Food For Weight Loss: உடல்கழிவுகளை வெளியேற்றி எடையை குறைக்க உதவும் உணவுகள்..!
Food For Weight Loss: உடல்கழிவுகளை வெளியேற்றி எடையை குறைக்க உதவும் உணவுகள்..!
நம் உடல் எடை அதிகமாக இருப்பதற்கு காரணம் கொழுப்பும், சதையும் என்றே எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

Also Read: Easy Weight Loss Tips: உங்கள் தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க என்ன செய்யலாம்?
Food For Weight Loss:
இதனால் உடல் எடையை குறைக்க டயட்(Diet) போன்ற உணவுக்கட்டுப்பாடுகளை மேற்க்கொண்டு அதனால், எடையும் குறையாமல் வருத்தமடைகின்றனர் பலர்.
உடல் எடை அதிகமாவதற்கு மற்றொரு காரணம் உடலில் கழிவுகள் தேங்கி இருப்பது தான்.
உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றாமல் உடல் எடையைக் குறைக்க நினைத்தால் அது மிகக் கடினம்.
உடலில் உள்ள கழிவுகள் முழுவதும் வெளியேறுவதற்கு எந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி அறியலாம் வாருங்கள்.
எலுமிச்சை:
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்கள் நச்சுத் தன்மையை நீக்குவதில் மிக வீரியமாகச் செயலாற்றக் கூடியது.
நம் உடலில் உள்ள ஃப்ரீ – ரேடிக்கல்ஸை (free radicals) வெளியேற்ற எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது.
மேலும் இதிலுள்ள ஆல்கலைன்(alkaline) பண்புகள் உடலின் பி.எச்(pH) அளவைச் சீராக வைத்திருக்க உதவுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சை நீரை பருகினால் அது உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தும்.
அதேபோல மற்ற ஃபிரஷ்ஷான(fresh) பழங்களையும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலின் நச்சுக்களை வெளியேற்ற அவை நன்கு உதவும்.
க்ரீன் டீ:
நம் உடலின் நச்சுத்தன்மையை குறைக்க கிரீன் டீ மற்றும் மட்சா டீ(matcha tea) போன்றவை உதவுகின்றன.
Also Read: Immunity Boosting Food in Tamil : உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் தேநீர்..!
க்ரீன் டீயில் உள்ள அதிக அளவிலான ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள்(antioxidants) கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி அதன் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும்.
அதேபோல இதிலுள்ள கேடசின் என்னும் சத்து புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதோடு, இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய், எடையைக் குறைக்க என பல வழிகளில் நன்மை செய்கின்றன.
முட்டைகோஸ்:
முட்டைக்கோஸில் சல்போராபேன் என்னும் வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது.
இந்த சல்போராபேன் உடலில் உள்ள நச்சுத் தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது. கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
மேலும் குடலின் செயல்பாட்டை மேம்படுத்தி, செரிமான ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் பயனுள்ள காய்கறியாக முட்டைகோஸ் உள்ளது.
இலைவடிவ காய்கறிகள்:
இலை வடிவ காய்கறிகள் நம்முடைய உடலின் செரிமான மண்டலத்தில் குளோரோபில் அளவை அதிகரிக்கச் செய்து உடலின் நச்சுத்தன்மையைக் குறைக்க உதவுகிறது.
இதனை நாம் சமைத்தோ அல்லது சாலட், சூப் போன்ற முறையிலும் எடுத்துக் கொள்ளலாம். எவ்வகையில் எடுத்தாலும் நன்மையே.
பீட்ரூட்:
பீட்ரூட் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படும். இது நம்முடைய கல்லீரலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வேலையைச் செய்கிறது.
அதோடு மட்டுமின்றி கல்லீரல் மற்றும் பித்தப்பையில் சேர்கின்ற அதிகப்படியான பித்தத்தை அகற்ற உதவுகிறது.
எனவே காய்கறிகளின் பயன்களை அறிந்து அதை உண்டு நோயற்ற வாழ்வை பெறுங்கள்.