இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Paneer Benefits: பன்னீரை எப்படி நாம் சரியான முறையில் சாப்பிடலாம்..?

Paneer Benefits : பன்னீரை எப்படி நாம் சரியான முறையில் சாப்பிடலாம்..?

அனைவராலும் விரும்பப்படும் ஒரு வகை உணவு பன்னீர். இது பாலில் இருந்து தயாரிக்கப்படுவது.

Can we eat paneer daily newstamilonline

Paneer Benefits:

சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் பன்னீரையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஆனால், பலருக்கும் பன்னீர் சாப்பிடுவதன் சரியான முறை என்ன என்பது தெரிவதில்லை.

பன்னீரின் ஊட்ட சத்துக்களை முழுமையாக பெறுவதற்கு அதனை சாப்பிடுவதில் சரியான முறையை கடைபிடிக்க வேண்டும்.

பலருக்கு, பன்னீரை பச்சையாக சாப்பிட வேண்டுமா அல்லது பொரித்தால் நல்லதா என்ற குழப்பம் உள்ளது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பன்னீர்:

பன்னீரில், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் காணப்படுகின்றன.

பன்னீர் உட்கொள்வதால் உடலுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும்.

மேலும் இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

இதில் லாக்டோஸ் குறைந்தளவு இருப்பதால் பால் அழற்சி இருப்பவர்கள் கூட குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கு தேவையான புரதம் அதிகஅளவு இதில் காணப்படுகிறது.

பன்னீரின் நன்மைகள்:

பன்னீர் பல், எலும்புகள் மற்றும் தசைகளை உருவாக்க உதவுகிறது.

பன்னீர் பற்சொத்தையை தடுக்கிறது. பன்னீரில் உள்ள லாக்டோஸின் அளவு குறைவாக இருப்பதால் பல் சொத்தையை தடுக்கிறது.

இது உடல் மெட்டா பாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் கொழுப்பு தங்க அனுமதிக்காது.

பன்னீர் என்பது லினோலிக் அமிலத்தின் சிறந்த ஆதரமாகும், இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது.

மேலும் இதிலுள்ள ஒமேகா 3 கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை அளிக்கும். இது பிரசவ கோளாறுகளின் வாய்ப்புகளை குறைக்கிறது.

இதில் செலினியம் இருப்பது பளபளப்பான சருமத்தை தரும். ஆனால், பன்னீரை சமைப்பதால் சில சத்துக்கள் இழக்கப்படுகின்றன.

இது உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இருப்பினும் பன்னீரை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இரண்டு வகையிலும் பன்னீர் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், பன்னீரை சமைக்கும் போது, அதில் உள்ள சில சத்துக்கள் அழிந்துவிடும்.

மேலும், சாப்பிடும் முன் பேக் செய்யப்பட்ட பன்னீரை சுத்தம் செய்ய வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதை பச்சையாக சாப்பிடுவதற்கு முன்பு சிறிது நேரம் வெதுவெதுப்பான நீரில் போட்டு வைத்து சுத்தம் செய்வது நல்லது.

பேக் செய்யப்பட்ட, சில நாட்களுக்கு முன் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்பதால், அதில் அழுக்கு அல்லது பாக்டீரியா வளரும் வாய்ப்பு உள்ளது.

Also Read: Goji Berries Benefits: பார்வை திறனை அதிகரிக்கும் கோஜி பெர்ரி..!

அதனால், வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் போட்டு வைத்திருந்த பிறகு, பன்னீரை எடுத்துப் பயன்படுத்தலாம்.

இத்தகைய செயல் முறைகளை அறிந்து பன்னீரின்(Paneer Benefits) பலனை நாம் முழுவதும் பெறுவோம்.