News Tamil OnlineThatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்மூலிகைகள்

Benefits Of Ginger : அளவோடு எடுத்தால் இஞ்சியும் அமிர்தம் தான் ..!தெரிந்துக்கொள்வோம் இதன் அற்புதங்களை..!

Benefits Of Ginger : அளவோடு எடுத்தால் இஞ்சியும் அமிர்தம் தான் ..!தெரிந்துக்கொள்வோம் இதன் அற்புதங்களை..!

இஞ்சி உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணமிக்க பொருள் ஆகும்.

இது ஒரு மருத்துவ தன்மைகொண்ட ஓராண்டுப் பயிராகும்.

Benefits Of Ginger

Benefits Of Ginger :

“இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல் என்று பொருள், நீரை உள்ளிழுப்பதால் இதற்கு இஞ்சி என்ற பெயர் தோன்றியது”.

இஞ்சி சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சளி, இருமல், செரிமானக் கோளாறுகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

ஆர்த்ரிடிஸ் வலி:

இஞ்சியில் உள்ள சத்துக்கள், நீண்ட நாள் இருக்கும் மூட்டு வலிகளில் இருந்து விடுபட உதவும், என ஆய்வுகள் கூறுகிறது.

அதனால், இஞ்சி ஜூஸை அடிக்கடி பருகி வருவது நல்லது.

இரைப்பைக் குடல் புற்று நோய்:

இஞ்சி வயிற்றுப் பிரச்சனைகளான செரிமானமின்மை, பசியின்மை, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து குணமடைய செய்வதால், இஞ்சியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து அடிக்கடி குடித்தால், இரைப்பைக் குடல் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதோடு, வராமலும் தடுக்கப்படும்.

கொலஸ்ட்ரால் குறையும்:

இஞ்சி இரத்ததில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும், உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து, சீராக பராமரிக்க உதவும். இதனால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

புற்றுநோய்:

இஞ்சியில் உள்ள காரமான உட்பொருட்களான ஜின்ஜெரால்கள், பாராடோல்கள்,ஷோகோல்கள் மற்றும் ஜின்ஜெரான்கள் போன்றவைகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அவற்றை அழிக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், இஞ்சியை ஜூஸ் செய்து குடித்து வாருங்கள். குறிப்பாக ஆண்கள் பருகினால், புரோஸ்டேட் புற்றுநோய் வராது.

Ginger Medicinal Uses

Ginger Medicinal Uses :

மறதி தள்ளிப் போடப்படும்:

இஞ்சியில் உள்ள ஃபீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள்,(phenols and flavonoids) நரம்பு மண்டலத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

இஞ்சி ஜூஸைக் குடித்தால், மூளையில் புரோட்டீன் அளவு அதிகரித்து, மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.

மேலும், புரோட்டீன் அளவு அதிகரிப்பதால் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

சர்க்கரை நோய் கட்டுப்படும்:

இஞ்சியில் ஆன்டிபயாடிக் தன்மை இருப்பதால், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் என ஆய்வுகளில் கூறப்படுள்ளது.

எனவே, சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைப் பருகி வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமா குணமாக:

ஆஸ்துமா நோயாளிகள் தினமும் காலையில் இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

How To Stop Tooth Pain Fast ?

Toothache medicine

சளி நீங்க:

நீரில் சிறிது இஞ்சியை வெட்டி போட்டு கொதிக்க வைத்து, பின் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் போதும், நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பல்வலி குணமாக:

பல்வலி உள்ளவர்கள், இஞ்சி துண்டை ஈறுகளில் வைத்து மசாஜ் செய்தால், குணமாகும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளித்தால் போதும்.

வாயு தொல்லை நீங்க:

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து விட்டு பின் அது தெளிந்த பிறகு நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.

இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும்.

அதிலும் காலையில் பருகினால்,செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.

“எந்த மருந்தினையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் கேடு தான், அவ்வகையில் இஞ்சியை அளவுக்கு மீறி சாப்பிட்டால் ஏற்படும் கெடுதல்களைப் பற்றிப் பார்ப்போம்.”

How To Eat Ginger For Health Benefits ?

இஞ்சி டீயை நாம் அளவுக்கு அதிகமாக குடித்தால் நமது உடலில் அமிலம் உற்பத்தி அதிகரித்து acidity-யை ஏற்படுத்தும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக் கூடாது.

ஏனெனில் இஞ்சி சர்க்கரை அளவை குறைப்பதில் வல்லமை வாய்ந்தது. எனவே, அளவோடு உண்ணுவது நல்லது.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீயை தவிர்ப்பது நல்லது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை ஏற்படுத்துகிறது.

இஞ்சி டீயை அதிக அளவில் குடித்தால் அமைதியற்ற நிலை, நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைய நேரிடும்.

அறுவைசிகிச்சை செய்யும் முன்பு இஞ்சி டீயை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மயக்கத்திற்காக கொடுக்கப்படும் மருந்து இஞ்சி டீ-உடன் எதிர் செயலாற்றும்.

இதனால், அறுவைசிகிச்சை செய்த இடத்தில் புண், இரத்தக்கசிவுப் போன்ற பிரச்சனைகளை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Also Read: Benefits of Onion: ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமா சின்ன வெங்காயத்தின் நற்குணங்கள்..!

பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிப்பதால் பித்த நீர் அதிகமாக சுரந்து வலியை ஏற்படுத்தும். அப் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்கவும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒமட்டல், வாந்தி ஏற்படும் நேரங்களில், இஞ்சி டீ குடிக்க விரும்புவர்.

அவ்வாறு குடிப்பதனால் அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அளவிற்கு அதிகமாக இஞ்சி டீயை குடிப்பதனால் இரப்பைப் பிரச்சனை கூட ஏற்படும். எனவே அளவாக குடிப்பது நல்லது.