News Tamil OnlineTamil Newsஅறிவியல்செய்திகள்

What causes kidney failure? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏன் சிறுநீரகம் செயலிழந்து போகிறது.

What causes kidney failure? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏன் சிறுநீரகம் செயலிழந்து போகிறது.

நம்முடைய உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமான உறுப்பு சிறுநீரகம். சிறுநீரகத்தின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு என்றால் இதன் பக்க விளைவு நம்மை மரணத்தில் கூட கொண்டு நிறுத்தலாம்.

What causes kidney failure

What causes kidney failure?

இந்த காலத்தில் சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் வரையிலும் எளிதில் சிக்கி பாதிக்கப்பட்டு வரும் ஒரு நோய்யாக சிறுநீரக செயலிழப்பு இருக்கிறது.

இந்நோய் தன்னை அறியாமல் தன்னாலேயே தாக்கப்படும் நோயாக மாறிவிட்டது.

சிறுநீரகங்கள் அடிவயிற்றின் ஆழத்தில் அமைத்திருப்பதால் சாதரணமாக நாம் அதனை உணர முடியாது.

சிறுநீரகத்தின் செயல்:

சிறுநீரகம் நம் உடல் முழுவதையும் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

ஆரோக்கியமான சிறுநீரகங்கள் பல முக்கியமான வேலைகளைச் செய்கின்றன.

உடலில் இருந்து கழிவு பொருட்கள் மற்றும் கூடுதல் தண்ணீரை வெளியேற்றுகிறது.

இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது, கூடவே இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் செய்கிறது.

Reson of kidney failure?

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு இவை இரண்டும் சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

உடல் காயங்கள், நோய்கள் அல்லது பிற கோளாறுகளாலும் இவை சேதமடையலாம்.

  • சிறுநீரகங்கள் செயலிழந்தால் ஆபத்து:

சிறுநீரக செயலிழப்பு ஒரே இரவில் நடப்பது அல்ல, இது படிப்படியாக தோன்றுகிறது.

முகத்தில் வீக்கம், பாதங்களில் வீக்கம், பசியின்மை, வாந்தி எடுத்தல், முகம் வெளிறிபோதல், மெலிதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம்வருதல் போன்ற மாற்றங்களை கண்டால் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள்.

சிலருக்கு சிறுநீரகம் செயலிழக்கும் வரை சிறுநீரக நோய் இருப்பது கூட தெரியாது.

ஏனெனில், ஆரம்பகால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது.
பொதுவாக நோய் ஏற்பட்டதன் பின்னரே அறிகுறி வெளிப்படும்.
அவ்வகையில் ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை காண்போம்.

< தூக்கமின்மை
< பசியின்மை
< பலவீனம்
< சோர்வு
< அரிப்பு
< எடை இழப்பு
< தசைப்பிடிப்பு (குறிப்பாக கால்களில்)
< கால் அல்லது கணுக்கால் வீக்கம்
< இரத்த சோகை (குறைந்த இரத்த எண்ணிக்கை)

சிறுநீரகம் ஆரோக்கியமானதாக இருக்கும் போது அவை, நம் இரத்தத்தில் இருந்து கழிவுகள் மற்றும் கூடுதல் திரவத்தை அகற்றும் பணியினை செய்யும்.

அதுவே சிறுநீரகம் செயலிழந்து விட்டால் கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவம் நம் இரத்தத்தில் உருவாகி, நோயினை ஏற்படுத்தும்.

சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சையை நீங்கள் ஆரம்பித்தவுடன், உங்கள் அறிகுறிகள் மேம்படும், மேலும் நீங்கள் நன்றாக உணரத் தொடங்குவீர்கள்.

குழந்தைகளின் சிறுநீரக நோய்க்கான காரணங்கள் என்ன?

இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கும் கூட கிட்னி இழப்பு ஏற்பட்டு விட்டது.

பிறப்பு முதல் 4 வயது வரை, பிறப்பு குறைபாடுகள் மற்றும் பரம்பரை நோய்கள் சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய காரணங்களாகும்.

