Coconut Oil Uses: தேங்காய் எண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிக்கலாமா..?
Coconut Oil Uses: தேங்காய் எண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிக்கலாமா..?
தேங்காய் எண்ணெய் பெரும்பாலும் தலைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை சமையலில் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அவை என்னவென பார்ப்போம்…

Coconut Oil Uses:
தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடிப்பதன் மூலமாக, உங்களின் தொப்பையின் அளவைக் குறைக்கும். மேலும்,
தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றி விடும்.
காலையில் தேங்காய் எண்ணெயை குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.
செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.
இதில், உள்ள கெமிக்கல் பொருள், உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும்.
இது உடலில் உள்ள கலோரிகள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும்.
உடல் எடையை குறைக்க:
1-2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்துதால் தொப்பையின் அளவைக் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனெனில் தேங்காய் எண்ணெய் வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும்.
உட்கொள்ளும் முறை:
உடலின் எடைக்கு ஏற்ப தேங்காய் எண்ணெயை உட்கொள்ள வேண்டும். அதில், ஒரு நாளைக்கு 3 டேபிள் ஸ்பூன் அளவை தேங்காய் எண்ணெயை 40-59 கிலோ கொண்டவர்கள் உட்கொள்ளலாம்.ஒரு நாளைக்கு 60-80 கிலோ கொண்டவர்கள், ஒரு நாளைக்கு 4.5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை உட்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 6 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை 80 கிலோவிற்கு மேல் உள்ளவர்கள் உட்கொள்ளலாம்.
கவனத்திற்கு:
கலப்படம் மற்றும் போலி நிறைந்த பொருட்கள் மார்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. தேங்காய் எண்ணெய் வாங்கும் போது அது வைக்கப் பட்ட டேபிளைக் கவனியுங்கள். அதில் விர்ஜின் என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த எண்ணெய் எவ்வித கலப்படமும் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய் என்று அர்த்தம்.
Also Read: Aloe Vera For Face : தொலைந்து போன தோலின் அழகை திரும்ப கொடுக்கும் கற்றாழை..!
மேலும் விர்ஜின் தேங்காய் எண்ணெய் தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.