News Tamil OnlineToday Tamil News Onlineஅறிவியல்

Largest Cave in the World: உலகில் மிகப்பெரிய படிகக் குகை! வியக்க வைக்கும் இயற்கை அழகு!

Largest Cave in the World: உலகில் மிகப்பெரிய படிகக் குகை! வியக்க வைக்கும் இயற்கை அழகு!

ஸ்பெயினில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒரு பிரகாசமான பொக்கிஷத்தை மறைத்து வைத்துள்ளது. அது தான் உலகின் மிகப்பெரிய ஜியோட் (படிகக் குகை).

Largest Cave in the World

Largest Cave in the World:

ஜியோட் என்றால் “பாறையில் படிக அல்லது கனிமப் பொருட்களைக் கொண்ட உட்குடைவுப் பள்ளம்.”

இது இயற்கையாக நிகழும் படிக நிகழ்வாகும். இது விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

இப் படிக குகை ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில் புல்பி என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில் உள்ளது.

இது ஓர் விலைமதிப்பற்ற உலோகத்தால் உருவாக்கப்படாத புதையலாக உள்ளது.

what is abdominal cavity?

‘Mila Garretero’ என்பவர் ஜியோட் என்பதற்கு பாறையில் படிக அல்லது கனிமப் பொருட்களைக் கொண்ட உட்குடைவுப் பள்ளம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், அவர் அப்படிக குகை “எட்டு மீட்டர் அகலம், இரண்டு மீட்டர் உயரம் மற்றும் இரண்டு மீட்டர் ஆழம் “கொண்டது எனவும்,”ஜியோட்யின் அடிப்படையில் காணும்போது, இது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்,” என்றும் கூறுகிறார்.

அதுபோன்று, புல்பியினை  மற்றொரு படிக அதிசயமான மெக்ஸிகோவில் உள்ள நைக்கா மைனுடன் சேர்த்து ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் உரைக்கிறார்.

இந்த ஜியோட் முதலில் 1873 முதல் 1969 வரை செயல்பட்ட Mina Ricaவில் உள்ள வெள்ளி சுரங்கத்தில் பணி செய்த தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் 1999ம் ஆண்டு, புவியியலாளர்கள் அதை மீண்டும் கண்டுபிடித்து, உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து செய்து கொண்டிருந்தாலும், அதன் முழு பகுதியும் ஒரு காலத்தில் நீருக்கடியில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், இப்படிகம் ஒரு காலத்தில், எரிமலை வெடிப்பின் காரணமாக வண்டல் பாறைகளினை  உடைத்து அதன் உள் சூடான திரவங்கள்  நிரப்பப்பட்டு அத் திரவங்கள் குளிர்ந்தவுடன், படிகங்கள் உருவாகத் தொடங்கியதுஎன்று கூறுகின்றனர்.

புல்பியில் உள்ள அந்த anhydrite (பாறைகளை உருவாக்கிய தாது) சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் காலத்தில் இருந்ததாக கூறுகின்றனர்.

இந்த சுரங்கம் மக்களின் பார்வைக்காக 2019ம் ஆண்டு,  திறக்கப்பட்டது. அங்குள்ள சில இடிபாடுகள் எல்லாம் நீக்கி, 42 மீ படிக்கட்டு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறுவப்பட்ட பின்னர்தான் அனுமதிக்கப்பட்டது.

அப்போது தான் அங்கு, சுரங்கத் தொழிலாளர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் எல்லாம் கண்டறியப்பட்டன.

இதுவரை 100,000க்கும் மேற்பட்ட மக்கள் ஜியோடை காணவந்துள்ளனர். மேலும் மக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில்  படிகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக Carretero’team அதன் வெப்பநிலை, கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஈரப்பதத்தை கவனமாக கண்காணித்து வருகிறது.

இவ்வகை படிகங்களுக்கு கார்பன் டை ஆக்ஸைடால் ஏற்படும் விளைவை விட, உண்மையில் படிகங்களுக்கு ஈரப்பதம்தான் தீங்கு விளைவிக்கிறது என்று கூறுகின்றனர் .

Also Read: Amazing Facts About Science: உலகம் தட்டையாக [flat] இருந்தால், ஒரு கப்பல் நம் பார்வையில் இருந்து “மறைய” எவ்வளவு தொலைவில் இருக்க வேண்டும்..?

“ஏனென்றால் ஓர் அடுக்கு [ஈரப்பதம்] படிகங்களில் படிந்தால், அவை அவற்றின் தன்மையை இழக்கின்றன”, இதனால் படிகங்கள் உடையும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. இத்தகைய அழகு எவ்வாறு உருவாகிறது என்று விளக்கமுடியாத அளவுக்கு இயற்கை அழகுடன் அமைந்துள்ளது, அதை சேதப்படுத்தாமல் காத்துக்கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *