Exercise To Lose Weight: மதிய வேளையில் உடற்பயிற்சி செய்யலாமா..?கூடாதா..?
Afternoon Exercise to Lose Weight: மதிய வேளையில் உடற்பயிற்சி செய்யலாமா..?கூடாதா..?
ஒருவா் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவா் கண்டிப்பாக உடற்பயிற்சிகளைச் செய்து வரவேண்டும்.

Exercise To Lose Weight:
உடற்பயிற்சிகளைச் செய்ய விரும்பினாலும், தங்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனா்.
உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு காலை மற்றும் மாலை நேரங்கள் மட்டுமே உகந்தது என்று பலா் நம்புகின்றனா்.
ஏனெனில் அந்த நேரங்களில் மக்கள் காலியான வயிற்றுடன் இருப்பா்.
காலியான வயிற்றுடன் நன்றாக உடற்பயிற்சிகளைச் செய்யலாம் என்று நினைக்கின்றனா்.
ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. கால மாற்றத்திற்கு தகுந்தவாறு விதிமுறைகளை மாற்ற வேண்டியது தேவையாக இருக்கிறது.
அதன் தொடா்ச்சியாக தற்போது மதிய உணவு இடைவேளையில் உடற்பயிற்சிகளைச் செய்து வரலாமா என்ற கேள்வி வருகிறது.
மதிய உணவு இடைவேளையில் உடற்பயிற்சி செய்தால் அது மிகவும் வித்தியாசமாக தெரியும்.
ஏனெனில் காலி வயிற்றுடன் தான் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றும் நாம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம்.
எனினும் மதிய உணவு வேளையில் உடற்பயிற்சிகள் செய்து வந்தால் அதற்குரிய பலன்கள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதே உண்மை.
அதாவது மன அழுத்தம் குறையும். எஞ்சிய நாள் முழுவதும் புத்துணா்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம்.
நடைப்பயிற்சி ஒரு முக்கியமான உடற்பயிற்சியாக உலகளவில் மதிப்படப்படுகிறது.
நடைப்பயிற்சி செய்து வந்தால் மூளை, இதயம் மற்றும் நமது உடல் எடை போன்றவற்றிற்கு ஆரோக்கியம் கிடைக்கும் கிடைக்கும்.
மதிய உணவு முடிந்த பின்பு நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் அது நல்ல பலனைத் தரும்.
தொடக்கத்தில் மிக வேகமாக நடக்கக்கூடாது. நடைப்பயிற்சியை முடிக்கும் போது சற்று வேகமாக நடக்கலாம்.
குத்துச்சண்டை பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும். குத்துச்சண்டைப் பயிற்சியில் உடம்பின் எல்லா உறுப்புகளும் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.
கைகள் மற்றும் புஜங்கள் மட்டுமே அதிகமாக இயங்கும். குத்துச்சண்டைப் பயிற்சி அதிகமான அளவு கலோரிகளை எரித்து நமக்கு ஆரோக்கியத்தைத் தரும்.
ஆகவே திடகாத்திரமாக, ஆரோக்கியமாக மற்றும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க மதிய உணவு இடைவேளையில் குத்துச்சண்டைப் பயிற்சிகளைச் செய்து வரலாம்.
யோகா பயிற்சிகளை எந்த நேரத்திலும் செய்து வரலாம்.
எனினும் அா்த்த சந்திராசனா, வஜ்ராசனா மற்றும் கோமுகாசனா போன்ற யோகாசனங்களை மதிய உணவிற்குப் பின் செய்யலாம்.
அவ்வாறு இந்த யோகாசனங்களை செய்து வந்தால் நாம் உண்ட உணவு நன்றாக செரிமானம் அடையும்.
காலையிலிருந்து இடைவிடாமல் மடிகணினியில் வேலை செய்து வந்தால் மதிய உணவு இடைவேளையின் போது நமது உடல் இயல்பாகவே களைத்துவிடும்.
ஆகவே சற்று எழுந்து நின்று நமது கை கால்களை நீட்டி மடக்கலாம் அல்லது முறுக்கிவிடலாம்.
Also Read: Tasty ladoo recipe: பெண்களுக்கு சோர்வடையாமல் வேலை செய்ய தினமும் இந்த 1 லட்டு சாப்பிட்டாலே போதும்..!
அப்போது நமக்கு சக்தி கிடைக்கும். மேலும் கண்களுக்குரிய பயிற்சிகளையும் செய்யலாம்.