Finger joint pain treatment: கைவலியை குறைக்கும் எளிய மருத்துவம்! அறிந்து பயன்பெறுங்கள்!
Finger joint pain treatment: கைவலியை குறைக்கும் எளிய மருத்துவம்! அறிந்து பயன்பெறுங்கள்!
பொதுவாக கை வலி அதிகமாக தட்டச்சு செய்தல்(Typing), குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் மவுஸை(Mouse) அதிகமாக அழுத்துதல் போன்ற விஷயங்களை செய்பவர்களுக்கு அதிகமாக ஏற்படும்.

Finger joint pain treatment:
ஏனெனில் இந்த வேலைகளுக்கு நமது விரல்களே அதிகம் பயன்படுகின்றன.
ஆகையால், கை மற்றும் மணிக்கட்டு வலி என்பது அலுவலக வேலை செய்பவர்களுக்கு ஒரு பக்க விளைவாக உள்ளது.
இந்த வலிகளை போக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன, அவற்றை விரிவாக காணலாம்,
தட்டச்சு(Typing) செய்வதை நீங்கள் வேலையாக கொண்டிருக்கும்போது இந்த வலிகளை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஏனெனில், கைகளிலும் மணிக்கட்டுகளிலும் ஏற்படும் நீடித்த வீக்கமானது கீல்வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.
வலியை குறைப்பதற்கான வழிகள்:
பொதுவாக கணிணியில் வேலை செய்பவர்கள் எப்போதும் உட்கார்ந்து கொண்டு தங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலைப்பார்த்து கொண்டே இருப்பார்கள்.
இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறியாமல் செயல்படுகின்றனர். இவ்வாறு இருப்பது நம் உடலுக்கு தீங்கினை விளைவிக்கும்.
எனவே நாம் தட்டச்சு வேலைகளை செய்யும்போது அடிக்கடி கைகளை நீட்டுவதன் மூலமும், வேலையை இடை நிறுத்தம் செய்வதன் மூலமும் சிறு ஓய்வினை கொடுத்தால் இரத்த ஓட்டத்தில் மேம்பாடு காணப்படும்.
மேலும், உட்கார்ந்தே இருப்பதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையும் எழுந்து நடப்பது அல்லது நிற்பது நல்லது.
நாள் முழுவதும் நம் கைகளையும் மணிக்கட்டுகளையும் பயன்படுத்துவதால் அவற்றிற்கு இடைவெளி கொடுப்பது மிக முக்கியமாகும்.
வலியினை குறைக்கும் முறைகள்:
மணிக்கட்டு நீட்சி:
முதலில் நம் மணிக்கட்டை நீட்டுவது தட்டச்சு(Typing) செய்யும்போது ஏற்படும் வலியை குறைப்பதற்கான ஒரு எளிய வழியாகும்.
இம்முறையில் முதலில் கைகளை முன்னால் நீட்டியபடி வைத்துக்கொண்டு, பிறகு கைகளை உயர்த்தி தாழ்த்த வேண்டும்.
அடுத்து கை முட்டியை(fist) அழுத்தி பிடித்துக்கொண்டு கையை மேலும் கீழும் சுற்றவேண்டும்.
மணிக்கட்டுக்கு பயிற்சி அளிப்பது போல கை மற்றும் விரல்களுக்கும் பயிற்சி அளிப்பது மிக முக்கியமாகும்.
மணிக்கட்டு நீட்சி முறையானது நம் கைகளின் வலியை குறைக்க உதவியாக இருக்கும்.
மஞ்சள்:
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த இயற்கை வலி நிவாரணியாக மஞ்சள் உள்ளது.
இதை தேநீர், சாப்பாடு, அல்லது சாறு செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். வீங்கிய இடத்தில் இதை பூசுவதன் மூலம் கை வீக்கத்தை குறைக்கலாம்.
இஞ்சி:
வலி மற்றும் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தப்படும் முக்கியமான ஆயுர்வேத வேராக இஞ்சி உள்ளது.
இது கீல்வாதம் வராமல் தடுக்க உதவுகிறது, மஞ்சளை போலவே சமையலில் இஞ்சியையும் உலர்ந்த மசாலாவாக பயன்படுத்தினால் நோய்களை தடுக்க முடியும்.
தடுக்க சில வழிகள்:
நாம் வேலை பார்க்கும் போது முதுகை நேராக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இச்செயலால் நம் கைகள் மற்றும் மணிக்கட்டை நிலை நிறுத்த எளிதாக இருக்கிறது.
எனவே, கைகளை விசைப்பலகை மீது நேராக வைத்திருப்பது என்பது அவசியமான ஒன்றாகும்.
மவுஸை(mouse) மிகவும் தீவிரமாக பயன்படுத்தும் போது மவுஸ் மெத்தை பயன்படுத்தலாம்.
இது கைகளில் ஏற்படுத்தும் பாதிப்பை குறைக்கும். இல்லையெனில், கைகள் மற்றும் மணிக்கட்டுகளுக்கு வசதியாக இருக்கக்கூடிய பல வகையான தயாரிப்புகள் உள்ளன.
Also Read: What is autoimmune disease?தன்னுடல் தாக்குநோய்களை தடுக்கும் வைட்டமின் D..!
அவற்றில் தகுந்த ஒன்றை பயன்படுத்தி இவ்வகை பிரச்சனைகளில் இருந்து விடைபெறலாம்.