இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Drinking water: சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா அல்லது கூடாதா..?

Drinking water: சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா அல்லது கூடாதா..?

நாம் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால்(drinking water) ஏராளமான தீமைகள் வருகிறது. சாப்பிடும்போது தாகம் எடுக்கிறதே, எப்படிக் குடிக்காமல் இருக்க முடியும்? என்பார்கள் சிலர்.

அப்படித் தாகம் எடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை.

drinking water

உண்மையில் இந்த பழக்கம் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு விஷயமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நம் செரிமான மண்டலத்தில் நிறைய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

செரிமானம் சரியாக நடைபெறாமல் எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஏன் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

தொடர்ந்து அமிலத்தன்மையால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் அதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது அமிலத்தன்மையை நீர்த்துப் போகச் செய்வதால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.

உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும்.

மருத்துவர்கள் நீங்கள் சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதும்(drinking water) உங்கள் இன்சுலின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.

உணவின் போது தண்ணீர் குடிப்பதும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

ஏனென்றால், உங்கள் உடலுக்கு போதுமான அளவு ஜீரணிக்க முடியாமல் போகும்போது அந்த உணவின் குளுக்கோஸ் நிரப்பப்பட்ட பகுதியை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.

இதனால் இன்சுலின் அதிகரிப்பு அதிகமாகி உங்க ஒட்டுமொத்த இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்கிறது.

உணவின் போது தண்ணீர் அருந்துவது உங்க உடல் எடையை அதிகரிக்கும் பக்க விளைவை உண்டாக்குகிறது.

எனவே ஆயுர்வேதத்தின் படி உங்க உடல் எடையும் இதனால் அதிகரிக்கிறது.

மேலும் உணவின் போது தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள வாதம் , கபம் மற்றும் பித்தம் கூறுகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். இது உடல் எடையில் இடையூறு விளைவிக்கும்.

உணவின் போது தண்ணீர் குடிக்காமல் தவிர்க்க சில டிப்ஸ்கள்:

உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதும் உங்களுக்கு அதிகமான தாகத்திற்கு வழி வகுக்கும். எனவே முடிந்த வரை உப்பை குறைத்து உட்கொள்ளுங்கள்.

உப்பு குறைவாக உட்கொள்ளும்போது, இயல்பாகவே தண்ணீர் குடிப்பதன் தேவையும் சாப்பிடும்பொழுது குறைகிறது.

உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

இதன் மூலம் உமிழ்நீர் அதிகமாக சுரந்து செரிமான செயல்முறையை அதிகரிக்கிறது.

Also read: தினம் ஒரு பச்சை மிளகாய் சாப்பிட்டு வந்தால் இதெல்லாம் நடக்குமா..?

நன்றாக மென்று சாப்பிடும் போது உணவை எளிதாக உடைக்க முடியும். இதனால் உணவும் எளிதாக சீரணம் ஆகும் நெஞ்செரிச்சல் போன்ற பக்க விளைவுகள் உண்டாகாது.

உணவு எடுத்துக் கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள்.

30 நிமிடங்களுக்கு முன்பே தண்ணீர் குடிப்பதன் மூலம் உணவின் போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.