Skin Cancer: திடீரென உருவாகும் மச்சம் அழகா..! ஆபத்தா..!
Skin Cancer: திடீரென உருவாகும் மச்சம் அழகா..! ஆபத்தா..!
மச்சம் என்பதை பலரும் அழகு சார்ந்த விஷயமாகவே பார்க்கின்றனர்.
எல்லா மச்சங்களையும் அழகு என்று நினைத்து விட முடியாது.

Cancerous Moles:
சில வகையான மச்சங்கள் ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கும்.
எதனால் நம் உடலில் மச்சம் தோன்றுகிறது ?
பிறக்கும்போது இருக்கும் மச்சங்கள் தவிர சிலருக்கு வளர்ந்த பிறகு புதிதாக மச்சங்கள் உருவாகும்.
நமது சருமத்தில் இருக்கும் மெலனின் சுரப்பியை பொறுத்து அவை திடீரெனத் தோன்றுகிறது.
நம் உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பியானது ஒரு சில இடங்களில் மிக அதிகமாக சுரந்து, அடைப்பை ஏற்படுத்துவதால் அந்த இடங்களில் மச்சங்கள் தோன்றுகின்றன.
பெரும்பாலான மச்சங்கள் ஒருவர் வளர வளர அதுவும் வளரும்.
சிலருக்கு மச்சம் பெரிதாகி கருப்பு நிறத்தில் மருவாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
இதன் மூலம் எந்த பிரச்னையும் இருப்பதில்லை.
சில பிறந்த குழந்தைகளுக்கு கால் அல்லது கைகளில் பழுப்பு நிறத்தில் மச்சங்கள் படர்ந்து காணப்படும், ஆனால் அது அவர்கள் வளர வளர மறைந்துவிடும்.
மச்சங்கள் அனைவருக்கும் அழகானதாகவும், அதிர்ஷ்டமாகவும் அமைவது கடினம்.
முகத்தில் தோன்றும் மச்சங்கள் சிலருக்கு அழகைக் கொடுக்கும்.
சிலருக்கு விரும்பத்தகாத வகையில் அமையும்.
நம் உடலில் காணப்படும் மச்சங்கள் வழுவழுப்பாகவும், குவிந்த வடிவில் இருந்தாலோ, 3 முதல் 6 மி.மீ விட்டத்தில் இருந்தாலோ, அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் சற்றும் மாறாமல் அப்படியே இருந்தாலோ, நாம் அவற்றை ஆபத்தில்லாத மச்சங்கள் என எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், மச்சங்களில் ஏதாவது மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால் அவற்றை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

Skin Cancer:
ஆபத்தான மச்சங்கள், ‘மெலனோமா'(melanoma) என்ற சருமப் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கும்.
அதாவது, சருமத்தில் திடீரென்று மச்சம் போல தோன்றும்.
ஆண்களுக்கு நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதிகளிலும், பெண்களுக்கு கால்களின் கீழ்ப்பகுதிகளிலும் இந்த அறிகுறி காணப்படும்.
நம் உடலில் காணப்படும் மச்சத்தில் அசாதாரணமான நான்கு விஷயங்களை காண்போம்.
A (ASYMMETRY)
மச்சத்தின் ஒரு பாதியானது, மறுபாதியுடன் பொருந்தாமல் இருக்கலாம்.
B (BORDER)
மச்சத்தின் ஓரங்கள் சொரசொரப்பாகவோ கரடுமுரடாகவோ இருக்கலாம்.
C (COLOUR)
மச்சத்தின் நிறம் கறுப்பு, சிவப்பு மற்றும் பழுப்பு நிறங்களின் கலவையாக இருக்கலாம்.
D (DIAMETER)
6 மி.மீக்கும் அதிகமாக காணப்படும் , இவற்றில் சில நேரம் அரிப்பும் ரத்தக் கசிவும் ஏற்படலாம்.
இத்தகைய அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக சரும மருத்துவரை அணுகி, பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
How to Remove Mole?
ஆபத்தான மச்சம் என்று உறுதியானால் மருத்துவர் அவற்றை முறையாக மற்றும் பாதுகாப்பாக நீக்குவார்.
மச்சத்தை நீக்க முடியுமா ?
நாம் மச்சங்களை முழுமையாக நீக்கலாம்.
இவைகளை நீக்க லேஸர்(Laser) முறையைப் பயன்படுத்தலாம்.
Q switch Nd – YAG என்னும் Laser முறையில் நீக்க முடியும்.
Also Read: Genetic Diseases: மரபணு நோய்களை கண்டறிய உதவும் அவதார் படத்தின் தொழில்நுட்பம்..!
பிளாஸ்டிக் சர்ஜனிடம்(plastic surgeon) சென்று முறையாக மச்சங்களை அகற்ற வேண்டும்.
ஆனால், மச்சங்களை சரியான முறையில் நீக்கவிட்டால் அந்த இடத்தில் காயங்கள் மற்றும் அரிப்புகள் தோன்றும்.
அதிகபட்சமாக இதன் மூலம் சருமப் புற்றுநோய் வரவும் வாய்ப்புகள் உள்ளன.