Psoriasis Treatment: புன்னை மரத்தில் இவ்வளவு மருத்துவ பயன்களா..!
Psoriasis Treatment: புன்னை மரத்தில் இவ்வளவு மருத்துவ பயன்களா..!
புன்னை மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்றுப் பெரியவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்துகள் பகுதியும் கொண்டுள்ளது.

Alexandrian Laurel:
புன்னை மரத்தின் அறிவியல் பெயர் calophyllum inophyllum ஆகும், இதில் calophyllum திற்கு அழகான என்றும், phyllum என்றால் இலை என்றும் பொருளாம்.
சிங்கள மொழியில் இது தொம்ப எனவும், மலையாளத்தில் புன்னாகம் எனவும் அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோரப் பகுதிகள், மியன்மார், மலேசியா, ஆத்திரேலியா, இலங்கை, கரையை அண்டிய தீவுகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது.
இது தாவரங்கள் வளர முடியாத, வறண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது.
புன்னை மரங்கள் அந்தமான் தீவுகளிலும் பெருமளவில் வளருகின்றன, தமிழ்நாட்டிலும் பெருமளவில் கடற்கரையோரப்பகுதிகளில் காணலாம்.
இதன் தோற்றம் காரணமாக, நகரப் பகுதிகளில் அழகுக்காக சாலையோரங்களில் நட்டும் வளர்க்கப்படுகின்றது.
இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும், உருண்டையான உள் ஓடு உள்ள சதைக் கனிகளையும் உடைய ஓர் பசுமையான மரம்.
What are the Uses of Tree?
சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும். இதன் பூக்கள் அழகாக இருக்கும். ஒரு கொத்தில் 4 – 15 பூக்கள் இருக்கும்.
இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும். ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும்.
“பழங்கால இலக்கியங்களில் புன்னை மரம் பற்றி சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது”.
பயன்கள் :
- புன்னை விதையிலிருந்து தமனு என்ற எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது.
- இது உணவிற்கு பயன்படுத்துவதில்லை.
இருப்பினும் இந்த எண்ணெய் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
- இந்த எண்ணெயின் மூலம் புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்பினை குறைக்கலாம்.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியினையும் கொடுக்கிறது.

Psoriasis Treatment:
- இயற்கையாகவே தோன்றும் நோய்களுக்கும், இளமையிலேயே வயதான தோற்றம் உள்ளவர்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
- தோலில் ஏற்படும் ஏரிச்சல், சுருக்கங்கள், காயங்கள் மற்றும் புண்களினால் ஏற்படும் கடுமையான வலி, போன்றவற்றை சரிசெய்வதற்கு இதன் எண்ணெய் பயன்படுகிறது.
- புன்னை மரத்தினை சிறுபடகு, கம்பங்கள், கொடிமரங்கள், கட்டுமானப் பொருள்கள், படிகள் அமைத்தல், மேஜை நாற்காலி செய்தல், வண்டிகளின் அச்சு, போன்ற மரப் பொருள்கள் செய்ய பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- மேலும் வயல்களில் வேலி அமைக்க, காற்றுத் தடுப்பனாக, புன்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
- புன்னை இலைகளை மையாக அரைத்து, நெற்றியில் பற்று போல தடவி வந்தால் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைச் சுற்றல் பாதிப்புகள் விலகும்.
- இந்த மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் கஷாயம் குடற்புண், கட்டிகள், கண்நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகின்றன.
- புன்னை எண்ணெய் உதட்டு வெடிப்புகளைத் தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
- புன்னையில் உள்ள பால் மூட்டுவலி மற்றும் சொரியாசிஸ் போன்ற நோய்களை குணப்படுத்த வல்லது.
- மேலும் நாய்களுக்கு ஏற்படும் அரிப்பு மற்றும் புண்களுக்கு புன்னை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
- விலங்குகளுக்குப் பளபளப்பையும் ரோமத்தை அழகாக்கவும் இதன் எண்ணெய்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
- புன்னை எண்ணெய் தீக்காயங்கள் மற்றும் அவற்றை ஆற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
வளர்ப்பு முறைகள் :
Also Read: Skin Cancer: திடீரென உருவாகும் மச்சம் அழகா..! ஆபத்தா..!
புன்னை மரத்தை நடவு செய்ய ஏப்ரல்-ஜுன் மாதம் ஏற்றது.
விதையை நேரடியாகவோ அல்லது நாற்று தயாரித்தோ நடவு செய்யலாம்.
விதைப்பதற்கு முன் விதையை ஒருநாள் முழுவதும் நீரில் ஊற வைத்து பின் விதைப்பது நல்லது