இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Pineapple benefits: சளி, இருமலைக் கட்டுப்படுத்தும் அன்னாசிப் பழம்…!

Pineapple benefits: சளி, இருமலைக் கட்டுப்படுத்தும் அன்னாசிப் பழம்…!

சுவையாலும், வாசனையாலும் சுண்டி இழுக்கும் அன்னாசி பழம் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது.

Pineapple benefits-newstamilonline

Pineapple benefits:

2010 ஆண்டு வெளியான ஆய்வில் அன்னாசி ஜூஸ் குடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி என சளி , இருமல் வரும் அறிகுறி இருந்தால் உடனே குணப்படுத்தும் நிவாரணி என கூறப்பட்டுள்ளது.

அதாவது கிருமிகள், தொற்றுகளோடு சண்டையிடும் ஆண்டி ஆக்ஸிடண்ட் அன்னாசியில் உள்ளது. அதுமட்டுமன்றி விட்டமின் சி இருப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

அதோடு அதில் உள்ள புரொமெலைன் சுவாசப் பிரச்சனைகளுக்கு உதவும் என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்துமா இருப்போருக்கு அன்னாசிதான் உற்ற நண்பனாம்.

எப்படியெல்லாம் அன்னாசியை சாப்பிடலாம் ?

அன்னாசி சாறை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தொண்டைக்கு நல்ல ரிலீஃபாக(Relief) இருக்கும்.

Also Read: உடலை இரும்பு போல மாற்றும் மல்லி விதை நீர்..!

அன்னாசி அதோடு தேன் , ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்தால் இருமல் , சளி, தொண்டை வலி இருக்காது.

குறிப்பு : இருமல், சளி இருக்கும் போது பால் பொருட்கள், கஃபைன், வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை பிரச்சனையை தீவிரமாக்கும்.