5 மற்றும் 14 வயதிற்கு இடையில், சிறுநீரக செயலிழப்பு பொதுவாக பரம்பரை நோய்கள், நெஃப்ரோடிக் நோய் போன்றவற்றால் ஏற்படுகிறது.

15 மற்றும் 19 வயதிற்கு இடையில், குளோமருலியை பாதிக்கும் நோய்கள் சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாகும், மேலும் பரம்பரை நோய்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

குளோமருலியின் வேலை கழிவுகளை வெளிப்படுத்துவது குளோமருலி சேதமடையும் போது, சிறுநீரகங்களால் சரியாக செயல்பட முடியாது, இதுவே குளோமருலர் நோய்.

தடுக்கும் முறைகள்:

முதலில் சிறுநீரகம் எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்பட வேண்டுமென்றால், ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.

சிறுநீரகம் பாதிப்படையாமல் இருக்க அன்னாசியில் இருக்கும் நார்ச்சத்து மிகவும் பயன்தருவதாக இருக்கும்.

மேலும் இதில் மாங்கனீசு, வைட்டமின் c மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் புரோமிலைன் போன்றவை நிறைந்துள்ளன.

அதோடு முன்னரே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான பழம். இதை உண்பது மிக நல்லது.

குடைமிளகாயில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் c அதிகம் இருப்பதால் இது சிறுநீரகத்திற்கு நல்ல ஆரோக்கியமானதாக இருக்கும்.

எனவே இத்தகைய உணவுகளை உண்பது நல்லது.

சிறுநீரக நோய்களை எப்படி தடுப்பது:

  • சரியான உடல் எடையினை கொண்டிருக்க வேண்டும்.
  • உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க வேண்டும்.
  • ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • புகைபிடித்தல் குடிப்பழக்கம் இருத்தல் கூடாது.
  • நிறைய தண்ணீர் குடித்தல் நல்லது.

சிறுநீரகத்தை பராமரிக்க எடுத்துக்கொள்ளும் உணவுகள்:

தினமும் முளைகட்டிய பயிர்களை சாப்பிடலாம் இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருப்பதுடன், கல் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.

சிவப்பு குடைமிளகாய்:

குடைமிளகாயில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, எந்த வகையான புற்றுநோயும் வராமல் தடுக்கிறது.

முட்டைகோஸ்:

முட்டைகோஸ் சிறுநீரக இயக்கத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆப்பிள்:

ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் நம் உடலின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, இரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகமும் சுத்தமாக இருக்கும்.

ஆலிவ் ஆயில்:

ஆலிவ் ஆயிலில் உள்ள (fatty acids) ஃபேட்டி ஆசிட்டுகள், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன.

வெங்காயம்:

வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டால், சிறுநீரக கற்களை வருவதை இயற்கையாகவே தடுக்கலாம். மேலும் இது சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

இது தவிர சிவப்பு திராட்சை, முட்டையின் வெள்ளைக்கரு, மீன் போன்ற உணவுகளையும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் உண்ணலாம்.

அதுபோல் நீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சாப்பிடுவது, சாப்பிடும் உணவில் உப்பை குறைவாக சேர்த்துக்கொள்வதன் மூலமும் நம் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

சிறுநீரக நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

சோடா அதிகமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் பாஸ்பரஸ் அதிக அளவு இருப்பதால் இது சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

அதிக சோடியம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Also read: Body Cooling Drink: உடலுக்கு குளிர்ச்சியூட்டும் அரியவகை மங்குஸ்தான் கற்றாழை ஜூஸ்..!

மேலும், உருளைக்கிழங்கு, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிட்ரிக் பழங்கள், தக்காளி, வாழைப்பழம் போன்ற உணவுகளை அதிகம் உண்பதை தவிர்ப்பதும் நல்லது.

இவ் உணவு முறைகளை கையாண்டு சிறுநீரக பிரச்சனையிலிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *