Interesting Science Facts That Nobody Knows:மின்விசிறிகளில் ஏன் அழுக்குபடிகிறது?
Interesting Science Facts That Nobody Knows: மின்விசிறிகளில் ஏன் அழுக்குபடிகிறது?
பெரும்பாலும் எல்லா மின்விசிறிகளுமே வேகமாகதான் சுற்றுகிறது, இவ்வளவு வேகமாக சுற்றும்போதும் ஏன் அதில் அழுக்குபடிகிறது

Interesting Science Facts That Nobody Knows:
நம்மைச்சுற்றி காற்றில் இருக்கும் ஈரப்பதம்தான் இதற்கு காரணம் . மின்விசி சுற்றும்போது நம்மைசுற்றியுள்ள காற்றை பின்புறமாக இழுத்து அதிகமான காற்றை நமக்கு தருகிறது .
இந்த தருணங்களில் நம்மை சுற்றியுள்ள காற்றில் ஈரப்பதமும் இருக்கும். தூசி மாதிரியான சின்னசின்ன துகள்களும் இருக்கும் .
காற்றில் இருக்கும் அழுக்கும் ஈரப்பதமும் மின்விசிறியின் பின்புறமாக இழுக்கப்படும்போது இரண்டும் சேர்ந்து ஈரமாகி பிளேடை தாண்டி வெளியே வர முடியாமல் மின்விசிறியின் பிளேடில் தங்கும்.
இதனால் தான் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிகிறதா..!
கண்களின் மேல் புருவங்கள் இருப்பது எதற்காக ?
கண்களின்மேல் இரண்டு புருவங்கள் இருப்பதற்கு இரண்டு முக்கியகாரணங்களுள் ஒன்று

கண்களின்மேல் இருக்கும் புருவங்கள் நம் தலையிலிருந்தும் நெற்றியிலிருந்தும் வழியும் வியர்வையிலிருந்து நம் நெற்றியை பாதுகாக்கிறது. மேலும் நாம் குளிக்கும்போது ஓரளவிற்கு கண்களை திறந்துவைத்து குளிக்கமுடிகிறது என்றால் இந்த புருவங்கள்தான் காரணம். நம் தலையிலிருந்து வரும் எந்தவொரு திரவத்தையும் நம் கண்களுக்குள் நேரடியாக செல்வதையும் தடுக்கிறது .
இரண்டாவது,நாம் பார்க்கும் ஒளி, சூரியஒளி எதுவாக இருந்தாலும் அதை மிகவும் கூர்மையாக நம் கண்களுக்கு காட்டாமல் ஓரளவிற்கு மென்மையாக நம் கண்களுக்கு காட்டும்.ஒருவேளை புருவத்தை எடுத்தால் ஒளி, சூரியஒளி போன்றவை மிகவும் கூர்மையாக தெரியலாம்.
நிறைய பேரு நம் கண்ணிற்குமேல் புருவம் இருப்பது நம்மை அழகாக காட்டுவதற்கு என்று நினைத்து கொண்டிருக்கிறோம் ? பாத்தீங்களா நம்ம படைப்பே ரொம்ப சுவாரசியமா இருக்குல்ல !
பேருந்துகளில் ஏன் Seat Belt இல்லை?
சாதாரணமாக எல்லா கார்களிலும் Seat Belt இருக்கும். ஆனால் பேருந்துகளில் Seat Belt இருக்காது.ஏன்னு என்னைக்காவது யோசிச்சு பார்த்திருக்கீங்களா..

ஏனென்றால் காரை ஒப்பிடும்போது பேருந்துகள் மிகவும் உயரமாக இருக்கும் . ஒரு பேருந்து எங்காவது மோதினால் அதன் விளைவு பேருந்தின் கீழ் பகுதியில் தான் அதிகமாக இருக்கும். அதனால் பேருந்தின் மேல்பகுதியில் இருப்பவர்களை பாதிப்படையும் அளவிற்கு தூக்கி வீசாது.
ஆனால் அதே சமயம் கார் ஒரு இடத்தில் மோதும்போது அதன் விளைவு காரின் உள்பகுதியில் இருப்பவர்களுக்கு அதிக விளைவை ஏற்படுத்தும்.
விளைவு எப்படி இருக்கும் என்றால் காரின் உட்புறம் இருப்பவர்கள் கண்ணாடியை உடைத்து வெளியே வீசும் அளவிற்கு இருக்குமாம்.
அதுமட்டும் இல்லாமல் காரை விட பேருந்து மிகவும் வலுவாக இருக்கும். அதனால்தான் பேருந்தின் பின்புறம் பயணிகள் இருக்கும் வரை சேதம் ஏற்படாதது. பேருந்தில் அதிக பாதுகாப்பு இருப்பதனால்தான் Seat Belt வைக்கவில்லை.
மழை நீரை குடிக்கலாமா?
மழை வரும்போது வரும் மழை நீரை குடிக்கலாமா என்று கேட்டால் நிச்சயமாக குடிக்கலாம் .
ஏனென்றால்,

இது சாதாரண தண்ணீரை விட பத்து மடங்கு அதிக சுத்தமானது.ஆனால் இந்த மழைநீரை குடிப்பது என்பது ஒவ்வொரு பகுதியை பொறுத்தது.
நீங்கள் தொழிற்சாலை மாசுபாடு உள்ள பகுதியில் இருந்தால் அந்த மழைநீரில் இரசாயனம் கலக்கும். ஏனெனில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் காற்றுகளிலும் இரசாயனம் இருக்கும் .
அந்த இரசாயனம் மழை நீருடன் ஒன்றுசேர்ந்துதான் கீழயே வரும்.
அதனால் அந்த பகுதிகளில் உள்ள நீரை குடிக்கக்கூடாது. குடித்தால் வயிறுவலி மற்றும் வயிறு சம்மந்தமான வேறு பிரச்சனைகளும் வரும்.இதுவே கிராமப்புறங்களிலிருந்து வரும் மழைநீரை குடிப்பது மிகவும் பாதுகாப்பானது .
ஏனெனில் அந்த இடங்களில் இரசாயன மாசு போன்ற எந்தவித நச்சுத்தன்மையும் இல்லாததால் அந்த இடங்களில் விழும் மழைநீர் மிகவும் நல்லது . அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு மழைநீரை அருந்தலாம் .
இது சாதாரண தண்ணீரை விட பத்து மடங்கு அதிக சுத்தமானது.ஆனால் இந்த மழைநீரை குடிப்பது என்பது ஒவ்வொரு பகுதியை பொறுத்தது.
Also Read: Some Interesting Facts: இதுனால தான் விமானம் வெள்ளை நிறத்துல இருக்கா..!
நீங்கள் தொழிற்சாலை மாசுபாடு உள்ள பகுதியில் இருந்தால் அந்த மழைநீரில் இரசாயனம் கலக்கும். ஏனெனில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை மற்றும் காற்றுகளிலும் இரசாயனம் இருக்கும் .
அந்த இரசாயனம் மழை நீருடன் ஒன்றுசேர்ந்துதான் கீழயே வரும். அதனால் அந்த பகுதிகளில் உள்ள நீரை குடிக்கக்கூடாது.
குடித்தால் வயிறுவலி மற்றும் வயிறு சம்மந்தமான வேறு பிரச்சனைகளும் வரும்.இதுவே கிராமப்புறங்களிலிருந்து வரும் மழைநீரை குடிப்பது மிகவும் பாதுகாப்பானது .ஏனெனில் அந்த இடங்களில் இரசாயன மாசு போன்ற எந்தவித நச்சுத்தன்மையும் இல்லாததால் அந்த இடங்களில் விழும் மழைநீர் மிகவும் நல்லது .
அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு மழைநீரை அருந்தலாம் .
எங்கு எதை தொலைத்ததோ தெரியவில்லை ? இந்த வானம் இப்படி கண்ணீர் வடிக்கிறதே மழையாக !!