Manathakkali Keerai Benefits: உடலுக்கு நன்மை அளிக்கும் அற்புத மணத்தக்காளிக் கீரை..!
Manathakkali Keerai Benefits: உடலுக்கு நன்மை அளிக்கும் அற்புத மணத்தக்காளிக் கீரை..!
இயற்கை நமக்கு அளித்த சிறந்த மருத்துவ மூலிகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று, இது நம் உடலின் பல நோய்களுக்கு ஓர் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

What Is Solanum Nigrum?
இக்கீரை, மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் அழைக்கப்படுகிறது.
மேலும் இதன் பழம், வேர் போன்ற அனைத்தும் உடல் நலப்பிரச்சனைகள் பலவற்றிற்கு சிறந்த மருந்தாகும் பயன்படுகிறது.
மணத்தக்காளிக் கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் A, C மற்றும்B, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் அடங்கியுள்ளன.
மணத்தக்காளிக் கீரையில் உள்ள சாறு காய்ச்சல் மற்றும் காய்ச்சலால் உடலில் ஏற்படும் கை, கால் வலிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் மணத்தக்காளிக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் குளிர்ச்சியாகும்.
மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் தினந்தோறும் மூன்று வேளைகள் சாப்பிட்டால் சிறுநீர் பெருகும். மேலும், இக்கீரையை சாப்பிடுவதால் நீர் கோத்து நோயினால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் முடிகிறது.
தோலில் ஏற்படும் சொறி, வெயிலினால் தோன்றும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவை ஏற்பட்ட இடத்தின் மேல் மணத்தக்காளிக் கீரையின் சாற்றை பிழிந்து தடவினால் விரைவில் குணமாகும்.
Solanum Nigrum Uses:
வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.மணத்தக்காளிக் கீரை கருப்பையில் கருவலிமை பெறுவதற்கும் உதவுகிறது.
மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம்.
மணத்தக்காளிக் கீரையை உண்பதால் உடல் களைப்பு நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். மேலும், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம், கண்பார்வை தெளிவுடனும் இருக்கும்.
மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மணத்தக்காளிக் கீரை மற்றும் பழத்தினை காய வைத்துப் பொடி செய்து, அதனை காலை மற்றும் மாலையில் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு இதயமும் பலமடையும்.
மஞ்சள் காமாலையினால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இதன் பழம் வயிற்றுப் பேதிக்கு மருந்தாக பயன்படுகிறது. மணத்தக்காளிக் கீரையின் சாறு வயிற்றுப் பெருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி போன்ற நோய்களை குணமாகும் மருந்தாக பயன்படுகிறது.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இக்கீரையை பச்சையாக கூட மென்று சாப்பிடலாம், விரைவில் குணமாகும்.
Manathakkali Keerai Benefits:
இக்கீரையை சாப்பிட்டால் உடலுக்கு அழகு கூடும். காய்ச்சலுக்கும் மருந்தாகவும் இதனை உண்பர்.
மேலும், இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கும் தூக்க மாத்திரையாகவும் இது செயல்படும்.
மணத்தக்காளியின் பழத்தில் செரிமானச் சக்தியை மேம்படுத்துவதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பசியின்மையைப் போக்கவும் உதவுகிறது.
இப்பழம் உடனே கருத்தரிக்கவும், உருவான கரு வலிமை பெறவும், ஆரோக்கியமான பிரசவம் நடைபெறவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரை உண்டாக்குகிறது.
சரும சிரங்கு லிட்டிகோ மற்றும் ரிங்வார்ம் தொற்று ஏற்பட்டால் மணத்தக்காளி கீரையை மசித்து அதன் இலைச்சாற்றை பயன்படுத்தலாம்.
சரும வீக்கம் இருக்கும் இடத்தில் மணத்தக்காளி கீரையை உலர்த்தி பொடியாக்கி இலேசாக சூடுபத்தி பயன்படுத்த வேண்டும்.
வெண்படல அழற்சியில் மணத்தக்காளி இலையை நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
ஹெர்பஸ் நோய்க்கு மணத்தக்காளி இலையை நெய்யுடன் கலந்து அரைத்து பயன்படுத்தலாம்.
தலையில் உள்ள முடியின் வேரினை உறுதிப்படுத்த நல்லெண்ணெய் உடன் இந்த மணத்தக்காளி இலைகளையும் சேர்த்து பதப்படுத்தி தேய்க்கலாம்.
காதுவலி அதிகமாக இருக்கும் போது தற்காலிகமாக நிவாரணம் பெறவேண்டுமென்றால், மணத்தக்காளி இலை சாறு சிறந்தது.
கூடவே, வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் மணத்தக்காளி தடுக்கிறது.