இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Skin glowing tips: இரவு தூங்கும் முன் இந்த 3 விஷயங்களை செய்தால் முகம் பளபளக்கும்..!

Skin glowing tips: இரவு தூங்கும் முன் இந்த 3 விஷயங்களை செய்தால் முகம் பளபளக்கும்..!

முறையான சரும பராமரிப்புகளைப் பின்பற்றினாலே பொலிவான அழகைப் பெறலாம். குறிப்பாக இரவு தூங்கும் முன் செய்யும் சில குறிப்புகள் ஆரோக்கியமான சரும அழகைத் தரும்.

ஏனெனில் இரவில்தான் உங்கள் சருமத் துகள்கள் விரிந்து சுவாசம் பெறும். அந்த சமயத்தில் நீங்கள் அளிக்கும் பராமரிப்பு உங்கள் முகத்திற்கு கூடுதல் பலன் தரும்.

Skin glowing tips-newstamilonline

Skin glowing tips:

முகம் கழுவுதல் :
முதலில் உங்கள் சருமத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவுதல் அவசியம். இதனால் சருமத்தில் இருக்கும் கூடுதல் எண்ணெய், பிசுபிசுப்பு, அழுக்கு, இறந்த செல்கள் போன்றவை நீங்கி சருமத்தை தெளிவாக்கும்.

சீரம் :
சருமத்திற்கு ஈரப்பதம் அளித்தல் மிக மிக அவசியம். இதனால் வறண்ட மற்றும் வெடிப்பான சருமத்தை தவிர்க்கலாம்.

இதற்கு தேன், தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைஸர் சீரம் போன்றவையும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.

நைட் கிரீம் :
சீரத்தை சருமம் உள்ளிழுத்தபின் நைட் கிரீம் பயன்படுத்தலாம். காலையில் எழுந்து பார்க்கும்போது பொலிவான சருமத்தை தரும்.

Also Read: Melatonin and sleep: தூங்க செல்ல உதவும் மெலடோனின் ஹார்மோன்..!

டல்லாக தோற்றமளிக்கும் சருமத்தை பளிச்சிட வைக்கும் சக்தி நைட் கிரீம்கள் செய்யும்

மேலே குறிப்பிட்ட விஷயங்களை செய்ய நேரமில்லை என்றாலும் முகத்தை கழுவுவதை மட்டும் கட்டாயம் கடைபிடியுங்கள். அதுவே சருமத்திற்கு போதுமானது.

முகம் பளபளக்க நாம் செய்ய வேண்டியவை:

பாதாம், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இதை செய்தால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

கோதுமை தவிடு மற்றும் பால் இரண்டையும் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து போகும்.

தக்காளி சாற்றில் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தாலும் முகம் பொலிவுடன் காணப்படும்.

தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மறையும்.

முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு, தேன் மூன்றையும் கலந்து தடவினாலும், கரும்புள்ளிகள் நீங்கும்.

பப்பாளி பழத்துடன் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.