How to Increase Immunity? நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் ஜூஸ்..!
How to Increase Immunity? நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் ஜூஸ்..!
நாம் காய்களையும், பழங்களையும் சாப்பிடுவதற்கு பதிலாக அவற்றைப் பயன்படுத்தி பிரெஷ் ஜூஸ் செய்து குடித்துவிடலாம், என்று எண்ணாமல், அந்த காய்கறிகளுடன் சேர்த்து, இந்த ஜூஸ்ஸையும் செய்து உங்கள் குடித்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

How to Increase Immunity?
கடைகளில் தற்போது பிரெஷ் ஜூஸ் கிடைக்கிறது. ஆனால் அவற்றில் உள்ள சத்துகள் முழுமையாக நமக்கு கிடைக்காது.
மேலும் அவை மிகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கும். நாமே தயாரித்து பருகினால் காய்களில் உள்ள முழு சத்தும் (வைட்டமின், மினெரல்ஸ், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ்) நேரடியாக கிடைக்கும்.
பழங்களை வைத்துத்தான் இதுவரை ஜூஸ் செய்திருக்கிறோம். காய்களில் ஜூஸ் செய்தால் குறைவான சக்கரையில், உங்களுக்கு நல்ல சக்தியும் கூடவே, கிடைக்கும்.
வெறும் காய்களை கொண்டு ஜூஸ் செய்வது நல்ல ருசியைத் தராது. அதோடு கொஞ்சம் பழங்களையும் சேர்த்து ஜூஸ் செய்தால், நல்ல சுவையாக இருக்கும, அதனோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Immunity booster drink-தேவையான பொருட்கள்
சரி, இப்போது காய்கறி ஜூஸ் எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
செளரி கீரை தண்டு – 2
கேள் கீரை இலைகள் – 2
ரோமைன் ஹார்ட் இலைகள் – 2
கீரை – 1 கப்
பச்சைநிற ஆப்பிள் – 1
வெள்ளரி – ½
இஞ்சி – 1 சிறிய துண்டு

செய்முறை
முதலில், மேலே குறிப்பிட அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.
பின் அதனை ஒரு வடிகட்டி மூலம் நன்றாக வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ஜூஸ் பதத்துக்கு வந்ததும் டம்ளரில் ஊற்றி ருசித்து பாருங்கள், சுவையுடன், ஊட்டச்சத்தும் சேர்ந்து கிடைக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்:
கிரீன் ஜூஸ் செய்ய சில குறிப்புகள்:
சரி, இப்போது சுவையான கிரீன் ஜூஸ் செய்ய எவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
- அதிக நீர் சத்து உள்ள காய்கள்:
ஜூஸ்ஸிற்கு அதிக நீர்ச்சத்து நிறைந்த செளரி, வெள்ளரி போன்ற காய்களைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். இது நம் உடலை அதிக நீரோட்டமாக வைக்க உதவும்.
- அடர்ந்த பச்சை நிற கீரைகள்:
கேள்(kale), ரோமைன் போன்ற பச்சைநிற கீரைகளை தேர்வு செய்ய வேண்டும்.
அதுவே உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
- பழங்கள்:
ஆப்பிள், பேரிக்காய், அன்னாச்சி போன்ற பழங்களில் ஏதாவது ஒரு பழத்தை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் காய்கறி ஜூஸ்ஸில் அதிக சக்கரை தேவையில்லை.
- சுவைக்காக:
இஞ்சி, புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்தால் உங்கள் ஜூஸ் மேலும் சுவையாக இருக்கும்.
பச்சை நிற காய்கறி ஜூஸ்ஸின் நன்மைகள்:
இந்த ஜூஸ்ஸில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் K மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
இது அனைத்து வகையான நீரிழிவினால் உண்டாகும் ஆபத்தை பெருமளவு குறைக்கிறது. அதோடு இதய நோய்,
Also Read: Symptoms of low oxygen: இரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!
உயர் இரத்த அழுத்தம் போன்ற நோயாளிக்கு உண்டாகும் அபாயத்தை குறைக்கவும் செய்கிறது.நீரிழிவு இருப்பவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
இந்த பானம் தொடர்ந்து எடுக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் இது உதவி செய்கிறது.