக்கும்.
ஆட்டிஸம் போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து விடுபட கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இனிமே யாராவது தோப்புக்கரணம் போட யோசிப்பீங்களா?
கண்ணாடியே இல்லாமல் தலையை பார்க்கும் உயிரினம்
கண்ணாடியே இல்லாமல் தலையை பார்க்கும் உயிரினம் கூட இருக்கா!
இந்த உலகத்துல இருக்க கூடிய அனைத்து உயிரினங்களாலும் தன்னோட தலையை கண்ணாடி வழியால் மட்டுமே பார்க்க முடியும் ஆனால் ஒரு உயிரினம் மட்டும் தன்னுடைய தலையை தானே எந்த கண்ணாடியின் உதவியும் இல்லாமல் பார்க்க முடியும்னு சொன்னால் உங்களால் நம்ம முடியுமா?

நம்மி தாங்க ஆகணும், ஆமாங்க அப்படி ஒரு உயிரினம் இருக்கு, அது என்ன அப்படினு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கா சொல்லுறேன் கேளுங்க..
Bareilly அப்படி அழைக்க கூடிய ஒரு வகையான மீன் தான் அது, இந்த மீன்களால் தங்களுடைய முகத்தை பார்க்க முடியும், அதுவும் கண்ணாடியே இல்லாமல், இந்த மீன்கள் தங்களுடைய கண்களை உள்பக்கமாக உருட்டி தன்னுடைய தலை பகுதியை பார்க்கும் திறன் உடையது.
அது மட்டும் இல்லாமல், இந்த மீனின் தலை பகுதி ஒளி புகும் தன்மை கொண்டு கண்ணாடி போன்ற வகையில் அமைந்திருக்கும். அதனால் தான் எளிதில் அதன் தலையை பார்க்க முடிகிறது.
“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”
“நல்ல மாட்டுக்கு ஒரு சூடு” இந்த பழமொழி நம்ம நிறைய இடத்துல கேள்விப்பட்டிருப்போம்..
இந்த பழமொழியை எவ்வளவு தடவ சொன்னாலும் திருந்தமா அதே தப்ப திருப்பி திருப்பி பண்ணா சொல்லுவோம் அப்படித்தானே, ஆனா, இந்த பழமொழியும், இதோட விளக்கமும் தவறானது.

ஆமாங்க, “நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு” என்று முன்னோர்கள் கூறினார்கள். இன்றைய காலத்தில் தான் அது “நல்ல மாட்டுக்கு ஒரு சூடு” என்று மருவி நிற்கிறது.
அதாவது, இதன் விளக்கம் சந்தையில் மாட்டை வாங்க நினைப்பவர்கள் மாடுகளின் கால் தடத்தை வைத்து கவனித்து வாங்குவார்கள், அதாவது எவ்வளவு ஆழமாக பதிக்கிறதோ அந்த மாடு தான் அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும்.
ஆகையால் தான் மாட்டின் சுவட்டை வைத்து அதன் வலிமையையும், உடல் நலத்தையும் கணிப்பதற்காகவும் இப்பழமொழியை உபயோகப்படுத்திருக்கிறார்கள்.
அந்த பழமொழி தான் இப்பொழுது ஒருவனை இகழ்ந்து பேச உபயோகபடுத்துகிறோம். இனிமே யாரையாவது இப்படி சொல்லுவீங்களா?
Also Read: Emperor Penguins: விண்வெளியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பென்குயின் கூட்டம்..!
உங்களுக்கான கேள்விகள்:
கேள்வி: பதிப்பதன் ஆழம், பலத்தை காட்டும், என்பதை உணர்த்தும் பழமொழி எது ?
விடை : “நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு”
கேள்வி: பிள்ளையார்க்கு பிடித்த கரணம் ஆனால் படிப்புக்கு பிடிக்காத கரணம் . அது என்ன ?
விடை : தோப்புக்கரணம்
கேள்வி: அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவு காவல்காரன் ஒருவன் அவன் யார்?
விடை : சூரியன், சந்திரன்
கேள்வி: நீரில் நீந்துவேன், கண்ணால் என் தலை பார்ப்பேன். நான் யார்?
விடை : Bareilly மீன்