News Tamil OnlineTamil NewsTamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்பழங்கள்

Fruits Good For The Heart: அடடே..இந்த பழம் இதயத்தை காக்குமா..!

Fruits Good For The Heart: அடடே..இந்த பழம் இதயத்தை காக்குமா..!

கோடை காலம் தொடங்கிவிட்டாலே அதிலிருந்து சமாளிக்க சில முக்கிய விஷயங்களை நாம் கடைபிடித்து வருவோம், குறிப்பாக நமது உணவு பழக்கங்கள் முதல் தினசரி நடவடிக்கைகள் வரை மாற்றி கொள்வோம்.

அந்த வகையில் பொதுவாக வெயில் காலங்களில் பலரும் விரும்பி சாப்பிட கூடிய உணவு பொருட்களில் மாம்பழமும் ஒன்றாகும்,தர்பூசணி பழத்தை போன்றே பலரும் மாம்பழத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Fruits Good For The Heart

Benifits Of Mango:

மாம்பழத்தை வெயில் காலங்களில் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

இதில் ஃபோலேட், பீட்டா கரோடின், இரும்பு, வைட்டமின் A , வைட்டமின் C, கால்சியம், ஜிங்க் மற்றும் வைட்டமின் E போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

செரிமானம் :

மாம்பழத்தை சாப்பிடுவதால் செரிமானம் சீராக நடைபெறும். இதில் இருக்கும் அமிலேஸ் எனப்படும் செரிமான நொதிகள் எளிதில் செரிமானம் நடப்பதற்கு உதவுகின்றன.

மேலும், மாம்பழத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு இது ஓர் சிறந்த தீர்வினை அளிக்கும்.

எதிர்ப்பு சக்தி :

ஒரு கப் மாம்பழத்தில் சுமார் 10% வைட்டமின் A உள்ளது. மேலும் இதில் அதிக வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் நிறைந்துள்ளன.

இந்த விட்டமின்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுவதில் முக்கிய பங்கு பெற்றுள்ளது.

மேலும், தாமிரம், ஃபோலேட், வைட்டமின் E மற்றும் வைட்டமின்கள் B போன்ற சத்துக்கள் மாம்பழத்தில் காணப்படுவதால் இது உடலின் நோய்யெதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவும் உதவுகின்றன.

தோல் ஆரோக்கியம் :

மாம்பழங்களில் சருமத்திற்கு ஏற்ற வைட்டமின்C மற்றும் வைட்டமின் A போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.

இவை இரண்டும் சருமத்திற்கு நன்மையினை அளிக்கிறது. மாம்பழங்களை சாப்பிடுவதால் முகத்தில் இருக்கும் அடைபட்ட துளைகளும் நீங்குகின்றன.

மேலும், இவை தோலில் ஏற்படும் எண்ணெய்தன்மையினை தடுக்க உதவுகிறது. எளிதில் தோன்றும் வயதான தோற்றத்தினை மாம்பழம் சாப்பிடுவதால் தவிர்க்கலாம்.

Fruits Good For The Heart:

இதய ஆரோக்கியம் :

மாம்பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் போன்றவை இதில் அதிகம் இருப்பதால், இதய பகுதிகளில் உள்ள தமனிகள் திறந்து வைக்க இது உதவுகிறது மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

மேலும் இந்த மாம்பழத்தில் பாலிஃபீனால்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு மற்றும் தொற்று எதிர்ப்பு போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே மாம்பழம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருவதாக கருதப்படுகிறது.

உடல் எடை :

மாம்பழ தோலில் கொழுப்பை கரைக்கும் பைட்டோ கெமிக்கல்கள் அடங்கியுள்ளன.

எனவே, இந்த மாம்பழங்களை அளவோடு சாப்பிட்டோம் என்றால் அது உடல் எடையினை குறைக்க கூட உதவும்.

மாம்பழத்தின் சதை பகுதியில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
எனவே, இந்த சத்தான மாம்பழத்தை எடுத்துக்கொண்டு மற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை கைவிடுங்கள்.

Which fruit is good for pregnancy ?

கர்ப்பிணிகள்:

கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் இந்த மாம்பழத்தினை எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு பதில் இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணலாம்.

எடை அதிகரிக்க:

உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். 150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன.

இதன் கலோரிகளை உடல் சுலபமாக ஈர்த்துக் கொள்ளும். மேலும் மாம்பழத்தில் உள்ள மாவுச்சத்து எளிதில் எடையை அதிகரிக்க உதவுகிறது.

மாம்பழம் அதிகம் உண்பதால் ஏற்படும் தீமைகள்:

செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்:

இப்போது பெரும்பாலான மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன.

இந்த மாம்பழங்களை கால்சியம் கார்பைடு என்ற வேதிப்பொருளினை கொண்டு பழுக்க வைக்கப்படுகின்றது.

நாம் இதனை உண்பதால் உடல் ஆரோக்கியம் பாதித்து, புற்றுநோயை கூட ஏற்படுத்தும்.

எனவே அத்தகைய மாம்பழங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள்.

இரைப்பை குடல் பிரச்சனைகள்:

மாம்பழங்களை அதிகமாக சாப்பிடும் போது, குறிப்பாக பழுக்காத பழங்களை அதிகம் சாப்பிடும் போது இரைப்பை குடல் பிரச்சனைகளான செரிமான பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே மாங்காயை அதிகம் சாப்பிடாதீர்கள்.

தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல்:

நன்கு பழுத்த மாம்பழங்களை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கும்.

முக்கியமாக மாம்பழம் சாப்பிட பின் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.

மாம்பழ ஜூஸ்:

மாம்பழங்களை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ்ஸாக குடிப்பது நல்லதல்ல.

ஏனெனில் மாம்பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக நீங்கிவிடும், இது நம் உடலுக்கு தீங்கினை தான் அளிக்கும்.

மேலும் மாம்பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் வேதிப்பொருள் நிறைந்த சர்க்கரையை சுவைக்காக சேர்ப்பதால், மேலும் கெட்டதாக மாறிவிடும்.

Also Read: Benefits Of Eating Grapes: திராட்சையில் இவ்வளவு நன்மைகளா..!

சாப்பிடக்கூடாதவர்கள்:

ஆர்த்ரிடிஸ், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவிலான மாம்பழத்தை சாப்பிடுங்கள். அதுவே உடலுக்கு நல்லது.

அதிலும் மாம்பழம் மட்டுமின்றி, மாங்காயையும் தான் அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும்.

எனவே, எந்த உணவாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *