Tamil NewsTamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Skin Disease Treatment: கோவைக்கீரையின் மருத்துவப் பயன்கள்:

Skin Disease Treatment: கோவைக்கீரையின் மருத்துவப் பயன்கள்

கோவை அல்லது கொவ்வை இந்த தாவரம் மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இந்தக் கொடி வகைத் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகள் நிறைந்த இடங்களில் பரவலாக வளருகின்றன.

Skin Disease Treatment

Skin Disease Treatment:

இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு இதற்குள் மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு.

இதன் பூ வெள்ளை நிறத்தில் இருக்கும், இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையதாக இருக்கும். இலைக்கஞ்சியில் இதன் இலை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

இனி கோவைக்கீரையின் பயன்கள் என்ன என்பதை காண்போம் வாருங்கள்;

நம்மில் பெரும்பாலானோர் கோவைக்காயினை உணவில் சேர்த்துக்கொள்வதை விரும்புவதில்லை. ஆனால் இது சர்க்கரை வியாதிக்கு ஒரு அருமருந்தாக பயன்பட்டு வருகிறது.

நம் முன்னோர்கள் இதன் பயன் அறிந்து அதன் இலையும் கீரையாக உணவுடன் சேர்த்து வந்தனர்.

இந்த கீரை இனிப்பு, கசப்பு என இரண்டு வகையான ருசிகளையும் கொண்டுள்ளது.

கற்கோவை, வரிக்கோவை, அப்பைக் கோவை, செங்கோவை, கருங்கோவை என ஐந்து வகை கோவை இனங்கள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கசப்பு சுவை கொண்ட இந்தக் கோவைக் கீரையை மசியல் செய்தோ, பொரியல் செய்தோ சாப்பிடலாம். இது உணவு ஜீரணம் அடைவதற்கு உதவும் வகையில் இருக்கும்.

மற்ற கீரைகளில் உள்ள சத்துக்களை இது தக்கவைக்கும் தன்மை உடையதால் முற்காலத்தில் இதனை பிற கீரைகளுடன் சேர்த்து சமைக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

சரும நோய் தீரும்:

கோவை இலையானது இருமல், வாதநோய், பெருவிரணம், சிறு சிரங்கு, உடல் சூடு, நீரடைப்பு போன்ற நோய்களை நீக்குகிறது

கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி குடித்தால் உடல்சூடு, சொறி சிரங்கு, நீரடைப்பு, இருமல் போன்ற நோய்கள் நீங்கும்.

இதன் இலைகளை காயவைத்து பொடி செய்து, மருந்தாக கொடுத்தாலும் இந்த நோய்கள் நீங்கும்.

வியர்க்குருவை தடுக்க:

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருக்களாக நீர்கோர்த்துக் கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை இலையை அரைத்து, உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்க்குரு வராமல் தடுக்கலாம்.

இதன் இலைச் சாறுடன் வெண்ணெய் சேர்த்துச் சிரங்குகளுக்கு மேலே பூசலாம். உடலில் வியர்வை உருவாவதற்கு கோவை இலையின் சாறினை பூசினால் போதும்.

படர்தாமரை, புண் சரியாக கோவை இலைச் சாற்றினை பிறிதெடுத்து அதனை நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி வடித்து புண்ணின் ,மேல் பூசினால் போதும் புண் சரியாகும்.

நுரையீரலில் ஏற்படும் எரிச்சல், இரணம் இவைகளுக்கு மேல் இதனை தடவிவர புண் ஆறி குணமாகும்.

இவ்விலையோடு நெய் சேர்த்து வதக்கி கட்டிகளுக்கு மேல் பூசினால் கட்டிகள் பழுத்து உடையும். வாய்ப்புண் நீங்குவதற்கு இலையை மென்று சுவைக்கலாம். அவ்வாறு சுவைப்பதினால் வாய்ப்புண் ஆறும்.

இக்கீரையை எண்ணெய் காய்ச்சிக் கொடுப்பதும் உண்டு. இவ்வெண்ணெய்க்கு மேக சஞ்சீவி எண்ணெய் என்று பெயர்.

கண்ணுக்கு குளிர்ச்சி அடைய கோவைக் கீரையானது கண்ணுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

How to cook courgette?

தேவையான பொருள்கள்:

கோவை இலை 1 கப்
பாசிப் பருப்பு கால் கப்
சின்ன வெங்காயம் 10
காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் கால் கப்
சீரகம் அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து – தலா கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

  • முதலில் கோவை இலையை அலசி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
  • பின் அதனுடன் பாசிப் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக விடவேண்டும்.
  • அடுத்து, தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் இவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் கோவை இலை சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைத்து உண்ணலாம். கோவை இலை வெந்ததும், வேகவைத்திருக்கும் பாசிப் பருப்பு, அரைத்த விழுதினை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு, பெருங்காயம் சேர்த்து இறக்கிவிடுங்கள்.

இரும்புச் சத்து நிறைந்த இந்தக் கீரைக்கூட்டு, வாய்ப் புண், வயிற்றுப் புண் போன்ற நோய்களை ஆற்றும்.

Also read: Food For Weight Loss: உடல்கழிவுகளை வெளியேற்றி எடையை குறைக்க உதவும் உணவுகள்..!

இந்த கோவைக்கீரையினை உணவுகளில் இருந்து நீக்காமல் நீங்களும் சேர்த்து பயன்பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *