Interesting FactsTamil Newsஉலகம்கண்டுபிடிப்புசுவாரஸ்யமான உண்மைகள்செய்திகள்விசித்திரமான தகவல்கள்

Valentine’s Day: காதலர் தினத்தின் வரலாறு உங்களுக்கு தெரியுமா?

Valentine’s Day: காதலர் தினத்தின் வரலாறு உங்களுக்கு தெரியுமா?

உலகம் முழுவதும் அனைத்து மனிதர்களும் கொண்டாடும் வார்த்தைகளில் ஒன்று காதல்.

அப்பா, அம்மா, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரின் மீதும் ஒவ்வொரு விதமான பாசம் கலந்த காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

How did Valentine's Day Started

How did Valentine’s Day Started?

உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் காதலை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புனித காதலர் தினம் பல வித்தியாசமான புராணங்களில் வேர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

காதலர் தினத்தின் ஆரம்பகால பிரபலமான சின்னங்களில் ஒன்று கன்னி, காதல் ரோமன் கடவுள், வில் மற்றும் அம்புடன் ஒரு இளம் சிறுவனின் தோற்றத்தால் குறிக்கப்பட்டுள்ளது.

இப்படி பல கோட்பாடுகள் காதலர் தினத்தின் வரலாற்றைச் சுற்றியுள்ளது.

புனித காதலர் தினம் எப்படி உருவானது?

ரோமானிய பேரரசில் கிளாடியுஸ்(Claudius) ஆட்சிக் காலத்தில், நாட்டில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி உத்தரவை வெளியிட்டார்.

ஆனால் ரோமானிய பேரரசில் ஒருவரான டெர்னியின் செயிண்ட் வாலண்டைன் (Saint Valentine of Terni), பேரரசரின் விருப்பத்திற்கு எதிராக ரோமானிய வீரர்களுக்கு ரகசியமாக திருமணங்களை நடத்தி வைத்தார்.

இந்த குற்றத்திற்காக செயின்ட் வாலண்டைன், சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தன்னை பார்க்க வந்த ஜெயிலரின் மகளை விரும்பி, அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அப்போது செயிண்ட் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்த நிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

அந்த நாள் தான் கி.பி. 270, பிப்ரவரி 14ம் நாள்.

மேலும் இந்த நாளை வாலண்டைன் தினம் (Valentine’s Day) அதாவது காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் செயிண்ட் வாலண்டைன் ஒரு சிறந்த மனிதராக அங்கீகரிக்கப்படுகிறார்.

Valentine's Day

Valentine’s Day:

லுபர்காலியா(Lupergallia):

பண்டைய ரோமானிய மொழியில் லுபர்காலியா என்று அழைக்கப்படும் பிப்ரவரி மாத நடுப்பகுதியில் கருவுறுதல் விழா நடைபெறுது.

இத்தகைய விழாவில் பலியிடப்பட்ட விலங்குகளின் இரத்தத்தில் நனைந்த தோலால் பெண்களை “மெதுவாக அறைந்து” இந்த சடங்கை நடத்துவர்.

5 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு, ரோமானிய பேரரசின் போப் கெலாசியஸ் என்பவர், லூபர்காலியாவை தடை செய்து, “பிப்ரவரி 14 அன்று புனித காதலர் தின கொண்டாட்டத்தை நியமித்தார்” என்று சில சான்றுகள் உள்ளன.

காதலர் தின கொண்டாட்டம்:

புனிதமான காதலர் தினத்தை கொண்டாட மக்கள் காதல் கடிதங்களை எழுதவும் பரிமாறவும் தொடங்கினர்.

காதல் தினம் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை தங்களின் பாரம்பரிய கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு மாற்றி கொண்டு கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர் மக்கள்.

உலகில் சில பகுதிகளில் காதலர்கள் மற்றும் திருமணமான தம்பதிகள் என அனைவரையும் தாண்டி குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் இடையே தங்களின் அன்பை வெளிப்படுத்தும் நாளாக மாறியுள்ளது.

Gifts for Lovers

Gifts for Lovers:

பரிசுகள்:

1500 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கடிதங்களாகப் பகிரப்பட்டது.

இதனையடுத்து 1700 ஆண்டுகளுக்குப் பிறகு, வர்த்தக கவிதைகளுடன் பதிவு செய்யப்பட்ட கடிதங்கள் சந்தைக்கு வர ஆரம்பித்தன.

Also Read: Egyptian Mummies: குற்றவியல் வல்லுநர்கள் இரண்டாம் மன்னர் ராம்செஸின் தோற்றத்தை மீட்டெடுத்துள்ளனர்..!

அதன் பிறகு அமெரிக்கா, யூரோப்பா மற்றும் ஆசியா என ஒவ்வொரு கண்டங்களாக இந்த கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது.

2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 200 மில்லியன் ரோஜாப் பூக்கள் விற்பனையாகியுள்ளது.

40 மில்லியன் ஹார்ட் ஷேப் சாக்லேட் பாக்ஸ்கள்(Heart-shaped chocolate boxes) விற்பனை செய்யப்பட்டுள்ளது.