News Tamil OnlineTamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

How to Reduce Body Heat? முளைவிட்ட கம்பை சாப்பிட்டால்..

How to Reduce Body Heat? முளைவிட்ட கம்பை சாப்பிட்டால்..

சிறுதானியமான கம்பை முளைகட்டிச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.
முளைகட்டிய கம்பினை சாப்பிடுவாதால் கிடைக்கும் பலன்

Reduce Body Heat

How to Reduce Body Heat?

சத்துக்குறைபாடு உள்ளவர்கள் தினமும் கம்புப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.

பொதுவாக அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் உலகளவில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்களாக இருக்கின்றன.

இவைகள் போலவே சத்துக்கள் நிறைந்த தானிய வகைகள் பல இருக்கின்றன, அதன் வகைகளில் ஒன்று தான் “கம்பு”.

இந்த கம்பை கூழ், களி, அடை, தோசை, முளைவிட்ட பயிர் என எந்த வகையிலும் பக்குவப்படுத்தி சாப்பிடலாம் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் முளைகட்டிய கம்பினை உண்ணுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை மேலும் அறிந்துகொள்வோம்.

Millets Benefits:

கம்பில் உள்ள சத்துக்கள்

கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, B complex, கால்சியம், மெக்னீசியம், தேவையான அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனை உண்பவர்களுக்கு இவ்வனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.

  • உடல் சூடு தனியும்

உடல் சூடு அதிகமாக, சுற்றுப்புற சூழலின் மாற்றத்தாலும், உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் உடல் அதிகம் வெப்பமடைந்து, அதன் விளைவாக ஏற்படுகிறது.

இத்தகைய நிலை உள்ளார்கள், இவர்கள் தினமும் காலை வேளைகளில் முளைகட்டிய கம்பினை கூழ் செய்து சாப்பிட்டால் உடல் அதிகம் உஷ்ணமடைவது குறையும்.

  • உடல் பலம் பெறும்

கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்த உணவாகும். இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக செய்து சாப்பிட்டால், உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை அதிகரிக்கும்.

  • நீரிழிவு நோய் உள்ளவர்கள்

நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள அரிசி போன்றவற்றை சாப்பிடக்கூடாது, அதற்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

  • நார்சத்து அதிகம்

நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடையும் வகையில் இருத்தல் நல்லது.

அவ்வகையில் இக் கம்பில் நார்சத்து அதிகம் இருப்பதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வந்தால், எளிதில் நோய் அகன்று போகும்.

  • உடல் எடை குறைப்பு

பசி அதிகம் எடுப்பவர்கள் அடிக்கடி எதையாவது உண்பதால் அவர்களின் உடலில் கட்டுப்பாடில்லாமல் எடை கூடுகிறது.

உடல் எடையினை குறைக்க எண்ணுபவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை கட்டுப்பாடில் வைத்து, இவர்களின் உடல் எடையை குறைக்கும்.

  • ரத்த கொதிப்பு அடங்க

கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்வாக்கி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது.

Also Read: Coffee: மஞ்சள் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப் படுத்தி உடலினை சுறுசுறுப்பாக இயங்க வழிசெய்கிறது.

முளைகட்டிய கம்பை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம்.நல்ல பலன் கிடைக்கும்.