South Georgia Museum: உலகின் விளிம்பில் உள்ள அருங்காட்சியகம் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்படுகிறது..!

South Georgia Museum: உலகின் விளிம்பில் உள்ள அருங்காட்சியகம் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்படுகிறது..!

அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு விளிம்பில், அண்டார்டிக் வட்டத்திற்கு சற்று மேலே, ஒரு பிரிட்டிஷ் தீவு ஒன்று உள்ளது. இதன் அருகே தெற்கு ஜார்ஜியா அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

th Georgia Museum

South Georgia Museum:

இங்கு நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை, தொழிலாளர்கள், விஞ்ஞானிகள் பராமரிப்பு ஊழியர்கள் போன்றவர்கள் மட்டுமே அதிகமாக காணப்படுகின்றனர்.

இத்தகைய தொலைதூரத்தில், மேலும் தொற்றுநோய் இருந்த இந்த சமயத்திலும், அங்கிருக்கும் இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தெற்கு ஜார்ஜியா ஒரு பிரிட்டிஷ் கடல்கடந்த பிரதேசமாகும், என்கிறார் பாரம்பரிய அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி அலிசன் நீல்.

இங்கு கடற்பறவைகளை அதிகம் காணலாம். மேலும், திமிங்கலங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

1914-17 இல் அண்டார்டிக் ஆய்வாளர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் மோசமான பயணத்தில் காணாமல் போன எண்டூரன்ஸ் கப்பல், வெட்டல் கடலின் அடிப்பகுதியில் உள்ளது.

ஷேக்லெட்டனின் மறைவைக் குறிக்க, தெற்கு ஜார்ஜியா ஹெரிடேஜ் டிரஸ்ட் (SGHT) ஒரு சிறப்பு கண்காட்சியை நடத்தி வருகிறது.

அவர் இல்லாமல் தொடர்ந்த அந்த இறுதிப் பயணத்தின் கதையை இது கூறுகிறது.

மேலும் அவரது மரணம் மற்றும் பிரிட்டிஷ் கடல்கடந்த பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டதை நினைவுகூரும் சில கவர்ச்சிகரமான ஆவணங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

20 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வணிகத் திமிங்கலத்தின் மையமாக இருந்தது இந்த தெற்கு ஜார்ஜியா.

ஆனால், இப்போதைய காலக்கட்டத்தில் நீல திமிங்கலங்களை காணுவதே கடினமாக இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெற்கு ஜார்ஜியா தீவைச் சுற்றி நீல திமிங்கலங்கள் மீண்டும் வர துவங்கியுள்ளன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

1989 ஆம் ஆண்டில், டேவிட் வின்-வில்லியம்ஸ், பிரிட்டிஷ் அண்டார்டிக் விஞ்ஞானி, வில்லாவை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற பரிந்துரைத்தார்.

தென் ஜார்ஜியா லண்டனை விட தென் அமெரிக்கா – மற்றும் தென் துருவத்திற்கு அருகில் இருந்தாலும், 18 ஆம் நூற்றாண்டிலிருந்து இது ஒரு பிரிட்டிஷ் தீவாக இருந்து வருகிறது.

இத்தீவும், அருங்காட்சியகமும் உலகின் ஒரு புள்ளியாக காணப்படுகிறது.

Grytviken – Museum:

இத்தகைய கால கட்டத்தில் அருங்காட்சியகத்தை இணையதளங்கள் மூலமே பார்த்து வருகின்றனர் மக்கள்.

இப்பொழுது மீண்டும் தெற்கு ஜார்ஜியா அருங்காட்சியகத்தை பார்வையாளர்களுக்கு நேரில் காண்பிக்க முடிவெடுத்துள்ளது.

ஆனால் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டாலும், வழக்கம் போல் வணிகம் நடைபெறவில்லை.

அரசாங்கம் கப்பல்களை கோவிட் அபாயத்தைப் பொறுத்து சிவப்பு, அல்லது பச்சை என வகைப்படுத்தியுள்ளது.

பச்சை நிற கப்பல்களில் பயணிகள் வழக்கம் போல் பார்வையிடலாம்; சிவப்பு நிற கப்பல்கள் தீவில் தரையிறங்கலாம், ஆனால் Grytviken ஐப் பார்வையிட முடியாது.

இவ்வாறு பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்.

கோவிட்-க்கு முந்தைய ஒவ்வொரு ஆண்டும் வருகையாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்தது.

இப்போது வருகை குறைந்துள்ளதால் வணிகம் குறைந்துள்ளது.

Also Read: brainchip: மூளையை கட்டுப்படுத்தும் ‘சிப்’ஆபத்தா? வளர்ச்சியா?

தீவு மற்றும் அருங்காட்சியகம், “தென் ஜார்ஜியாவின் கடந்த காலக் கதைகளைப் பற்றி மக்களுக்குக் கற்பிக்கும் படி அமையும் எனவும்,

மனிதகுலம் தன் இயற்கையை சுரண்டுவதற்குப் பதிலாக அதைப் பாதுகாக்கத் வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் இவ் அருங்காட்சியகம்(The Museum) அமையும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *