How to Grow Hair Faster: மணத்திற்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலை நமக்கு தரும் நன்மைகள் பற்றி தெரியுமா?
How to Grow Hair Faster: மணத்திற்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலை நமக்கு தரும் நன்மைகள் பற்றி தெரியுமா?
கறிவேப்பிலை என்பது நம் அன்றாட வாழ்வில் சமையலுக்கு பயன்படுத்தும் ஓர் நறுமணமூட்டும் இலை ஆகும்.
கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை என்று அழைக்கப்படும் இது, பல மருத்துவக் குணங்கள் கொண்டதாக உள்ளது.

Curry Leaves:
கறிவேப்பிலை வேம்பு இலையைப் போன்றே இருக்கும், ஆனால் இது மறுபட்டது.
இது அளவில் 2-4 செ,மீ நீளமும் கொண்டது இருக்கும்.
இதன் இலைகள் தனித்தனியாக இல்லாமல், கொத்து கொத்தாகவே காணப்படும், ஒவ்வொரு கொத்திலும் 10-20 இலைகள் கொண்டிருக்கும்.
இம்மரங்கள் ரொம்ப உயர்வாகவோ, தடியாகவோ இல்லாமல் (4-6) மீட்டர் வரையிலான உயரத்துடன் இருக்கும்.
நம்முடைய பாரம்பரிய சமையல்களில் கறிவேப்பிலை ஓர் மறுக்கமுடையதா பொருளாகவே உள்ளது.
கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறுச்செடி போல் இருந்தாலும் இதிலுள்ள நன்மைகள் ஏராளம்.
ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகளை முழுவதும் அறியாமல், நாம் அதை உண்ணாமலே தூக்கி எறிந்துவிடுகிறோம்.
கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும்.
சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி இல்லை அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, எல்லா உணவிலும் கட்டாயம் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும்.
கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது.
இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன. தண்ணீர் மட்டும் ஊற்றினால் போதும், தானாகவே வளரும் தன்மைகொண்டது கருவேப்பிலை. வளர்ப்பதற்கென்று தனியாக எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை.
ஒருமுறை நட்டு வைத்தாலே போதும், அதன் பழங்கள் பழுத்துக் கீழே விழுந்து எண்ணற்ற செடிகள் வளர்ந்து இனத்தை பெருக்கிக் கொள்கின்றன.
இதன், முக்கியத்துவத்தை உணர்ந்து ஏராளமாகப் பயிர் செய்யப்படுகிறது.
கறிவேப்பிலையில் இரண்டு வகைகள் உள்ளன.
ஒன்று நாட்டுக் கறிவேப்பிலை மற்றொன்று காட்டுக் கறிவேப்பிலை.
அதில், “நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகின்றன”.
தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை என்று சிறப்பித்துக்கூறலாம்.
இக்கால மக்கள் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை அறிந்து தான் உணவில் சேர்த்து வந்துள்ளனர்.
இத்தகைய கறிவேப்பிலையின் நன்மைகள் என்ன என்பதை காண்போம்;

Curry Leaves Benefits:
செரிமான சக்தி:
இன்றைய கால உணவுமுறைகளை நாம் உண்ணும் பொது பலருக்கும் தாங்கள் சாப்பிடும் உணவுகளை சரியாக செரிமானம் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
செரிமான கோளாறு உள்ளவர்கள் கறிவேப்பிலை சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிட்டால் வயிறு, குடல் போன்றவை நன்கு சுத்தமாகி செரிமானமின்மை மற்றும் குடல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் நீங்கும்.
கொழுப்புக்கள் கரையும்:
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய, தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால் போதும், வயிற்றைச் சுற்றியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரை நோய்:
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக அமைய, தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தாலே போதும், சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.
இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கிறது.
How to Grow Hair Faster:
செரிமானம்:
நீண்ட நாட்கள் செரிமானக் கோளாறினால் அவதிப்படுபவர்களாக இருந்தால், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை பச்சையாக மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
முடி வளர்ச்சி:
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால் முடி நன்கு கருப்பாகவும், நீளமாகவும் வளரும்.
சளித் தேக்கம்:
Also Read: Coriander Leaves: கொத்தமல்லி இலைகளில் இவ்வளவு மருத்துவ குணங்களா..!
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி எல்லாம் வெளியேறும்.
கல்லீரல் பாதிப்பு:
கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்ற தினமும் காலை வெறும்வயிற்றில் வேப்பிலையினை உண்டால் போதும்.