News Tamil Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Heart burning: அசிடிடியால் நெஞ்சு எரிச்சலா..? உடனே சரியாக இப்படி செஞ்சு பாருங்க..!

Heart burning: அசிடிடியால் நெஞ்சு எரிச்சலா..? உடனே சரியாக இப்படி செஞ்சு பாருங்க..!

உணவுகளை தவிர்த்தாலோ அல்லது சில உணவுகளை உட்கொள்வதாலோ அசிடிடி உண்டாகும். இதனால் நெஞ்சு எரிச்சல், உணவு மீண்டும் தொண்டை வரை வந்துபோகும்.

இது தற்காலிக உபாதை என்பதால் சில வீட்டுக் குறிப்புகளை வைத்தே குணமாக்கிவிடலாம்.

Heart burning-newstamilonline

Heart burning:

பொதுவாக காஃபி, டீ, சிகரெட், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, பூண்டு, வெங்காயம், கார உணவுகள் போன்றவை சாப்பிட்டால் அசிடிடி உண்டாகும்.

சாப்பிட்ட உடனே படுத்தாலும் அசிடிடி வரும். அதிக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் அசிடிடி ஏற்படும்.

குணமாக்கும் வழிகள் :

Heart burning grapes-newstamilonline

கருப்பு திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்தால் செரிமானமின்மை, வயிற்று மந்தம் போன்றவை குணமாகும்.

Heart burning curd-newstamilonline

ஊற வைத்த அவலை தயிரில் கலந்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் இருக்காது. இது உணவுக்கு முன் சாப்பிட வேண்டும்.

இதை சாப்பிட்டு 2 மணி நேரத்திற்கு பின்பே உணவு உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்ட பின் பசி இல்லை என்றாலும் சாப்பிட தேவையில்லை.

 gulkant-newstamilonline

குல்கந்த் இருந்தால் அதை அப்படியே சாப்பிடலாம். அதோடு ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.

Also Read: Drinking water after eating Fruits: பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா..?

இதை அன்றைய நாள் முழுவதும் செய்தால் அசிடிடி இருக்காது. இது சாப்பிட்ட பின்பும் செய்யலாம்.