News Tamil OnlineTamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits of Pineapple Fruit: உடல் எடையினை குறைக்க உதவுமா அன்னாசி..! இதன் நன்மைகள், தீமைகள் என்னென்ன..?

Benefits of Pineapple Fruit: உடல் எடையினை குறைக்க உதவுமா அன்னாசி..! இதன் நன்மைகள், தீமைகள் என்னென்ன..?

அன்னாசி பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது. எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய பழத்தில் இதுவும் ஒன்று.

Benefits Of Pineapple Fruit

Benefits of Pineapple Fruit:

எந்த ஒரு பழத்தையும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு நன்மையினையும், பலத்தினையும் கொடுக்கும்.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடுவதை அறிந்து கொண்டால், அது நமக்கு அழகு, நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, போன்ற அனைத்தையும் கொடுக்கும்.

அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்:

அன்னாசி பழத்தில் நம் உடலுக்கு தேவையான ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின்A, வைட்டமின்C, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் B-5, பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், இதன் நன்மைகள் என்ன என்பதை காண்போம் வாருங்கள்.

Eating Pineapple At Night To Lose Weight?

 • உடலில் பலம் ஏற்பட அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டால் போதும் உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகவும் மாறும்.
 • சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும் வாய்ப்பு உள்ளது.
 • இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும். அன்னாசிப்பழச்சாற்றினை ஒரு நாள் நான்கு வேளை ஒரு ounce வீதம் குடித்தால் இடுப்பில் ஏற்படும் வலி மறையும்.
 • தொண்டைவலி, தொண்டைப்புண் இருப்பவர்கள் அன்னாசியின் பழச்சாறினை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்து விழுங்கினால் சரியாகிவிடும்.
 • மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் போன்றவை உடலைப் பாதிக்காமல் தடுக்க இந்த பழம் மருந்தாக இருக்கும்.
 • தொப்பையினைக் குறைக்கும் சக்தியும் இந்த அன்னாசிக்கு உண்டு. அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு தேக்கரண்டி ஓமம் எடுத்து அதை பொடியாக்கி, அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
 • பின் ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றி கொதிக்கவிடவும், கொதிக்கவிட்ட பின் அந்த நீரினை ஒரு இரவு முடிந்து மறு நாள் காலையில், சாறாக குடிக்கவேண்டும்.
 • இவ்வாறு குடித்தால் தொப்பை எளிதில் குறையும்.

Pineapple For Weight Loss:

 • நோய் எதிர்ப்பு சத்தி அதிகம் உள்ள அன்னாசியினை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து நாம் தப்பிக்கலாம்.
 • கூடவே, அன்னாசி இலையின் சாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
 • ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபகசத்தி குறைவு போன்ற நோய்கள் உள்ளவர்கள், அன்னாசிச் சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 • மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசிப் பழச்சாற்றை குடிக்கலாம், நல்ல மாற்றத்தை தரும்.
 • இந்த அன்னாசி பழத்தில் விட்டமின் B உயிர்சத்து அதிக அளவில் இருப்பதால், அது உடலில் ரத்தத்தை தூய்மை படுத்தவும், உடலுக்கு பலத்தை அளிக்கவும்.
 • உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 • புரதத்தை செரிக்கக் வைக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் நிறைந்துள்ளது. இது ரத்தம் உறையாமல் இருக்க வழிசெய்கிறது.
 • தையமின் மற்றும் வைட்டமின் c போன்ற சத்துக்கள் அன்னாசியில் அதிகம் நிறைந்திருப்பதால், இவை காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து இருந்து நம்மை காக்க உதவுகின்றன.

எந்த ஒரு பொருளிலும் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதில் சிறிய அளவில் தீமையும் இருக்கத்தான் செய்யும்.

அதுபோன்று, அன்னாசியில் உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல் நலத்தை பாதிக்கும் தீமைகளும் அடங்கியுள்ளன அவற்றைப் பற்றி காணலாம் வருங்கள்.

Also Read:Papaya Leaves For Dengue: பப்பாளி இலையின் மருத்துவப்பயன்கள்; டெங்குவிற்கு எதிர்ப்புசக்தியாக இருக்குமா..?

அன்னாசி பழத்தில் உள்ள தீமைகள்:

 • அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. எனவே, இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல.
 • அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் இருப்பதால் உள்ளது. இதனை நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டால் உடலுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
 • பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்த நேரிடும்.
 • அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் பற்களில் அதிக கரை ஏற்படும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
 • அன்னாசி பழம் சாப்பிடுவதால் சிலருக்கு லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது.
 • கர்ப்பிணி பெண்கள் அன்னாசியினை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *