The Mummy: எகிப்தில் உள்ள ‘கோல்டன் பாய்’ மம்மியிலிருந்து CT ஸ்கேன் மூலம் அதிர்ச்சியூட்டும் 49 தாயத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..!
The Mummy: எகிப்தில் உள்ள ‘கோல்டன் பாய்’ மம்மியிலிருந்து CT ஸ்கேன் மூலம் அதிர்ச்சியூட்டும் 49 தாயத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..!
பண்டைய எகிப்தில் இருந்து “கோல்டன் பாய்”(Golden Boy) என்று அழைக்கப்படும் மம்மியில் நம்பமுடியாத அளவிற்கு விரிவான கம்ப்யூட்டட் டோமோகிராபி(computed tomography) CT ஸ்கேன் மூலம் 49 தாயத்துக்கள் மறைந்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர், அவற்றில் பல தங்கத்தால் செய்யப்பட்ட தாயத்துக்கள் எனவும் கூறுகின்றனர்.

CT Scan:
மம்மியின் சர்கோபகஸில் காணப்படும் பொன்னிறமான தலை முகமூடி கொண்ட திகைப்பூட்டும் காட்சியின் காரணமாக இளம் மம்மி ‘கோல்டன் பாய்’ என்னும் புனைப்பெயரைப் பெற்றது.
சர்கோபகஸ் என்பது ஒரு சடலத்திற்கான பெட்டியாகும்.
இது பொதுவாக கல்லில் செதுக்கப்பட்டு, தரையின் மேலே இருக்கலாம் அல்லது புதைந்திருக்கலாம்.
மேலும் அவரது ஞானப் பற்கள் இன்னும் வெளிவராததால் அவர் இறக்கும் போது அவருக்கு 14 அல்லது 15 வயது இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கோல்டன் பாய் 1916 இல் தெற்கு எகிப்தில் ஒரு கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்கேன்களை ஆராய்ந்தபோது, ஆராய்ச்சியாளர்கள் 21 வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட டஜன் கணக்கான தாயத்துக்களை அவரது உடலில் கண்டறிந்தனர்.
அந்த அறிக்கையின்படி, [சிறுவனின்] தாயத்து அவரது ஆண்குறிக்கு அடுத்ததாக இரண்டு விரல்கள், தங்க இதயம் மற்றும் ஒரு தங்க நாக்கு ஆகியவற்றை உள்ளடக்கி இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.
மேலும் அந்த மம்மி ஒரு ஜோடி செருப்பு அணிந்திருந்ததாகவும், உடல் முழுவதும் செடி போன்ற மாலை அணிந்திருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

The Mummy:
எகிப்தில் உள்ள கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கதிரியக்கவியல் பேராசிரியரும் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான சஹர் சலீம் கூறுவது “இந்த வகை மம்மி, ரோமானிய காலத்தின் மரணம் மற்றும் பிற்கால வாழ்க்கை பற்றிய எகிப்திய நம்பிக்கைகளின் காட்சிப் பொருளாகும்” என்கிறார்.
இந்த மம்மியின் உண்மையான அடையாளம் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றாலும், அவர் உயர் சமூக பொருளாதார அந்தஸ்தில் இருந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.
மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் தாயத்துக்கள் முக்கிய பங்கு வகித்தன.
“பண்டைய எகிப்தியர்கள் தாயத்துகளின் சக்தியை நம்பினர். மேலும் அவற்றைப் பாதுகாப்பதற்காகவும், உயிருடன் இருப்பவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் சில நன்மைகளை வழங்குவதற்கும் பயன்படுத்தினர்” என்று சலீம் கூறினார்.
பண்டைய எகிப்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் தாயத்துக்களைப் பயன்படுத்தினர்.
உதாரணமாக, இளம் மம்மியின் நாக்கு இறந்தவர்களை பேச அனுமதிப்பதற்காக தங்கத்தால் மூடப்பட்டிருந்தது என்று சலீம் கூறினார்.
இருப்பினும், குறிப்பாக ஒரு தாயத்து சலீமுக்கு தனித்து நின்றது.
Book of the Dead:
உடல் குழிக்குள் வைக்கப்பட்ட தங்க இதய ஸ்கேராப்(scarab) 3D பிரிண்டரைப் பயன்படுத்தி அதன் பிரதியை உருவாக்கினார்.
ஸ்கேராப் என்பது பழங்கால எகிப்தியர்கள் புனிதமாகக் கருதிய வண்டு.
இது மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது, குறிப்பாக நான் 3D அச்சிட்ட பிறகு அதை என் கைகளில் வைத்திருக்க முடிந்தது என சலீம் கூறினார்.
சிறுவனின் பயணத்தின் போது அவரைப் பாதுகாப்பதற்காக பாதிரியார்கள் எழுதிய கல்வெட்டுகள் மற்றும் மந்திரங்களைக் குறிக்கும் வகையில் முதுகில் அடையாளங்களும் இருந்தன.
அதில் ஹார்ட் ஸ்கேராப்(heart scarab) சுமார் 1.5 அங்குலங்கள் (4 சென்டிமீட்டர்) அளவிடப்பட்டதாகவும், இறந்தவர்களை மரணத்திற்குப் பிறகான வாழ்க்கைக்கு வழிகாட்ட உதவும் முக்கிய எகிப்திய உரையான “புக் ஆஃப் தி டெட்”(Book of the Dead) இன் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.